முதல் சம்பளம் அ.முத்துலிங்கம் வாழ்நாள் ஆசை என்று ஒவ்வொருவருக்கும் ஒன்று இருக்கும். என்னுடைய ஆசை கனடாவில் ஒரு நாளாவது வேலை செய்வது. வேலை என்றால் தொண்டு வேலை அல்ல; அது நிறையச் செய்துகொண்டிருக்கிறேன். சம்பளத்துக்கு வேலை. என்ன வேலை என்றாலும் பரவாயில்லை. தோட்ட வேலை. சுப்பர் மார்க்கெட்டில் வண்டில் தள்ளும் வேலை. உணவகத்தில் கோப்பை எடுக்கும் அல்லது கழுவும் வேலை. மூளை உபயோகிக்கும் வேலை மட்டும் வேண்டாம்...
இரண்டு டொலர்
இரண்டு டொலர் அ.முத்துலிங்கம் வரிசை தொடங்கிய இடமும் முடிந்த இடமும் ஒன்று. நம்பர் 498 பஸ்சுக்கு நான் மட்டுமே தனியாக காத்து நின்றேன். சாம்பல் நிறப் பகல். தற்காலிகமாக நான் தங்கியிருந்த இடம் மோசமானது. பஸ் வுட்வார்ட் அவென்யூ வழியாகப் போகும்போது ஏமாற்றுக்காரப் பேர்வழிகள் எல்லாம் ஏறுவார்கள், இறங்குவார்கள். அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? கோப்பை கழுவும் வேலையிலும் பார்க்க உயர்ந்த வேலை எனக்கு...
இப்பொழுது நாங்கள் ஐவர்
இப்பொழுது நாங்கள் ஐவர் அ.முத்துலிங்கம் டேவிட் செடாரிஸ் என்ற அமெரிக்க எழுத்தாளரை பல தடவை சந்தித்திருக்கிறேன். அவர் பற்றி எழுதியும் இருக்கிறேன். அவருடைய புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக விற்றுக்கொண்டிருக்கிறது. அது வேறு ஒன்றும் இல்லை. அவருடைய டைரிக் குறிப்புகள்தான். அவர் எழுதியவற்றை ஒரு தொகுப்பாக இப்பொழுது வெளியிட்டிருக்கிறார்கள். இந்த புத்தகத்தின் பெயர் Theft by Finding. தமிழில்...
கோப்பிக் கடவுள்
கோப்பிக் கடவுள் அ.முத்துலிங்கம் சில வாரங்களுக்கு முன் ஸ்டார்பக்ஸ் கோப்பிக் கடையில் இரண்டு கறுப்பின வாடிக்கையாளர்கள் போலீசாரினால் கைது செய்யப்பட்டனர். இது நடந்தது அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஃபிலெடெல்ஃபியாவில். இந்த விவகாரம் நொடியில் ஆர்ப்பாட்டமாகி கறுப்பின மக்கள் ஒன்று திரண்டு போலீசாரின் இந்த அட்டூழியத்தை எதிர்த்து புரட்சி செய்தனர். ஸ்டார்க்பக்ஸ் நிர்வாகம் அநீதிக்கு பொறுப்பேற்று இனிமேல்...
மோசமான விடைபெறுதல்
மோசமான விடைபெறுதல் லாரி டேவிட் [சமீபத்தில் இந்தக் குறிப்பை ஆங்கிலத்தில் படித்தேன். மொழிபெயர்க்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் இது நேரடியான வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு அல்ல. தழுவல் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். எழுத்து எழுத்து என்று சொல்கிறோமே. இதுதான் எழுத்து. இலக்கியம் என்றும் சொல்லலாம். – அ.முத்துலிங்கம் ] 1942ம் ஆண்டு, ஜூன் 25. நான் போருக்குப் புறப்பட்ட நாள். உயர்நிலை...
எக்ஸ் தந்த நேர்காணல்
எக்ஸ் தந்த நேர்காணல் அ.முத்துலிங்கம் சினிமா என்று வரும்போது நடிகர் நடிகைகளையே எல்லோரும் சந்திக்க விரும்புவார்கள். அடுத்து இயக்குநர். அதற்கும் அடுத்தபடியாக இசையமைப்பாளர். பின்னர் பாடகர் இப்படிப் போகும். நான் பார்க்க விரும்புவது தயாரிப்பாளர்களைத்தான். அவர்கள்மேல் நெடுங்காலமாக எனக்கு இருக்கும் ஈர்ப்பை வர்ணிக்கமுடியாது. அதைப்பற்றி விளக்கவும் இயலாது. அவர்கள் எதற்காக படம் தயாரிக்கிறார்கள்? பணமா அல்லது...
ஐயாயிரம் வருடத்துக் கதை
ஐயாயிரம் வருடத்துக் கதை அ.முத்துலிங்கம் சிவகாமியின் சபதம் நாவலை கல்கி பன்னிரெண்டு வருடங்களாக தொடர்ந்து பத்திரிகையில் எழுதினார். பின்னர் அது நாவலாகவும் வந்தது. அதன் கதைச் சுருக்கத்தை அரைப் பக்கத்தில் எழுதிவிடமுடியும். தமிழ்மகன் எழுதிய ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவல் 182 பக்கங்கள்தான். அதன் கதைச் சுருக்கத்தை எழுதவே முடியாது. ஏனென்றால் நாவல்தான் சுருக்கம். ஆயிரம் பக்கங்கள் வரக்கூடிய...
சந்திப்போம்
சந்திப்போம் அ.முத்துலிங்கம் நான் செழியனை முதன்முதலில் சந்தித்தது 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் நடந்த ஒரு விழாவில். என்னை ’அண்ணை’ என்று அழைத்தார். கூச்சமாக இருந்தது. நீண்ட காலமாக என்னை அப்படி ஒருவரும் அழைத்தது கிடையாது. அவர் குரல் கனிவாகவும், குனிந்து கிட்டக் கேட்கவேண்டும் என்பதுபோல மிருதுவாகவும் இருந்தது. உடனேயே ஓர் அந்நியோன்யம் எங்களுக்கிடையில் உண்டாகிவிட்டது. அந்த முதல் சந்திப்பே என்னை...
ஊபர்
ஊபர் அ.முத்துலிங்கம் சிலருக்கு எங்கே போனாலும் ஒரு பிரச்சினை வரும். சிலர் பிரச்சினையை தங்களுடன் எடுத்துக்கொண்டு செல்வார்கள். நான் இரண்டாவது வகை. எங்கே போனாலும் என் கைப்பைபோல பிரச்சினையும் வந்துவிடுகிறது. இப்பொழுது பொஸ்டனுக்குப் போனபோதும் இப்படி நடந்தது. ஒருநாள் காலை நண்பரிடமிருந்து அழைப்பு ஒன்று வந்தது. ’ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திருக்கிறோம். வரமுடியுமா?’ வழக்கம்போல சரி என்று சொல்லிவிட்டு...
அடுத்த ஞாயிறு
அடுத்த ஞாயிறு அ.முத்துலிங்கம் வைத்திலிங்கம் சமையல்கட்டுக்குள் நுழைந்தார். தையல்நாயகி திடுக்கிட்டுப்போய் எழுந்து நின்றார். அவர் கணவன் சமையல்கட்டுக்குள் வருவதே கிடையாது. மணமுடித்த கடந்த 15 வருடங்களில் இது இரண்டாவது முறையாக இருக்கலாம். தையல்நாயகிக்கு முன்னால் பெரிய கடகத்தில் மாங்காய்கள் பெரிசும் சிறிதுமாக பல அளவுகளில் கிடந்தன. அவற்றை ஊறுகாய்க்காக வெட்டிக்கொண்டிருந்தார். முதல் நாள்...
Recent Comments