கேர்ணல்கிட்டுவின்குரங்கு அ.முத்துலிங்கம் என்னுடையபெயர்சிவபாக்கியலட்சுமி. வயது82. எனக்கு மறதிவரவரக்கூடிக்கொண்டேபோகுது. காலையிலேமருந்துக் குளிசையைபோட்டேனாஎன்பதுகூடமறந்துபோகுது. என்மூளையில இருந்துசிலஞாபகங்கள் மறையுமுன்னர்அதைஉங்களுக்கு சொல்லவேண்டும் என்பதுதான்என்ஆசை. ...
ரயில் பெண்
ரயில் பெண் அ.முத்துலிங்கம் கனடாவில் அவனுக்கிருந்த முதல் பிரச்சினை அங்கே பனிக்காலம் ஒவ்வொரு வருடமும் வருவதுதான். அவன் மலிவான கோட்டும், மலிவான உள்ளங்கியும், மலிவான சப்பாத்தும் அணிந்திருந்தான். பாதாள ரயிலில் பிரயாணம் செய்தபோதும் அவன் உடம்பு நடுங்கியது. அவனுடைய அகதிக்கோரிக்கை வழக்கை வாதாடும் வழக்கறிஞரிடம் அவன் மூன்றாம் தடவையாகப் போகிறான். அவன் அவரிடம் எழுதிக் கொடுத்தது உண்மைக் கதை. அதை அவரால்...
கல்லறை
– அ.முத்துலிங்கம் பிரான்ஸிஸ் தேவசகாயத்துக்கு இரவு மறுபடியும் அந்தக் கனவு வந்தது. அதனாலோ என்னவோ அவர் வெகு நேரம் தூங்கிவிட்டார். அன்று எப்படியும் காலை 7.30க்குக் கிளம்பிவிட வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தார். அப்படி புறப்பட்டால்தான் பொஸ்டன் நகரத்து வீதிகளின் ஒத்துழைப்போடு 8.00 மணிக்கு அலுவலகத்துக்குப் போய்ச் சேரலாம்; 7.35க்குப் புறப்பட்டால் 8.20 மட்டும் இழுத்துவிடும்; 7.40...
சூனியக்காரியின் தங்கச்சி
’அந்தப் புதன் கிழமை என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று ஒருவரும் சாகவில்லை. ஏறக்குறைய ஆறுமாதத்தில் ஆக அதிர்ஷ்டம் கூடிய நாள் அதுதான். வழக்கமாக நாளுக்கு ஒன்று, இரண்டு, ஐந்து, பத்துப்பேர் என செத்துக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் தீர்மானித்தேன். எப்படியாவது நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று.’ அகதி ஒரு நாற்காலியில் கைப்பிடிகளில் முட்டாமல் நடுவே ஒடுங்கி...
கூந்தலழகி – விளக்கம்
பத்து கடிதத்திற்கு மேல் வந்துவிட்டது விளக்கம் கேட்டு. 1) ஒரு சிறுமியும் இரண்டு சிறுவர்களும் உதைபந்தாட்டம் விளையாடுவதுடன் கதை ஆரம்பமாகிறது. கதை சொல்லி அந்தச் சிறுமிதான். 2) மாமா கொடுத்த பூஞ்செடிகளை ஆர்வமாக வளர்க்கிறாள். 3) வளர்ந்து எஞ்சினியர் ஆகிறாள். 4) ஒரு நாள் கார் ஓட்டும்போது விபத்து ஏற்படுகிறது. கர்வமான இளைஞன். அழகான தங்கை அவன் பக்கத்தில். இளைஞனை திருமணம் செய்கிறாள். 5) ஒவ்வொரு...
கூந்தலழகி
சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற மருத்துவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. தான் பல வருடங்களுக்கு முன்னர் என்னுடைய ’கூந்தலழகி’ சிறுகதையை படித்திருந்ததாகக் கூறினார். அப்பொழுதுதான் அதை தேடிப் பார்த்தேன். ஒரு தொகுப்பிலும் அது சேர்க்கப்படவில்லை. எப்படியோ தவறிவிட்டது. என் கையிலும் பிரதியில்லை. பல மணிநேரமாக இணையத்தில் தேடி அது மீண்டும் கிடைத்துவிட்டது. இது 18 வருடங்களுக்கு முன்னர் எழுதிய...
கனகசுந்தரி
இப்படியொரு அவமானம் கனகசுந்தரிக்கு அவளுடைய 15 வயது வாழ்க்கையில் நடந்தது கிடையாது. இதற்கெல்லாம் காரணம் கறுப்பு ரீச்சர்தான். மற்றவர்கள் விமலா ரீச்சர் என்று அழைத்தாலும் அவளுக்கு அவர் கறுப்பு ரீச்சர்தான். எதற்காக தன் மீது வன்மம் பாராட்டுகிறார் என்று அவள் யோசித்திருக்கிறாள். ரீச்சர் வாய் திறக்கும்போது நாக்கு பிளந்திருக்கிறதா என்று உற்றுப் பார்த்திருக்கிறாள். கனகசுந்தரி அழகாக இருப்பாள்...
உடனே திரும்பவேண்டும்
முதலில் கடித்தது தும்பு இலையான். தும்பு இலையான் உண்மையில் கடிக்காது, முட்டைதான் இடும். என்னுடைய மகள் கைக்குழந்தை. அவள் தோள்மூட்டில் முட்டையிட்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்த முட்டைப்புழு சருமத்துக்குள் புகுந்து வளர ஆரம்பித்தது. சருமம் வீங்கி குழந்தை நிறுத்தாமல் அழுதது. நாங்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அடுத்து அவளுக்கு...
மூளையால் யோசி
இன்றைக்கு அவர்கள் வகுப்புக்கு வரும்போது ஒட்டிக்கொண்டு வந்தார்கள். சமந்தாவும் ஒலேக்கும் காதலர்கள் என்ற விசயம் எனக்கு பல நாட்களாகத் தெரியும். எப்பொழுது அவர்கள் பிரிவார்கள் என்று காத்துக்கொண்டிருந்த பெண்களில் நானும் ஒருத்தி. ஏனென்றால் ஒலேக் அத்தனை அழகாக இருப்பான். அவன் உக்கிரேய்ன் நாட்டுக்காரன். உயரமாக நீலக் கண்களுடன் முடி நெற்றியில் விழுந்து புரள புத்தகப் பையை ஒரு தோளில் தொங்கவிட்டபடி...
முனைவர் ப.சரவணன்
முனைவர் ப.சரவணனுக்கு என் நன்றி. நான் என்ன எழுதினாலும் அதைப் படித்துவிட்டு முதலில் கருத்து தெரிவிப்பது அவர்தான். அவரைச் சந்தித்ததில்லை. இதுவரை பேசியதும் இல்லை. இந்தியாடுடேயில் வந்ததை எங்கோ சென்று ஸ்கேன் செய்து எனக்கு அனுப்பியிருக்கிறார். கனடாவில் இந்தியாடுடே வாங்கமுடியாது. 300,000 தமிழர்கள் வசிக்கும் நாட்டுக்கு 50 பிரதிகள் வருகின்றன. நான் எப்பொழுது போய் கேட்டாலும் கடைக்காரர் முடிந்துவிட்டது என்று...
Recent Comments