நான் அமர்ந்திருந்தேன். சுப்பர்மார்க்கெட்டின் வெளியே காணப்பட்ட பல இருக்கைகளில் ஒன்றில். அந்தப் பெண் வந்து பொத்தென்று பக்கத்து ஆசனத்தில் அமர்ந்தார். சீருடை அணிந்திருந்தார். கையிலே பேப்பர் குவளையில் கோப்பி. தான் செய்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு வந்திருந்தார். துப்புரவுப் பணிப்பெண் என்பது பார்த்தவுடன் தெரிந்தது. வயது 50 க்கு மேலே இருக்கும். கறுப்பு முடி, நீலக் கண்கள். வெண்மையான சருமம். கிழக்கு...
கூஸ்பெர்ரிஸ்
ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு முன்னர் நான் அந்தக் கதையை படித்தேன். அன்ரன் செக்கோவ் எத்தனையோ சிறுகதைகள் எழுதினார். அதில் ஒன்றுதான் அவருடைய Gooseberries. நல்ல சிறுகதை ஆனால் ஆகச் சிறந்தது என சொல்லமுடியாது. சமீபத்தில் நண்பர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து தொலைபேசியில் அழைத்து அந்தச் சிறுகதை பற்றி பேசினார். அதை இன்னொருமுறை திரும்பவும் படிக்கச் சொன்னபடியால் படிக்க நேர்ந்தது. நண்பர் சொன்னது சரி. சில...
புதிய வார்த்தை
எம். ஏ. நுஃமானிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இன்று வந்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பி காலமானார். கடந்த 25 வருடங்களாக நான் அவரைக் காணவில்லை. அவருடன் தொலைபேசியில் உரையாடி 15 வருடங்கள் ஓடிவிட்டன. கடைசிக் கடிதம் எழுதி 10 வருடம் இருக்கும். ஒரு காலத்தில் எவ்வளவு அணுக்கமாக அவருடன் இருந்தேன் என்பதை நினைத்தபோது மனம் கனத்தது. காலை ஆறு மணி இருக்கும். ஒடுக்கமான மாடிப்படிகளில் ஏறி ஓர் அறையின் கதவை...
பழுப்பு இனிப்பு
எங்கள் வீட்டு குழாயில் நீர் கொட்டியது. அதுதானே அதன் இயல்பு எனச் சிலர் நினைக்கலாம்., ஆனால் குழாயை இறுக்கிப் பூட்டிய பின்னரும் அது ஒழுகியது. மணிக்கூடு நேரத்தை அளப்பதுபோல குழாயின் வாயிலிருந்து தண்ணீர் டக் டக்கென்ற ஒலியுடன் விழுந்தது. ரொறொன்ரோவில் மஞ்சள் பக்க புத்தகத்தை வீடு வீடாக இலவசமாக தந்திருப்பார்கள். நான் அப்படிக் கிடைத்த புத்தகத்தை திறந்து குழாய் திருத்துபவரை அழைப்பதற்காக...
அம்மாவின் பெயர்
நான் அனுப்பிய செக் திரும்பி வந்தது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என் வாழ்நாளில் நான் எழுதிய ஆயிரக்கணக்கான காசோலைகளில் ஒன்றுகூட திரும்பியது கிடையாது. இது எனக்கு பெரும் அவமானமாகப் பட்டது. நண்பர் ஏன் சொன்னோம் என்பதுபோல எனக்கு முன் மியூசியத்தில் நிறுத்திவைத்த உருவம்போல நின்றார்...
ஆறாத் துயரம் – 2
புறாக் கதையை ஜோ சொன்ன அன்றைக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதியாகிவிடுவார் என்றுதான் நினைத்தி்ருந்தேன். ஆனால் மேலும் சில பரிசோதனைகள் செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். தினமும் ஜோவும் மனைவியும் பல்வேறு சோதனைகள் செய்தார்கள். அந்தச் சோதனைகளின் பெறுபேறுகள் கிடைத்ததும் இன்னும் பல புதிய சோதனைகளைச் செய்யச் சொன்னார்கள். ஒவ்வொருநாள் காலையிலும் வெளிக்கிட்டு போனால் மாலையில்தான்...
பற்கள்
பல் வேலைக்கு வசந்த காலம் சிறந்த காலம். பல் வைத்தியரின் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த தட்டையான பெண் தட்டையான சிரிப்புடன் என்னை வரவேற்றாள். என் பெயர் நோயாளிகள் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு என்னை உட்காரச் சொன்னாள். என்னுடைய முறைக்காக வழக்கம்போல காத்திருக்கவேண்டும். யாரோ படித்துவிட்டு போன அன்றைய பேப்பர் அங்கே கிடந்தது. அதைக் கையில் தூக்கிக்கொண்டு நோயாளிகள் தங்கும் அறையை நோக்கி...
மூன்று குருட்டு எலி
இரவுகள் ஒன்றிரண்டு மணித்தியாலங்களை பகலிடம் இருந்து திருடிக்கொள்ளும் பனிக்காலம். ஓர் இரவு தொலைபேசி வந்தது. நண்பர் தமிழ் மழலைப் பாடல்கள் (nursery rhymes) புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்டார். எனக்கு தெரியவில்லை. மனைவியைக் கேட்டேன். எல்லாம் தெரிந்த அவளுக்கும் தெரியவில்லை. அடுத்த நாள் நாங்கள் மூவரும் கனடாவின் கடைகளில் ஏறி இறங்கினோம். ஆங்கிலத்தில் nursery rhymes இருந்தன. ஆனால் தமிழில் அப்படி...
ஒன்றுக்கும் உதவாதவன்
எனக்குத் தெரியும், என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு தெரியும், என் நண்பர்களுக்கும் தெரியும். நான் அடிக்கடி தொலைந்து போகிறவன். வாழ்க்கையில் ஒன்றிரண்டு முறை தொலைந்து போகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதையே ஒரு தொழிலாகச் செய்வது நான்தான் என நினைக்கிறேன். ஒன்பது வயதாயிருந்தபோது கிராமத்தில் பக்கத்துக் கடைக்கு ஏதோ வாங்கப் போன நான் திரும்பவும் வீட்டுக்கு வரவில்லை. என்னைத் தேடி ஆட்கள் புறப்பட்டு ஒன்றரை...
ட்யூலிப் பூ
சிறுவயதிலே நான் முதலில் அறிந்த வெளிநாட்டுப் பூ ட்யூலிப்தான். அதன் அழகோ நிறமோ மணமோ எனக்கு ஒன்றுமே தெரியாது. எங்களுக்கு பாடப் புத்தகமாக The Black Tulip என்ற நாவலை யாரோ ஓர் ஆசிரியர் வைத்துவிட்டார். ஒரு வருடமாக ஆராய்ச்சி செய்து எப்படித்தான் இந்த நாவலை அவர் கண்டுபிடித்தாரோ தெரியாது. ஆங்கிலத்தை முழுமனதோடு வெறுக்க வைத்தது அந்தப் புத்தகம்தான். எல்லா வார்த்தைகளும் தனித்தனியாக தெரிந்த வார்தைகளாக இருக்கும்...
Recent Comments