நாடுதான் மாறியது அ.முத்துலிங்கம் கனடாவின் 150 வது பிறந்த நாள் ஜூலை மாதம் கொண்டாடப்பட்டது. இது மறக்கமுடியாத மாதம். எனக்கு அதிர்ச்சி தந்த மாதம் என்றும் சொல்லலாம். அதற்கு மூன்று காரணங்கள். கனடாவின் ஒன்ராறியோ மாநில அமைச்சகத்திலிருந்து எனக்கு கடிதம் வந்திருந்தது. முதலாவது அதிர்ச்சி, அந்தக் கடிதத்தின் வாசகம். பன்மைக் கலாச்சார சமுதாய மேன்மைக்காக நிதி வழங்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பியுங்கள். இரண்டாவது...
எழுத்தாளரும் புகைப்படமும்
எழுத்தாளரும் புகைப்படமும் அ.முத்துலிங்கம் ஏதாவது பத்திரிகையிலிருந்து புகைப்படம் கேட்டு எழுதினால் உடனேயே சிக்கல் தொடங்கிவிடும். சில மாதங்களுக்கு முன்னர் இப்படி ஒரு பத்திரிகை கேட்டதும் நான் என்னிடம் இருந்த படம் ஒன்றை அனுப்பி வைத்தேன். அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. வேறு படம் இருக்கிறதா என்று எழுதிக் கேட்டார்கள். இன்னும் சில படங்கலைத் தேடி எடுத்து அனுப்பினேன். மறுபடியும் ‘கனதி...
நீண்ட பயணம்
நீண்ட பயணம் மொகமட் நசீகு அலி மொழிபெயர்ப்பு அ.முத்துலிங்கம் எட்டு வருடங்களாக இதுதான் அமெரிக்காவில் என்னுடைய கடைசி மாதம் என எண்ணியபடியே வாழ்ந்தேன். ஆனால் சில தனி நபர்களின் பெருந்தன்மையால் எனக்கு ஏற்பட்ட இடையூறுகளை என்னால் கடக்க முடிந்தது. 1995 கோடைக்காலத்தில் நியூயோர்க் நகருக்குள் நான் நுழைந்தபோது கலைஞர்களுக்கே உரித்தான முரட்டு இலட்சியவாதம் என்னை நிறைத்திருந்தது. அப்பொழுது நான் பெனிங்டன்...
கந்தையா வாத்தியார்
கந்தையா வாத்தியார் அ.முத்துலிங்கம் மாமரத்தின் கீழ் வாத்தியார் முறுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வீட்டில் சொல்லிச் செய்வித்த ஆறு சுற்று முறுக்கு அது. அவர் அண்ணாந்து கடித்து சாப்பிட்ட படியால் அதிலிருந்து தெறித்த துகள்கள் மறுபடியும் அவர் வாய்க்குள் விழுந்தன. வாத்தியார் அதை முடித்துவிட்டு மூக்குப்பொடி போட்டார். முறுக்கு மணத்தை தள்ளிவிட்டு மூக்குப்பொடி மணம் சூழ்ந்தது. வாத்தியார் நாற்காலியில்...
இரண்டு டொலர்
இரண்டு டொலர் அ.முத்துலிங்கம் வரிசை தொடங்கிய இடமும் முடிந்த இடமும் ஒன்று. நம்பர் 498 பஸ்சுக்கு நான் மட்டுமே தனியாக காத்து நின்றேன். சாம்பல் நிறப் பகல். தற்காலிகமாக நான் தங்கியிருந்த இடம் மோசமானது. பஸ் வுட்வார்ட் அவென்யூ வழியாகப் போகும்போது ஏமாற்றுக்காரப் பேர்வழிகள் எல்லாம் ஏறுவார்கள், இறங்குவார்கள். அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? கோப்பை கழுவும் வேலையிலும் பார்க்க உயர்ந்த வேலை எனக்கு...
ஒபாமாவுக்கு வேண்டியவர்கள்
ஒபாமாவுக்கு வேண்டியவர்கள் அ.முத்துலிங்கம் அழைப்பு வந்தது. வழக்கம்போல இம்முறையும் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக்கிழமை நன்றி கூறல் என்று நாள்காட்டி சொன்னது. ஆரம்பத்தில் ஆப்பிரஹாம் லிங்கன் நன்றி கூறல் நாள் நவம்பர் கடைசி வியாழக்கிழமை என்று அறிவித்திருந்தார். சில வருடங்களில் ஐந்தாவது வியாழக்கிழமையும், சில வருடங்களில் நாலாவது வியாழக்கிழமையும் நன்றிகூறல் நாள் வந்தது...
பொன்னுருக்கு
பொன்னுருக்கு அ.முத்துலிங்கம் நெடுங்காலமாக என்னுடன் பழகிவரும் ஒருவர் இந்தியாவில் இருந்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ’பொன்னுருக்கு என்றால் என்ன...
எழுத்தாளரும் வாசகரும்
எழுத்தாளரும் வாசகரும்...
ஜேசியும் வேசியும்
ஜேசியும் வேசியும் அ.முத்துலிங்கம் கால்பந்து என்று இப்பொழுது சொல்கிறோம். நான் சிறுவனாய் இருந்தபோது உதை பந்தாட்டம் என்றே அழைத்தார்கள். அதுவே சரியான பெயர் என்று நான் நினைக்கிறேன். அந்தக் காலத்திலும் சரி இந்தக் காலத்திலும் சரி, பந்தை உதைக்கிறார்களோ இல்லையோ ஆளை உதைக்கிறார்கள். ஒருவன் ஜேசியை பிடித்து இழுத்து எதிராளியை விழுத்த நினைக்கிறான் அல்லது அவன் வேகத்தை கட்டுப்படுத்த பின்னாலே போய்...
வெள்ளைக்காரன்
வெள்ளைக்காரன் அ.முத்துலிங்கம் சிண்டரெல்லா கதையில் யார் கதாநாயகன் அல்லது நாயகி என்று கேட்டேன். நான் கேட்டது ஓர் ஆறு வயது பெண் குழந்தையிடம். அந்தக் குழந்தை பதில் சொல்ல ஒரு விநாடிகூட எடுக்கவில்லை. ’மணிக்கூடு’ என்றது. நான் திடுக்கிட்டுவிட்டேன். சிண்டரெல்லாவைச் சொல்லலாம்...
Recent Comments