ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு நான் தனியாக காரை ஓட்டிக்கொண்டு போனேன். ரொறொன்ரோ நகரத்தின் ஆறு வீதிகளிலும் ஒரு கார் கிடையாது; பஸ் கிடையாது; பாதசாரி கிடையாது. முழு ரோட்டும் எனக்காகவே போட்டிருந்தது. ஒரு சந்தி வந்து அங்கே சிவப்பு விளக்கு எரிந்தது. குறுக்கே போன அகலமான சாலையும் நிசப்தமாக இருந்தது. கார், பாதசாரிகள் என ஒன்றுமே கிடையாது. சும்மா ஒரு நிமிட நேரம் விளக்கைப் பார்த்தபடி காரில்...
அற்புதம் செய்பவர்கள்
Difficult things we do immediately, miracles take a little longer. கடினமானவற்றை உடனே செய்வோம், அற்புதங்கள் சிறிது நேரம் எடுக்கும். இன்று அருணிடம் இருந்து ஒரு கடிதம் வந்து என்னை ஆச்சரியப் படுத்தியது. அந்தக் கடிதம் கீழே வருகிறது. அதற்கு முதல் முன்கதைச் சுருக்கம். எட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்தது. என் மகனுக்கு பரிசு வாங்கிக் கொடுக்கும்போது நான் ஒலிப்புத்தகங்களாக வாங்கிக் கொடுப்பேன். அவன்...
தாய்மொழி நாள்
சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் (பிப்ரவரி 2010) 85 வயது மூதாட்டி ஒருவர் அந்தமான் தீவில் இறந்துபோனார். அவர் இறந்தபோது அவர் பேசிய மொழியும் இறந்துபோனது. இன்று அதைப் பேச ஒருவரும் இல்லை. அந்த மொழியில் அப்படி என்ன சிறப்பு என்றால் அது 65,000 வருடம் தொன்மையானது. அந்தப் பெண் இறந்தபோது அத்தனை வருடங்கள் வாழ்ந்த மொழி ஒரேயடியாக அழிந்துவிட்டது. இன்று உலகத் தாய்மொழி நாள். தமிழ் உலக மொழிகளில் 15வது...
ஓ
நான் காரை நிறுத்திய இடத்துக்குப் பக்கத்தில் அந்தப் பெண்ணும் நிறுத்தினார். நான் கதவை திறந்து இறங்கிய அதே சமயம் அவரும் இறங்கினார். நான் வங்கியை நோக்கி நடக்கத் தொடங்கியதும் அவரும் நடந்தார். இருவரும் சமமான வேகத்தில் சமமான தூரத்தில் சமமான இடைவெளியில் நடந்தோம். வங்கியின் வாசலை அடைந்ததும் ரேஸ் குதிரை கடைசி மூச்சில் தலையை நீட்டுவதுபோல ஓர் அடி சட்டென்று முன்னே வைத்து கதவைத் திறந்து உள்ளே நுழைந்துவிட்டார்...
ஆற்றேன் அடியேன்
சிதம்பரத்தில் இருந்து கிழக்காகவோ தெற்காகவோ இரண்டு மணித்தியாலம் காரை ஓட்டிக்கொண்டு போனால் ஒரு சின்னக் கிராமம் வரும். அப்போது பார்த்து எனக்கு பசி பிடித்துக்கொண்டது. ஆட்களிடம் விசாரித்தால் எல்லோரும் ஒரு சிறிய கடையை காட்டினார்கள். வேறு தெரிவுகள் அங்கு கிடையாது என்பதால் அங்கே போனோம். சிரித்தபடி ஒரேயொரு மனிதர் வரவேற்றார். மதியம் மூன்று மணியாகிவிட்டபடியால் பசிக்கு இட்லி பரிமாறி எங்கள் பசியை ஆற்றினார்...
மறதி
கதவு பூட்டியிருந்தது. வீட்டுக்குள் செல்லவேண்டும் என்றால் கதவை திறக்க வேண்டும். கதவை திறக்கவேண்டும் என்றால் திறப்பை துவாரத்தினுள் நுழைக்கவேண்டும். அதற்கு முதலில் திறப்பை கண்டுபிடிக்கவேண்டும். அது மனைவியின் கைப்பையில் கிடந்தது. மனைவியின் அதே கைப்பையில் வேறு 256 பொருட்களும் வசித்தன. மனைவி கைப்பையை வாசலில் கவிழ்த்து கொட்டி திறப்பைத் தேடத் தொடங்கினார். அதற்கு குறைந்தபட்சம் பத்து நிமிடம்...
கடிதம்
அன்பு நண்பர் ஒருவரின் கடிதம் அன்புத் தோழர் அ முத்துலிங்கம் அவர்களுக்கு இன்று அதிகாலை என்னை அலைபேசியில் அழைத்த எனது நண்பர் இளம் தோழர் மோகன் (காஞ்சிபுரம்) அவர்கள் அந்த ஆள் ஒரு கொலைகாரர் தான் சந்தேகமே இல்லை என்று திடு திப்பென்று சொன்னார். அவரோடு நான் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு…..இதர எத்தனையோ விஷயங்களைப் பேசுபவன் என்பதால் மேற்படி கிரிமினல் குற்றத்தைச் செய்திருப்பவர் எந்தத்...
விகடன்
இந்த வார விகடனில் எழுத்தாளர் ராஜு முருகன் எழுதியது. இதை நண்பர் வேல்முருகன் எனக்கு பொஸ்டனில் இருந்து அனுப்பியிருக்கிறார். நன்றி. அ.முத்துலிங்கத்தின் கதைகள் எனக்குப் புலம்பெயர்வின் சிலிர்க்கச் செய்யும் ஆச்சர்யங்களை அளித்துக்கொண்டே இருக்கின்றன. தாய் நிலத்தின் தீராத நினைவுகளைச் சதா மீட்டிக் கொண்டே, இளைப்பாற ஒரு நிழல் இன்றி, சிறகுகள் வலிக்க வலிக்கப் பறந்து கொண்டே இருக்கும் ஓர் ஏதிலிப் பறவை யின்...
திட்டமிடாத கவிதை
சில வாரங்களுக்கு முன்னர் ஒரு புத்தகப் பார்சல் வந்தது. நான் அமேஸன்.கொம்மில் ஆணை கொடுத்த புத்தகங்கள்தான். அவசரமாகப் பார்சலைப் பிரித்து புத்தகங்களை எடுத்து கையிலே பிடித்து தடவி, விரித்து. முகர்ந்து பார்த்து அவற்றை படிப்பதற்கு தயாரானேன். ஆனால் வழக்கம்போல எதை முதலில் படிப்பது என்பதில் குழப்பம். ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. அது நான் ஆணை கொடுக்காத புத்தகம், எப்படியோ தவறுதலாக பொதியில்...
வெள்ளிக்கிழமை
பசிபிக் சமுத்திரத்தில் சமோவா என்ற மிகச் சின்னத் தீவு ஒன்று இருக்கிறது. சர்வதேச தேதிக் கோடு இதற்கு மிகச் சமீபமாகச் செல்கிறது. கிழக்கையும் மேற்கையும் பிரிக்கும் கோட்டில் இது அமெரிக்கா பக்கம் இருக்கிறது. இந்தக் கோட்டை தாண்டும்போது ஒரு நாள் கூடுகிறது; அல்லது குறைகிறது. அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் ஒருவர் இந்தக் கோட்டை தாண்டியதும் ஒரு முழு நாளை கடந்துவிடுவார். இந்த ஆண்டு...
Recent Comments