ஐந்தாம் வகுப்புக்குள் நுழைந்து மாணவர்களிடம் யார் கிரஹாம் பெல் என்று கேட்டால் உடனே பதில் சொல்வார்கள். அவர்தான் டெலிபோனை கண்டுபிடித்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். மார்டி கூப்பர் யார் என்று கேட்டால் ஒருவருக்குமே தெரியாது. அவர்தான் செல்பேசியை கண்டுபிடித்தார். 1973ல் மோட்டாரோலா கம்பனி செய்த முதல் செல்பேசி நாலரை றாத்தல் எடையிருந்தது. செலவு பத்து லட்சம் டொலர். 1983ல் ஒரு செல்பேசியின்...
நிலநடுக்க நிபுணர்
பாக்கியராஜின் ஒரு திரைப்படத்தில் வாத்தியார் கேட்பார். 'ஏண்டா லேட்டு?' 'அதான் லேட்டாயிடுத்து சார்.' 'அதைத்தான் கேட்கிறேன், ஏன் லேட்டு?' 'லேட்டாயிடுத்து சார்.' 'சரி, போய் உட்காரு.' மருத்துவர் என்னைப்பார்த்து ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும் என்று சொன்னார். 'ஏன் ரத்தப் பரிசோதனை?' 'பரிசோதனை செய்யத்தான்.' 'அதான் ஏன்?'...
பொய் பேசாத மகள்
ரொறொன்ரோ தமிழ் மாணவ மாணவிகள் தங்கள் பல்கலைக் கழகங்களை வீட்டிலிருந்து தூரமாகத் தெரிவு செய்கிறார்கள். வீட்டுக்கு கிட்ட நல்ல பல்கலைக் கழகம் இருந்தாலும் தூரமாய் இருக்கும் பல்கலைக் கழகங்கள்தான் அவர்களுக்கு பிடிக்கும். அப்போது பெற்றோர் கண்காணிப்பும் கண்டிப்பும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கலாம். ஒரு சின்ன அறையை வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்கி படிப்பதற்கு விரும்புவார்கள். மாதத்தில் ஒருதடவை வந்து...
சன்மானம் எவ்வளவு?
இப்பொழுதுதான் பனிக்காலம் முடிவுக்கு வந்தது. அதற்கிடையில் கோடைகாலம் வந்துவிட்டதுபோல வீடு சூடு பிடிக்கத் தொடங்கியது. வெப்பம் ஒருநாள் 29 டிகிரி செண்டிகிரேட் காட்டியது. சரி, ஏசியை போடவேண்டியதுதான் என்று நினைத்து சுவிட்சை போட்டேன். ஏசி வேலை செய்யவில்லை. திரும்பவும் சுவிட்சை போட்டேன். நான் சுவிட்ச் போட்ட விசயத்தையே அது கண்டுகொள்ளவில்லை. ஐந்து மாதமாக ஓய்வெடுத்ததோ என்னவோ அது மீண்டும் உயிர்கொள்ள மறுத்தது...
சொன்னதை திரும்பச் சொல்லு
அன்புள்ள ஆசிரியருக்கு, எனக்கு 27 வயது. என் காதலிக்கு 24 வயது. நாங்கள் இருவரும் 13 வருடங்களாகக் காதலிக்கிறோம். மாலதி, அதுதான் என் காதலி, தன்னுடைய 11வது வயதிலேயே என்னைக் காதலிக்கத் தொடங்கிவிட்டாள் என்பதை கணிதம் தெரிந்த நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள். அதாவது அவள் காதலித்த வருடங்கள் காதலிக்காமல் வாழ்ந்த வருடங்களிலும் பார்க்க அதிகம். மாலதி தோலங்கிகள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில்...
வணங்குவதற்கு ஒரு மண்
புறநானூறில் ஒரு பாடல் உள்ளது. குறுங்கோழியூர் கிழார் சேரமானைப் பார்த்து பாடியது. 'உன்னுடைய மண்ணை கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமே உண்ணுவர். எதிரிகள் உண்ண முடியாது.' பழந்தமிழர் சொந்த மண்ணை மாற்றான் அபகரிக்காமல் பாதுகாப்பதற்காகப் போர்புரிந்தார்கள். அதுவே ஒரு வாழ்வுமுறையாக அமைந்தது. மண்ணுக்காக போர்புரிந்து மரித்த வீரர்களுக்கு நடுகல் எழுப்பி அவர்களை வழிபடுவது தமிழர் பண்பாடாகியது...
ஐயம் தீரவில்லை
எனக்கு தெரிந்த ஒரு கல்விமான் இருந்தார். தீவிரமான இடதுசாரிக் கொள்கை உடையவர். இவருடைய பையன் ஒரு பெண்ணைக் காதலித்தான். ஒரு வித மறுப்பும் தெரிவிக்காமல் அவர் பஞ்சாங்கத்தில் நல்லநாள் பார்த்து அவர்கள் திருமணத்தை நடத்திவைத்தார். அது ஒரு கலப்புத் திருமணம். கல்விமானைப் பற்றி அவர் நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடியது. அவர் நல்ல பேச்சாளர். அடிக்கடி கூட்டங்களில் கலந்துகொண்டு...
இரண்டுதான்
அந்தப் பெண் தொலைபேசியில் அழைத்து உதவி கேட்டபோது நான் யோசித்திருக்கவேண்டும். யோசிக்கவில்லை. அடுத்தநாள் காலை வந்து தன்னை சந்திக்க முடியுமா என்று கேட்டார். சரி என்றேன். என்ன நேரம் என்று கேட்க எட்டு மணி என்றார். விலாசம் தரவில்லை. சிறிது நேரத்தில் தானே அழைத்து அதை தருவதாகச் சொன்னார். சம்மதித்தேன். இரவு படுக்கைக்கு செல்லும் நேரமாகிவிட்டது, தொலைபேசி வரவில்லை. நானே அழைத்துக் கேட்டேன். அவர்...
கடிதம்
பயம் பிடித்துவிட்டது. முதல் கடிதம் நண்பர் யோகி தம்பிராசாவிடம் இருந்து வந்தது. இவர் தமிழ் படிப்பதே இல்லை. இரண்டாவது கடிதம் மணி வேலுப்பிள்ளை. இவர் நுட்பமாகப் படிப்பவர். நேற்று பாரதி மணி எழுதினார். இவருக்கு நேரமே இல்லை. எப்படி என்னுடைய பக்கத்துக்கு வந்து படிக்கிறார். இன்று பா.ராகவன் எழுதியிருக்கிறார். மாட்டிவிட்டோமோ என்று யோசிக்கிறேன். நான் ஒரு பயிற்சிக்காகத்தான் எழுதுகிறேன். எனக்கு...
ஒன்றைத் தொடு
மகாபாரதத்தில் நச்சுப்பொய்கை ஒன்று வரும். பஞ்சபாண்டவர்கள் தண்ணீர் குடிக்க வரும்போது அந்த பொய்கையை காக்கும் யட்சன் கேள்விகள் கேட்பான். அதற்கு தருமர் புத்திசாலித்தனமான பதில்கள் சொல்லி தண்ணீர் குடிப்பதற்கு அனுமதி பெற்றுவிடுவார். அப்படி யாரும் இப்பொழுது கேள்விகள் கேட்பது இல்லை. என்னிடம் யாராவது உலகத்தில் அழகானது என்ன என்று கேள்வி கேட்டால் சொல்வதற்கு தயாராக ஒரு பதில் வைத்திருக்கிறேன்...
Recent Comments