பல ஆண்டுகளுக்கு முன்னர் சாப்பாடு தூக்கி என்று அறியப்பட்ட ஓர் இனம் எங்கள் மத்தியில் வாழ்ந்தது. கொழும்பு மாநகரத்தில் மாத்திரம் பத்தாயிரம் பேருக்கு மதியச் சாப்பாட்டுப் பொதிகளை இவர்கள் தினம் காவினார்கள். சமீபத்தில் நான் கொழும்புக்குப் போனபோது இவர்களைக் காணவில்லை. முன்பெல்லாம் வீதிகளில் எங்கே திரும்பினாலும் அவர்கள் நிறைந்திருப்பார்கள். சைக்கிள் பின் காரியரில் கட்டிய பாரிய பெட்டிகளில் சாப்பாட்டுத்...
காலநதியின் சகபயணிகள்
காலநதியின் சகபயணிகள் அ. முத்துலிங்கத்தின் “ உண்மை கலந்த நாட்குறிப்புகள்” நாவல் குறித்து.. ...
வரலாறு கவனிக்கவேண்டிய சந்திப்பு
சில நாட்கள் ஆரம்பத்தில் இருந்தே எல்லாம் பிழைக்கும். என்ன செய்தாலும் பிழையான ஒன்றுதான் நடக்கும். தேவிபாரதியுடனான சந்திப்பு அந்த வகையைச் சேரும். சந்திப்புக்கு நாலு பேர் சேர்ந்து போவதாகத் தீர்மானித்தோம். செல்வம், வரன், டானியல் ஜீவா மற்றும் நான். இந்த நால்வரில் தேவிபாரதியுடன் முகப் பழக்கம் கொண்டவர் செல்வம்தான். என்னுடைய பழக்கம் மின்னஞ்சலோடு நின்றது. மற்ற இருவருக்கும் அதுவும் இல்லை. தேவிபாரதி...
அபாயத்தை தேடுவோர்
நான் சிறுவனாயிருந்தபோது எங்கள் கிராமத்தில் ஒருவர் தட்டச்சு மெசினில் வேலை செய்வதை பார்த்திருக்கிறேன். அவருடைய விரல்கள் பரபரப்பாக இயங்கும். ஓங்கி உயர்ந்து விசைகளைத் தட்டும். அதிலே செருகியிருக்கும் பேப்பர் ஒவ்வொரு வரியாக உயரும். உருளை இடது பக்க எல்லையை அடைந்ததும் மறுபடியும் வலது பக்கம் தள்ளிவிட்டு வேகமாக அடிப்பார். ஒவ்வொரு எழுத்தும் பேப்பரில் விழுந்து வார்த்தையாக மாறும். சிலசமயம் எழுத்துக்கள்...
இந்தியா டுடே
நானும், விகடனும்
’எங்கள் ஊரில் ஒரு துப்பாக்கி இருந்தது.’ இப்படி ஒருசிறுகதை ஆரம்பிக்கும். அதுபோல நானும் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். எங்கள் ஊரில் ஒரு ரயில் நிலையம் இருந்தது. உலகத்தினுடனான எங்கள் தொடர்பு அதுதான். எங்கள் ஊரில் ஒரு தட்டச்சு மெசின் இருந்தது. அது எப்படித் தெரியுமென்றால் அரசாங்கத்துக்கு யாராவது கடிதம் எழுதவேண்டுமென்றால் அந்த மெசினில் தட்டச்சு செய்துதான் அனுப்பிவைப்பார்கள்...
எதிர்பாராமல் வந்தவர்
குமுதம் இதழை வாங்கியவுடன் ‘அரசு பதில்கள்’ பகுதியைத்தான் பலரும் முதலில் படிப்பார்கள். அத்தனை பிரபலமானது. பதில்கள் ‘நறுக் நறுக்’ என இருக்கும். வாசகர்கள் எதிர்பாராத ஒரு பதிலைக் கொடுப்பதில்தான் சாமர்த்தியம் இருந்தது. ஒரு முறை வாசகர் இப்படி கேள்வி கேட்டார். ’உங்களுக்கு பிடித்த தமிழ்...
விமர்சனம்
ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல் வெங்கட் சாமிநாதன் ஈழத் தமிழ்க்குரல் என்றுமே ஒரு வேதனையும் போராட்டமும் கொந்தளிக்கும் குரல்தான். என்றுமே. அதுவும் உரத்த குரலாகத்தான் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் இருப்பதும் சாத்தியம். அது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வெளிக்கிளர்வது. வேறு எப்படியாகவும் அது இருக்க முடியாது. இலங்கை சுதந்திரம் பெற்று, சேனனாயக தமிழருக்கு குடியுரிமை மறுக்கத்...
ரயில் போய்விடும்
நான் ஆப்பிரிக்காவில் வசித்த காலத்தில் அங்கேயிருந்த கிழவர் ஒருவரிடம் என்னை அழைத்துப்போனார்கள். சுருட்டையான வெள்ளைத் தலைமுடி.. கண்களும் உள்ளங்கைகளும் மஞ்சள் நிறம். அவர்தான் அந்தக் கிராமத்து கணக்காளர். கிராமத்தில் என்ன கணக்கு பிணக்கு வந்தாலும் அவர்தான் தீர்த்து வைப்பார். நான் போனபோது வாயில் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு இருந்தார். வயல் கணக்குகள், ஆடு மாடு கணக்குகள், குழந்தைகள் கணக்குகள் எல்லாம்...
யானையின் படிக்கட்டு
இம்முறையும் நான் மொன்ரானா போனபோது ஒரு சம்பவம் நடந்தது. சுப்பர்மார்க்கட்டில் சில சாமான்கள் வாங்கி அவற்றை ஓடும் பெல்ட்டில் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தேன். காசாளர் பெண்மணி படு வேகமாக ஒவ்வொரு பொருளாக எடுத்து சிவப்புக் கோட்டில் காட்டி விலையை பதிந்துகொண்டு வந்தார். அவருக்கு ஓர் ஐம்பது வயது இருக்கும். அவர் பொருளை எடுத்து பதிந்த விதம் அவரை அனுபவப் பட்டவராகக் காட்டியது. வேகமாக வேலைசெய்த அவருடைய கைகள்...
Recent Comments