என் வீட்டில் ஒரு சின்ன தொலைக்காட்சி பெட்டி இருந்தது. புதுப்புது விதமான எத்தனையோ பெட்டிகள் சந்தையில் வந்து போய்விட்டன. அகலமானது, சதுரமானது, அதி துல்யமானது, பிளாஸ்மா, சுவரில் கொழுவுவது இப்படி பல. ஆனால் என் வீட்டின் ஒரு மூலையில் இருந்து பல வருடங்களாக தன் காரியத்தை சரியாகச் செய்தது இந்த தொலைக்காட்சி பெட்டி. ஒரு ஐந்து வயதுக் குழந்தை டிவியின் முன்னால் நின்றால் அது முழுவதுமாக மறைந்துவிடும். அவ்வளவு...
தீயோர் உலகம்
நான்இன்றுபொஸ்டனில் ஒருவிஞ்ஞானியைசந்தித்தேன். ரகஸ்யமான ஆராய்ச்சிஒன்றில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவருடையஆய்வுநிறுவனம் பலபாதுகாப்புஅடுக்குகளைக்கொண்டது என்றும்,அங்கே வேலைசெய்யும்விஞ்ஞானிகளைத்தவிரவேறுயாரும் உள்ளே நுழையமுடியாது என்றும் அவர் கூறினார். நிறுவனத்தின்தலைவர்கூடஉள்ளேசெல்லமாட்டார். 30 உயர்தரவிஞ்ஞானிகளுக்குமட்டும்தான்அனுமதி உண்டு. ...
மீதூண் விரும்பேல்
அனுஷ்யா என்பவர் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அது முக்கியமான, பயனுள்ள கடிதம் என்பதால் அதை மொழிபெயர்த்து சுருக்கி கீழே கொடுத்திருக்கிறேன். ‘ஜேர்மனி வளர்ந்த நாடு, பொருளாதாரத்தில் மிகவும் வலுவான நாடு என்பது தெரிந்தது. அப்படியான நாட்டில் மக்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள் என்றுதான் நினைக்கிறோம். நான் கற்பதற்காக அங்கே போயிருந்தபோது அந்த எண்ணத்தை மாற்ற வேண்டி நேர்ந்தது...
சலவை
வாரத்தில் இரண்டு தடவை நான் அங்கு செல்வேன். இடத்தின் பெயர் மேஃபிளவர் உலர் சலவைக்கூடம். என்னுடைய ஊத்தை உடுப்புகளைக் கொடுத்துவிட்டு சலவை செய்த துணிகளை மீட்டுப் போவதுதான் வேலை. அன்றும் அப்படித்தான் சென்றேன். நான் அணுகியதும் காத்திருந்த கறுப்புக் கதவு காட்டு மிருகம்போல ஆவென்று வாய் பிளந்து என்னை உள்ளே இழுத்துக்கொண்டது. வெளியே இருந்து என்னோடு கூட வந்த குளிர் காற்றும் உள்ளேயிருந்த சூடான காற்றும்...
எழுத்து மேசை
மே 30ம் தேதி, சனிக்கிழமை. சூரியன் எறித்துக்கொண்டிருந்த நடுப்பகல் நேரம். நான் வசித்த மார்க்கம் நகரில் எங்கள் வீட்டைச் சுற்றி ஓடிய நாலு வீதிகளிலும் garage sale என்ற அறிவிப்பு பல இடங்களிலும் காணப்பட்டது. இப்படியான விற்பனையின் போது பழைய நல்ல புத்தகங்கள் அகப்படுவதுண்டு. நான் ஒவ்வொரு வீடாகச் சென்று அங்கே பரப்பி வைத்திருக்கும் சாமான்களைப் பார்வையிட்டேன். புத்தகம் அகப்படவில்லை ஆனால் ஒரு...
சர்வதேச புக்கர் பரிசு
அலிஸ் மன்றோவுக்கு சர்வதேச புக்கர் பரிசு கிடைத்திருக்கிறது.பரிசுத் தொகை 100,000 டொலர்கள் ( 60,000 பவுண்டுகள்). இவர் கனடிய எழுத்தாளர். மூன்று கனடா ஆளுநர் பரிசுகளும், இரண்டு கில்லர் பரிசுகளும் வேறு பல பரிசுகளும் பெற்றவர். வழக்கமாக புக்கர் பரிசுகள் பொதுநல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படும். ஆனால் சர்வதேச புக்கர் பரிசை உலகத்தில் புனைவு இலக்கியம் படைக்கும் எந்த நாட்டு எழுத்தாளரும்...
வெடிகுண்டு நாய்
இந்தச் செய்தியை நான் சமீபத்தில் படித்தேன். அதை எனக்குத் தோன்றியபடி கீழே தருகிறேன். என்னுடைய மகன் வசிக்கும் மாநிலத்தின் பெயர் மொன்ரானா. அமெரிக்காவில் அதிகம் கவனிக்கப்படாத மாநிலம் இது. ஆனால் இங்கே இயற்கை காட்சிகள் கொட்டிக் கிடக்கும். மலைகள், காடுகள், ஆறுகள் நிறைந்த பிரதேசம். அபூர்வமான பறவைகளும், விலங்குகளும் வன காப்பகங்களும் உள்ளன. பூச்சி வீசி மீன்பிடிப்பதற்கும், வனவிலங்கு...
கம்புயூட்டரின் வேகம்
சில வேளைகளில் எதிர்பாராமல் எனக்கு பெரிய அதிர்ஷ்டம் அடிப்பதுண்டு. இந்த வருட பனிக்கால ஆரம்பத்தில் வீட்டை சூடாக வைத்திருக்க தேவையான உலைக்கலன் சரியாக வேலை செய்கிறதா என்பதை பரிசீலிப்பதற்காக வழக்கம்போல அதன் பராமரிப்பாளரை அழைத்தேன். அதிசயமாக அவர் அழைத்த அன்றே வந்தார். உலைக்கலனின் கீழே அதை வணங்குவதற்கு வந்தவர்போல படுத்திருந்தபடியே வேலை செய்தார். பின்னர் மல்லாக்காகப் படுத்து ஒவ்வொரு...
யானை வாழும் காடு
ரொறொன்ரோவில் இப்படியான ஒரு போஸ்டரை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை. ஆகவே நின்று வாசித்தேன். அங்காடித்தெரு திரைப்படத்தின் போஸ்டர். இயக்கம் வசந்தபாலன் என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தது. அதே அளவு எழுத்தில் உரையாடல் ஜெயமோகன் என்றும் இருந்தது. வசனம் இன்னார் என்று சிலவேளைகளில் போடுவதுண்டு ஆனால் உரையாடலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது. மனைவியிடம் அங்காடித்தெரு சினிமாவை தியேட்டரில் போய்...
எதற்காக வந்தீர்கள்?
என்னுடைய கணக்குப்படி அமெரிக்காவுக்கு நான் கடந்த பல வருடங்களில் குறைந்த 40 – 50 தடவைகள் பயணம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையும் குடிவரவில் கேள்விகள் காத்திருக்கும். அமெரிக்காவை பாதுகாப்பாக வைப்பதுதான் அவர்கள் நோக்கம். அதுவும் 911க்கு பிறகு கெடுபிடி அதிகமானது. பாம்பு வசிக்கும் புற்றுப்போல பத்திரமான ஊர் என்று புறநானூறு சொல்லும். அப்படி நாட்டை பத்திரமாக பாதுகாப்பதுதான் அவர்கள் வேலை. எதற்காக...
Recent Comments