Categoryகட்டுரைகள்

மனுஷ்யபுத்திரனின் கேள்வி.

சமீபத்தில் உயிர்மை பத்திரிகையின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் என்னிடம் உயிர்மை பத்திரிகைக்காக ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வி இதுதான். புலம்பெயர் எழுத்து என்பது பிரதேச அடையாளங்களைக் கடந்த எழுத்தா அல்லது அவற்றை மீளுருவாக்கம் செய்யும் எழுத்தா? என்னுடைய பதில் இது. பல வருடங்களுக்கு முன்னர் என்னை அறிமுகப்படுத்தும்போது ’புலம்பெயர்ந்த எழுத்தாளர்’ என்று ஒருவர் கூறியது ஞாபகத்துக்கு வருகிறது...

காயத்ரி சித்தார்த்

பண்புடன் என்று ஒரு மின்னிதழ்.(www.panbudan.com). இரண்டு நாள் முந்தித்தான் அதுபற்றி அறிந்துகொண்டேன். அதில் நல்ல தரமான கதைகள் கட்டுரைகள், கவிதைகள் நூல்மதிப்பீடுகள் என்று அனைத்துமே படிக்கக்கூடியதாக இருந்தன. மதிப்புமிக்க எழுத்தாளர்கள் எல்லாம் எழுதுகிறார்கள். காயத்ரி சித்தார்த் எழுதிய கட்டுரையை இரண்டு தடவை படித்தேன். அவர் எழுதியிருந்த ஸ்டைல் எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. அதை உங்களுடன்...

அடுத்து என்ன?

  இருபது வருடங்களுக்கு முன்னர் நான் பாகிஸ்தானில் வேலை செய்த காலத்தில் முதன்முதலாக செல்பேசி அங்கே அறிமுகப்படுத்தப் பட்டது. ஒன்றின் விலை ஆயிரம் டொலருக்கு மேலே. என்னிடம் ஒன்றிருந்தது. இடது கையால் தூக்க முடியாது, அத்தனை பாரம். ஆறு மணி நேரத்துக்கு ஒரு தடவை மின்னேற்ற வேண்டும். அப்படியும் பேசும்போது அடிக்கடி தொடர்பு அறுந்துவிடும். சில இடங்களில் இருந்து எவ்வளவு முயன்றாலும் தொடர்பு கிடைக்காது. அது...

இரண்டு சிறுகதைகள்

அண்டன் செக்கோவின் கண்ணாடி சிறுகதை 1600 வார்த்தைகள்தான். புதுமைப் பித்தனின் மகாமசானம் சிறுகதை 1000 வார்த்தைகள். இவை வார்த்தைகளின் கனதியாலும் வசனங்களின் அமைப்பாலும் சொன்ன விசயத்தினாலு,ம் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் படைத்த அன்று கிடைத்த அதே புதுமையுடன் இன்றைக்கும் இருக்கின்றன, சிந்திக்க வைக்கின்றன. உங்கள் பார்வையை மாற்றுகின்றன. உலகத்தின் ஆகச் சிறிய சிறுகதை என்று ஒன்றைச் சொல்வார்கள். மூன்றே மூன்று...

காலத்தை முந்தியவர்

நான் படித்த அவருடைய சிறுகதையின் பெயர் ’மைசூர் ராசா.’ அதுதான் அவர் எழுதிய முதல் சிறுகதையோ தெரியாது. ஆனால் நான் முதலில் படித்தது அதைத்தான். பத்து வருடத்திற்கு முன்னர் என்று நினைக்கிறேன். அசிரத்தையாகத்தான் படிக்கத் தொடங்கினேன். அதை எழுதியவரின் பெயரை நான் வேறு எங்கேயும் கண்டதில்லை. ஒரு காலத்தில் இலங்கையில் பருப்பு தட்டுப்பாடு இருந்தது. செல்வந்தர் வீட்டில் மட்டுமே அது அகப்படும்...

பத்மினியின் முத்தம்

நடிகை பத்மினியின் முதல் படம் ‘மணமகள்’ என்று நினைக்கிறேன். அது யாழ்ப்பாணத்து தியேட்டரில் ஓடத் தொடங்கியபோது நான் விடுதியில் படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தை மாற்ற முன்னர் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என ஆர்வம். நானும் இன்னொரு நண்பனும் இரவு களவாக விடுதி கேட் ஏறிப் பாய்ந்து சென்று இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்தோம். மணமகள் படத்தில் வந்த யௌவன பத்மினியின் அழகும் ஆட்டமும் என்னைப்...

நினைத்தபோது நீ வரவேண்டும்

அதிகாலை ஐந்து மணிக்கு டெலிபோன் அடித்தது. அழைத்தவர் ரொறொன்ரோ பல்கலைக் கழகம் ஒன்றில் கடமையாற்றும் இயற்பியல் பேராசிரியர். பெயரை செல்வேந்திரன் என்று இப்போதைக்கு வைத்துக்கொள்வோம். அவரிடம் ‘என்ன?’ என்று கேட்டேன். ’நினைத்தபோது நீ வரவேண்டும்’ பாடலைப் பாடியவர் டி. எம். சௌந்தரராஜன் என்பது தெரியும். பாடலை எழுதியவர் யார்?’ என்றார். இதனிலும் பார்க்க முக்கியமான கேள்வியை காலை ஐந்து...

இன்றைக்கு அனுப்புகிறேன்

2010ம் ஆண்டு பிறந்த சில வாரங்களில் ரொறொன்ரோவில் எல்லோரும் பேசினார்கள், பனிக்காலம் முடிந்துவிட்டது என்று. பிறகு பார்த்தால் மறுபடியும் பனி பொழிந்தது. அது முடிந்த கையோடு வெய்யில் எறித்தது. சரி பனிப் பருவம் தாண்டிவிட்டது என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் பனி போவதாக தெரியவில்லை. மறுபடியும் பெய்தது. காலநிலை அறிவிப்பாளரிடம் அது விளையாடிக்கொண்டிருந்தது. தொலைக்காட்சிப் பெண் நம்பிக்கையாகச்...

புகைப்படக்காரி

நான் நேற்று மாலை பொஸ்டன் வந்து சேர்ந்தேன். இன்று காலை பக்கத்து வீட்டில் ஆரவாரம் தொடங்கியது. அதற்கும் நான் வந்ததற்கும் ஒருவித சம்பந்தமும் இல்லையென நினைக்கிறேன்.  பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மருத்துவர். மருத்துவத் துறையில் அவருக்கு விருது ஒன்று கிடைத்திருந்தது. அவரைப் பாராட்டுவதற்கு ஆட்கள் காரில் வந்தனர்; போயினர். மருத்துவர், அவர் வீட்டுக்கு முன் இருந்த மரங்கள் நிழல்தரும் தோட்டத்தில், சாய்மணக்...

250 டொலர் லாபம்

2

நீச்சல் தடாகத்தின் வரவேற்பறையில் காத்திருப்பது என்பது ஒருவருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விசயம். இதுபோல உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை. சூரியன் முழுப்பலத்துடன் செயல்பட்டான். காலை பத்து மணி இருக்கும். சூரியனின் கிரணங்கள் தடாகத்தில் பட்டு அதை வெள்ளித் தட்டாக மாற்றியிருந்தது. சிற்றலை  எழும்பி  அடிக்கும் ஒளி கண்ணைக் கூசவைத்தது. நிறையப் பெண்கள் வந்தார்கள். நிறையக் குழந்தைகள் குவிந்தார்கள். இளம்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta