எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.
இலக்கியப் பணிகள்
அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்
. கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது
நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இவரது நூல்கள்
புதினம்
- உண்மை கலந்த நாட்குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம் (2008)
- கடவுள் தொடங்கிய இடம்
சிறுகதை தொகுப்பு
- அக்கா (1964)
- திகடசக்கரம் (1995)
- வம்சவிருத்தி (1996)
- வடக்கு வீதி (1998)
- மகாராஜாவின் ரயில் வண்டி (2001)
- அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)
- ஒலிப்புத்தகம் – (சிறுகதைகள் தொகுப்பு – 2008)
- அமெரிக்கக்காரி (2009)
- Inauspicious Times – 2008 – (Short stories by Appadurai Muttulingam – translation by Padma Narayanan – available at Amazon.com)
- குதிரைக்காரன் – (2012)
- கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) – (2013) – காலச்சுவடு பதிப்பகம் – தொகுப்பு ஆசிரியர் க.மோகனரங்கன்
- பிள்ளை கடத்தல்காரன் (2015)
- ஆட்டுப்பால் புட்டு (2016)
- After Yesterday – Translated from Tamil – Short stories – 2017
- அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகம்- 2016
கட்டுரைத் தொகுப்பு
- அங்கே இப்ப என்ன நேரம்? (2005)
- பூமியின் பாதி வயது – உயிர்மை பதிப்பகம் (2007)
- கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு – 2006)
- வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) – காலச்சுவடு பதிப்பகம் (2006)
- அமெரிக்க உளவாளி – கிழக்கு பதிப்பகம் (2010)
- ஒன்றுக்கும் உதவாதவன் – உயிர்மை பதிப்பகம் (2011)
- தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை – நேர்காணல்கள் (2013)
- தோற்றவர் வரலாறு (2016)
- அ.முத்துலிங்கம் கட்டுரைகள் – முழுத்தொகுப்பு – இரண்டு பாகம்- 2018ல் வெளிவருகிறது
சிறுகதைகள் பட்டியல்
| சிறுகதைகள் |
ஆண்டு |
| அக்கா தொகுப்பு 1964 |
| 1. கடைசி கைங்கரியம் |
1958 |
| 2. ஊர்வலம் |
1958 |
| 3. கோடைமழை |
1959-1961 |
| 4. அழைப்பு |
1959-1961 |
| 5. ஒரு சிறுவனின் கதை |
1959-1961 |
| 6. அனுலா |
1959-1961 |
| 7. சங்கல்ப நிராகரணம் |
1959-1961 |
| 8. இருப்பிடம் |
1959-1961 |
| 9. பக்குவம் |
1959-1961 |
| 10. அக்கா |
1959-1961 |
| திகடசக்கரம் தொகுப்பு 1995 |
| 11. பார்வதி |
1994 |
| 12. குங்கிலிய கலய நாயனார் |
1994 |
| 13. பெருச்சாளி |
1994 |
| 14. மாற்றமா?தடுமாற்றமா? |
1994 |
| 15. வையன்னா கானா |
1994 |
| 16. குதம்பேயின் தந்தம் |
1994 |
| 17. செல்லரம்மான் |
1994 |
| 18. திகடசக்கரம் |
1994 |
| வம்சவிருத்தி தொகுப்பு 1996 |
| 19. துரி |
1995 |
| 20. ஒருசாதம் |
1995 |
| 21. கிரகணம் |
1995 |
| 22. விழுக்காடு |
1995 |
| 23. பீனிக்ஸ் பறவை |
1995 |
| 24. முழுவிலக்கு |
1995 |
| 25. முடிச்சு |
1995 |
| 26. ஞானம் |
1995 |
| 27. சிலம்பு செல்லப்பா |
1995 |
| 28. வம்சவிருத்தி |
1995 |
| 29. பருத்தி பூ |
1995 |
| 30. வடக்கு வீதி |
1996-1997 |
| வடக்கு வீதி தொகுப்பு 1998 |
| 31. எலுமிச்சை |
1996-1997 |
| 32. குந்தியின் தந்திரம் |
1996-1997 |
| 33. வசியம் |
1996-1997 |
| 34. பூமாதேவி |
1996-1997 |
| 35. யதேச்சை |
1996-1997 |
| 36. கம்ப்யூட்டர் |
1996-1997 |
| 37. ரி |
1996-1997 |
| 38. உடும்பு |
1996-1997 |
| 39. மனுதர்மம் |
1996-1997 |
| 40. விசா |
1996-1997 |
| 41. ஒட்டகம் |
1996-1997 |
| மகாராஜாவின் ரயில்வண்டி தொகுப்பு 2001 |
| 42. மகாராஜாவின் ரயில்வண்டி |
1999-2000 |
| 43. நாளை |
1999-2000 |
| 44. தொடக்கம் |
1999-2000 |
| 45. ஆயுள் |
1999-2000 |
| 46. விருந்தாளி |
1999-2000 |
| 47. மாற்று |
1999-2000 |
| 48. அம்மாவின் பாவாடை |
1999-2000 |
| 49. செங்கல் |
1999-2000 |
| 50. கடன் |
1999-2000 |
| 51. பூர்வீகம் |
1999-2000 |
| 52. கறுப்பு அணில் |
1999-2000 |
| 53. பட்டம் |
1999-2000 |
| 54. ஐவேசு |
1999-2000 |
| 55. எதிரி |
1999-2000 |
| 56. ஐந்தாவது கதிரை |
1999-2000 |
| 57. தில்லை அம்பல பிள்ளையார் கோயில் |
1999-2000 |
| 58. கல்லறை |
1999-2000 |
| 59. கொம்புளானா |
1999-2000 |
| 60. ராகு காலம் |
1999-2000 |
| 61. ஸ்ரோபரி ஜாம் போத்தலும் அபீஸீனியன் பூனையும் |
1999-2000 |
| பிற |
| 62. 23 சதம் |
2001 |
| 63. மொசுமொசுவென்று சடை வைத்த வெள்ளை முடி ஆடுகள் |
2001 |
| 64. அடைப்புகள் |
2001 |
| 65. போரில் தோற்றுப்போன குதிரை வீரன் |
2001 |
| 66. தாத்தா விட்டுபோன தட்டச்சு மெசின் |
2002 |
| 67. ஆப்பிரிக்காவில் அரை நாள் |
2002 |
| 68. கொழுத்தாடு பிடிப்பேன் |
2002 |
| 69. அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை |
2003 |
| 70. முதல் விருந்து முதல் பூகம்பம் முதல் மனைவி |
2003 |
| 71. காபூல் திராட்சை |
2003 |
| 72. நாற்பது வருட தாபம் |
2003 |
| 73. பூமத்திய ரேகை |
2003 |
| 74. தளுக்கு |
2003 |
| 75. எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை |
2003 |
| குதிரைக்காரன் தொகுப்பு |
2012 |
| 76. குதிரைக்காரன் |
2012 |
| 77.குற்றம் கழிக்க வேண்டும் |
2012 |
| 78.மெய்காப்பளன் |
2012 |
| 79.பாரம் |
2012 |
| 80.ஐந்து கால் மனிதன் |
2012 |
| 81.ஜகதலப்ரதாபன் |
2012 |
| 82.புளிக்கவைத்த அப்பம் |
2012 |
| 83.புது பெண்சாதி |
2012 |
| 84.22 வயது |
2012 |
| 85.எங்கள் வீட்டு நீதிவான் |
2012 |
| 86.தீர்வு |
2012 |
| 87.எல்லாம் வெல்லும் |
2012 |
| 88.மூளையால் யோசி |
2012 |
| 89.ஆச்சரியம் |
2012 |
| 90.கனகசுந்தரி |
2012 |
| அமெரிக்ககாரி தொகுப்பு |
2009 |
பரிசுகளும், விருதுகளும்
- தினகரன் சிறுகதைப் போட்டி பரிசு – 1961
- கல்கி சிறுகதைப் போட்டி பரிசு
- திகடசக்கரம் – லில்லி தேவசிகாமணிப் பரிசு – 1995
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – தமிழ்நாடு அரசாங்கம் முதல் பரிசு – 1996
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – இந்திய ஸ்டேட் வங்கி முதல் பரிசு – 1996
- ஜோதி விநாயகம் பரிசு – 1997
- வடக்கு வீதி – சிறுகதைத் தொகுப்பு – இலங்கை அரசு சாகித்தியப் பரிசு – 1999
- கனடா தமிழர் தகவல் – நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை விருது – பிப்ரவரி 2006
- திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது – 2012
- குதிரைக்காரன் – சிறுகதைத் தொகுப்பு – 2012ன் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விகடன் விருது[1]
- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராய விருது 2013
- மார்க்கம் நகரசபை இலக்கிய விருது – 2014
Latest stories
இன்று 15 ஏப்ரல் 2010, தொலைக்காட்சியில் NBC நடத்தும் Today Show வைப் பார்த்தேன். உலகத்திலே எட்டே எட்டு வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் ( Northern White Rhinos) உள்ளன. மீதம் எல்லாம் இறந்துவிட்டன. இதிலே நாலு ஏற்கனவே மிருகக்காட்சிசாலைகளில் வாழ்கின்றன. மீதி நான்கு காண்டாமிருகங்களை செக் குடியரசு மிருகக்காட்சிசாலையிலிருந்து கென்யாவுக்கு கொண்டு சென்று அங்கே திறந்த வெளிப்பரப்பில் அவற்றை...
வசந்தம் வந்துவிட்டது. கனடாவில் வசந்தம் என்று சொல்வதில்லை, துளிர்காலம் என்றுதான் கூறுவார்கள். இலைகள் கொட்டும் காலத்தை உதிர் காலம் என்பதுபோல. துளிர்காலம் என்றால் மரங்கள் மட்டுமல்ல உயிர்கள் துளிர்க்கும் காலமும். மூன்று மாதமாக நீண்ட நித்திரையிலிருந்த சில உயிர்கள் மீண்டும் நடமாட ஆரம்பிக்கும். நிலத்தில் புதைந்துகிடந்த புற்கள் மறுபடியும் மெல்ல தலை நீட்டும். தெற்கே போன பறவைகள் வடக்கு நோக்கி...
இன்று நாள் 6.40க்கு விடிந்தது. மாலை 7.58க்கு சூரியன் மறைந்து பகல் முடிவுக்கு வரும். இன்றைய நாள் ஐந்து டிகிரி சென்டிகிரேட் வெப்பத்துடன், மழை இல்லாமல் மூட்டமுடன் காணப்படும். காற்றழுத்தம் 103 ஆகவும், காற்று வேகம் வடக்கு திசையில் மணிக்கு 19 கி.மீட்டராகவும், ஈரப்பதன் 61 ஆகவும், பார்வை தூரம் 24 கி.மீட்டராகவும் இருக்கும். வயது ஒரு நாள் அதிகரிக்கும். நான் இன்று ஒரு நல்லவரை சந்திப்பேன்...
இரண்டு நாட்களுக்கு முன் என் இணையப் பக்கத்தில் 'உண்டாலம்ம இவ்வுலகம்' என்று தொடங்கும் புறநானூறு பாடல் பற்றி எழுதியிருந்தேன். நல்லவர்களால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது பாடலின் பொருள். அதிலே எனக்கு பிடித்தது 'பிறர்க்கென முயலுநர்' என்று வரும் இடம். இந்தப் பாடலை பேராசிரியர் க.கைலாசபதி தன் மேசையிலே வைத்திருப்பார். ஏனென்றால் தினமும் படித்து மனதில் இருத்தவேண்டிய பாடல் அது...
[கடவுள் ஒருநாள் எல்லா பூக்களையும் அழைத்து அவற்றிற்கு பெயர் சூட்டினார். பூக்களுக்கு மகிழ்ச்சி, தங்கள் பெயர்களை தாங்களே சொல்லி பார்த்துக்கொண்டன. ஒரேயொரு பூ நிலத்தோடு வளர்ந்த செடியில் இருந்தபடி தன் முறைக்காக காத்து நின்றது. கடவுள் கவனிக்கவில்லை. எல்லா பூக்களுக்கும் பெயர் கொடுத்தாகிவிட்டது. 'என்னை மறக்க வேண்டாம், என்னை மறக்க வேண்டாம்' என்று கீச்சுக் குரலில் இந்தப் பூ கத்தியது. கடவுள்...
மணி வேலுப்பிள்ளை ஒரு கதை சொன்னார். அவருக்கு தெரிந்தவர் ஒருவர் sound economy என்பதை 'சத்தமிடும் பொருளாதாரம்' என மொழிபெயர்த்தாராம். அதைக் கேட்டதும் எனக்கு சத்தமிட்டு அழவேண்டும் போல தோன்றியது. எனக்கு தெரிந்தவர் beforehand என்பதை முன்கை என்று மொழிபெயர்த்தார். இன்னொருவர் துணிந்து செக்கோவ் மேலேயே கைவைத்துவிட்டார். அவருடைய The Lady with the Dog சிறுகதையை 'சீமாட்டியுடன் கூடிய...
நேற்று, சனிக்கிழமை, யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் நடத்தும் இரவு விருந்துக்கு அழைப்பு வந்தது. நானும் பழைய மாணவன்தான் ஆகவே கட்டாயம் போகவேண்டும். இந்தப் பழைய மாணவர்களில் ஒன்றிரண்டு பேர் என் வாசகர்கள். இப்படியான சந்திப்பின்போது அவர்கள் என்னுடைய எழுத்தை பற்றி ஏதாவது சொல்வார்கள். சிறுவயதில் என்னோடு படித்த ஒருவர் தொடர்ந்து படிப்பதும், அபிப்பிராயம் சொல்வதும் மனதுக்கு உவகை தரும் அனுபவம். எனவே...
சமீபத்தில் என் நண்பர் ஒருவருக்கு சட்டப்படி மணவிலக்கு கிடைத்தது. அது அவருக்கு சுலபமாகக் கிடைக்கவில்லை. இரண்டு வருட போராட்டத்தின் பின்னர்தான் கிடைத்தது. இவரும் மனைவியும் இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் கூட்டாகக் கொடுத்தது என் ஊகத்தில் 50,000 டொலர் இருக்கலாம். நண்பர் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார். அவருக்கு வாழ்த்து அனுப்புவதா அல்லது அனுதாபம் தெரிவிப்பதா என்று எனக்கு தெரியவில்லை. பிரிவு...
ஐந்தாம் வகுப்புக்குள் நுழைந்து மாணவர்களிடம் யார் கிரஹாம் பெல் என்று கேட்டால் உடனே பதில் சொல்வார்கள். அவர்தான் டெலிபோனை கண்டுபிடித்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். மார்டி கூப்பர் யார் என்று கேட்டால் ஒருவருக்குமே தெரியாது. அவர்தான் செல்பேசியை கண்டுபிடித்தார். 1973ல் மோட்டாரோலா கம்பனி செய்த முதல் செல்பேசி நாலரை றாத்தல் எடையிருந்தது. செலவு பத்து லட்சம் டொலர். 1983ல் ஒரு செல்பேசியின்...
பாக்கியராஜின் ஒரு திரைப்படத்தில் வாத்தியார் கேட்பார். 'ஏண்டா லேட்டு?' 'அதான் லேட்டாயிடுத்து சார்.' 'அதைத்தான் கேட்கிறேன், ஏன் லேட்டு?' 'லேட்டாயிடுத்து சார்.' 'சரி, போய் உட்காரு.' மருத்துவர் என்னைப்பார்த்து ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும் என்று சொன்னார். 'ஏன் ரத்தப் பரிசோதனை?' 'பரிசோதனை செய்யத்தான்.' 'அதான் ஏன்?'...
Recent Comments