இந்த வருடம் டிசெம்பர் மாதம் 17ம் தேதி வந்தபோது நான் பெரிதாக எதிர்பார்த்தேன். ஒன்றுமே நடக்கவில்லை. ஒரு பத்திரிகை ஏதோ முணுமுணுத்தது. வானொலியோ தொலைக்காட்சியோ மூச்சுவிடவில்லை. வார இதழ்கள் மௌனம் சாதித்தன. 17ம் தேதி வந்தது போலவே போய்விட்டது. என்ன மகத்தான தேதி? மனித சரித்திரத்தில் நிலைத்து நிற்கவேண்டிய முக்கியமான நாள் ஏற்கனவே மறக்கடிக்கப்பட்டுவிட்டது. இந்த வருடத்தின் அதி முக்கியமான நிகழ்வு என்னவென்று...
இலவசம்
பல வருடங்களுக்கு முன்னர் ஒரு நண்பருடன் ரொறொன்ரோவின் பிரபலமான பல்கடை அங்காடி ஒன்றுக்குச் சென்றேன். நண்பர் தேடிப்போன பொருள் கிடைக்கவில்லை. உடனே திரும்ப வேண்டியதுதானே. நண்பர் விளம்பரப் பலகையில் கழிவு விலையில் விற்கப்படும் சாமான்களின் விவரங்களைப் படித்து அதனால் கவரப் பட்டார். ’இரண்டு காட்டு அரிசி பக்கெட் வாங்கினால் ஒரு கத்தரிக்கோல் இலவசம்’ என்றிருந்தது. யோசிக்காமலே இரண்டு பக்கெட்...
குறும்படம்
ஒருமுறை நான் பொஸ்டனில் இருந்தபோது வழக்கம்போல காலை குளியலறையில் முகத்தில் நுரை தடவிவிட்டு, சவரம் செய்வதற்கு முன்னர் ஒரு நிமிடம் என் முகத்தை நானே கண்ணாடியில் உற்று நோக்கினேன். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் முகத்தை திருப்பிப் பார்த்தேன். அந்தக் கணம் என் மூளையில் ஏதோ ஒன்று உதித்தது. எப்படி என்று தெரியவில்லை. அது ஒரு சின்னக் கதை. ஒன்றரைப் பக்கம்தான். அந்த நிமிடத்தில் அதை எழுதி முடித்தேன். இதிலென்ன...
இன்னும் சிறிது தூரம்தான்
இரண்டு புறநானூறுப் பாடல்கள் நினைவுக்கு வரும்படி ஒரு சம்பவம் நேற்று நடந்தது. நான் மருத்துவருடைய வரவேற்பறையில் காத்திருந்தேன். கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவ அறைகளில் காத்திருந்த மணித்தியாலங்களின் கூட்டுத்தொகை பத்து முழு நாட்களுக்கு சமமாக இருக்கும். அப்பொழுது அந்த தம்பதியினர் வந்தனர். இருவரும் முதியவர்கள். ஆணுக்கு 70 வயதுக்கு மேலே; பெண் கொஞ்சம் இளமையானவராகத் தோன்றினார். அந்த மனிதர் அவர்...
இரண்டு பெண்கள்
மங்களநாயகம் தம்பையா என்பது மிகவும் பரிச்சயமான பெயர். பல வருடங்களுக்கு முன்னரே இவர் எழுதிய ‘நொறுங்கிய இருதயம்’நாவல் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். ஓர் இலங்கைப் பெண் எழுதிய முதல் தமிழ் நாவல். இந்தியாவில் அ.மாதவையா ‘பத்மாவதி சரித்திரம்’ எழுதி 16 வருடங்களின் பின்னர் மங்களநாயகம் தன் நாவலை எழுதி வெளியிட்டார். இந்த நாவலை நான் பலமுறை படிக்கத் திட்டமிட்டு தோற்றிருந்தேன். இதை...
பெயர் சூட்ட வேண்டாம்
பெயர் சூட்ட வேண்டாம். அ.முத்துலிங்கம் 18 May 2011 President Amnesty International 1, Easton Street, London, WC1X0DW U.K மேன்மை தங்கிய ஐயா, என்னுடைய பெயர் விசாலாட்சி கனகரத்தினம். என் விலாசத்தை எழுத முடியாது ஏனென்றால் கடந்த ஐந்து வருடங்களில் நான் ஏழு தரம் இடம் மாறிவிட்டேன். நான் கடைசியாக தங்கிய இடம் முள்ளிவாய்க்கால். என் கணவர் குண்டு பட்டு இறந்த பிறகு நானும் மகனும் பிளாஸ்டிக் கூரை போட்ட ஒரு...
என்ன ஊர் இது?
நாட்குறிப்பு எழுதும் பழக்கம் என்னிடம் இல்லை. என்றாலும் ஒவ்வொரு வருடம் பிறந்ததும் முதலில் வாங்குவது நாட்குறிப்பு புத்தகம்தான். அதில் முதல் மூன்று நாட்களும் தவறாமல் ஏதாவது எழுதிவைப்பேன். அத்துடன் அந்த வருடத்திற்கு எழுதியவை போதும் என்ற நினைப்பு வந்துவிடும். மீதி பக்கங்கள் எழுதாமல் வெறுமையாக இருக்கும். ஒருநாள் பழைய டயரிகளை எடுத்துப் புரட்டிக்கொண்டு வந்தபோது ஒரு கவிதை கண்ணில் பட்டது. நான் எழுதியது...
நான் உதவமுடியாது
ஒவ்வொரு முறையும் பொஸ்டனுக்கு போகும்போது இப்படித்தான் ஏதாவது ஒன்று நடந்துவிடுகிறது. இம்முறை கம்புயூட்டர் பழுதாகிவிட்டது; ஆகவே எழுத முடியவில்லை. மின்பதில்கள் போட வேண்டிய அவசியமும் இல்லை. நல்லகாலமாக வாசிப்பதற்கு நிறைய புத்தகங்கள் இருந்தன. அவற்றை இரவு பகலாக தொடர்ந்து வாசித்தேன். அதனால் கண்களுக்கு நிறைய வேலை கொடுத்தேன் என நினைக்கிறேன். அதுதான் காரணமோ என்னவோ என் இடது கண்ணில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது...
மாம்பழம்
அந்த வருடம் எங்கள் வீட்டு மாமரத்தில் காய்கள் எக்கச்சக்கமாக காய்த்து தொங்கின. ஐயாவும், அம்மாவும் தங்கள் வாழ்நாளில் மரங்கள் அப்படி காய்த்து கொட்டியதை கண்ணால் கண்டதில்லை என்று சொன்னார்கள். எங்கள் வளவில் பலவிதமான மாமரங்கள் நின்றன. இப்பொழுதுபோல அப்போதெல்லாம் ஒட்டுமாங்கன்றுகள் கிடையாது. மரங்களின் பெயர்களோ புதுவகையாக இருக்கும். ’ஆராய்ச்சி’ என்று ஒரு மாமரம். அதன் காய்கள் பனங்காய்...
கையெழுத்து
இன்று, 2 ஜூலை 2011, ஏர்னெஸ்ட் ஹெமிங்வே இறந்து 50 ஆண்டுகள் கழிந்துவிட்டன. உலகத்தின் பல பாகங்களிலும் இருந்து உலகப் பிரபலமான இந்த அமெரிக்க எழுத்தாளரை பல எழுத்தாளர்களும் வாசகர்களும் நினைவுகூர்வார்கள். ஹெமிங்வே அவருடைய கடைசிக் காலங்களில் அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் கெச்சம் என்ற சிறு நகரத்தில் வாழ்ந்தார். ஒருநாள் அதிகாலை அவருடைய துப்பாக்கியுடன் ஒருவித காரணமும் இன்றி அவர் நின்றதைக் கண்ட...
Recent Comments