எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.
இலக்கியப் பணிகள்
அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்
. கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது
நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இவரது நூல்கள்
புதினம்
- உண்மை கலந்த நாட்குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம் (2008)
- கடவுள் தொடங்கிய இடம்
சிறுகதை தொகுப்பு
- அக்கா (1964)
- திகடசக்கரம் (1995)
- வம்சவிருத்தி (1996)
- வடக்கு வீதி (1998)
- மகாராஜாவின் ரயில் வண்டி (2001)
- அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)
- ஒலிப்புத்தகம் – (சிறுகதைகள் தொகுப்பு – 2008)
- அமெரிக்கக்காரி (2009)
- Inauspicious Times – 2008 – (Short stories by Appadurai Muttulingam – translation by Padma Narayanan – available at Amazon.com)
- குதிரைக்காரன் – (2012)
- கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) – (2013) – காலச்சுவடு பதிப்பகம் – தொகுப்பு ஆசிரியர் க.மோகனரங்கன்
- பிள்ளை கடத்தல்காரன் (2015)
- ஆட்டுப்பால் புட்டு (2016)
- After Yesterday – Translated from Tamil – Short stories – 2017
- அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகம்- 2016
கட்டுரைத் தொகுப்பு
- அங்கே இப்ப என்ன நேரம்? (2005)
- பூமியின் பாதி வயது – உயிர்மை பதிப்பகம் (2007)
- கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு – 2006)
- வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) – காலச்சுவடு பதிப்பகம் (2006)
- அமெரிக்க உளவாளி – கிழக்கு பதிப்பகம் (2010)
- ஒன்றுக்கும் உதவாதவன் – உயிர்மை பதிப்பகம் (2011)
- தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை – நேர்காணல்கள் (2013)
- தோற்றவர் வரலாறு (2016)
- அ.முத்துலிங்கம் கட்டுரைகள் – முழுத்தொகுப்பு – இரண்டு பாகம்- 2018ல் வெளிவருகிறது
சிறுகதைகள் பட்டியல்
| சிறுகதைகள் |
ஆண்டு |
| அக்கா தொகுப்பு 1964 |
| 1. கடைசி கைங்கரியம் |
1958 |
| 2. ஊர்வலம் |
1958 |
| 3. கோடைமழை |
1959-1961 |
| 4. அழைப்பு |
1959-1961 |
| 5. ஒரு சிறுவனின் கதை |
1959-1961 |
| 6. அனுலா |
1959-1961 |
| 7. சங்கல்ப நிராகரணம் |
1959-1961 |
| 8. இருப்பிடம் |
1959-1961 |
| 9. பக்குவம் |
1959-1961 |
| 10. அக்கா |
1959-1961 |
| திகடசக்கரம் தொகுப்பு 1995 |
| 11. பார்வதி |
1994 |
| 12. குங்கிலிய கலய நாயனார் |
1994 |
| 13. பெருச்சாளி |
1994 |
| 14. மாற்றமா?தடுமாற்றமா? |
1994 |
| 15. வையன்னா கானா |
1994 |
| 16. குதம்பேயின் தந்தம் |
1994 |
| 17. செல்லரம்மான் |
1994 |
| 18. திகடசக்கரம் |
1994 |
| வம்சவிருத்தி தொகுப்பு 1996 |
| 19. துரி |
1995 |
| 20. ஒருசாதம் |
1995 |
| 21. கிரகணம் |
1995 |
| 22. விழுக்காடு |
1995 |
| 23. பீனிக்ஸ் பறவை |
1995 |
| 24. முழுவிலக்கு |
1995 |
| 25. முடிச்சு |
1995 |
| 26. ஞானம் |
1995 |
| 27. சிலம்பு செல்லப்பா |
1995 |
| 28. வம்சவிருத்தி |
1995 |
| 29. பருத்தி பூ |
1995 |
| 30. வடக்கு வீதி |
1996-1997 |
| வடக்கு வீதி தொகுப்பு 1998 |
| 31. எலுமிச்சை |
1996-1997 |
| 32. குந்தியின் தந்திரம் |
1996-1997 |
| 33. வசியம் |
1996-1997 |
| 34. பூமாதேவி |
1996-1997 |
| 35. யதேச்சை |
1996-1997 |
| 36. கம்ப்யூட்டர் |
1996-1997 |
| 37. ரி |
1996-1997 |
| 38. உடும்பு |
1996-1997 |
| 39. மனுதர்மம் |
1996-1997 |
| 40. விசா |
1996-1997 |
| 41. ஒட்டகம் |
1996-1997 |
| மகாராஜாவின் ரயில்வண்டி தொகுப்பு 2001 |
| 42. மகாராஜாவின் ரயில்வண்டி |
1999-2000 |
| 43. நாளை |
1999-2000 |
| 44. தொடக்கம் |
1999-2000 |
| 45. ஆயுள் |
1999-2000 |
| 46. விருந்தாளி |
1999-2000 |
| 47. மாற்று |
1999-2000 |
| 48. அம்மாவின் பாவாடை |
1999-2000 |
| 49. செங்கல் |
1999-2000 |
| 50. கடன் |
1999-2000 |
| 51. பூர்வீகம் |
1999-2000 |
| 52. கறுப்பு அணில் |
1999-2000 |
| 53. பட்டம் |
1999-2000 |
| 54. ஐவேசு |
1999-2000 |
| 55. எதிரி |
1999-2000 |
| 56. ஐந்தாவது கதிரை |
1999-2000 |
| 57. தில்லை அம்பல பிள்ளையார் கோயில் |
1999-2000 |
| 58. கல்லறை |
1999-2000 |
| 59. கொம்புளானா |
1999-2000 |
| 60. ராகு காலம் |
1999-2000 |
| 61. ஸ்ரோபரி ஜாம் போத்தலும் அபீஸீனியன் பூனையும் |
1999-2000 |
| பிற |
| 62. 23 சதம் |
2001 |
| 63. மொசுமொசுவென்று சடை வைத்த வெள்ளை முடி ஆடுகள் |
2001 |
| 64. அடைப்புகள் |
2001 |
| 65. போரில் தோற்றுப்போன குதிரை வீரன் |
2001 |
| 66. தாத்தா விட்டுபோன தட்டச்சு மெசின் |
2002 |
| 67. ஆப்பிரிக்காவில் அரை நாள் |
2002 |
| 68. கொழுத்தாடு பிடிப்பேன் |
2002 |
| 69. அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை |
2003 |
| 70. முதல் விருந்து முதல் பூகம்பம் முதல் மனைவி |
2003 |
| 71. காபூல் திராட்சை |
2003 |
| 72. நாற்பது வருட தாபம் |
2003 |
| 73. பூமத்திய ரேகை |
2003 |
| 74. தளுக்கு |
2003 |
| 75. எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை |
2003 |
| குதிரைக்காரன் தொகுப்பு |
2012 |
| 76. குதிரைக்காரன் |
2012 |
| 77.குற்றம் கழிக்க வேண்டும் |
2012 |
| 78.மெய்காப்பளன் |
2012 |
| 79.பாரம் |
2012 |
| 80.ஐந்து கால் மனிதன் |
2012 |
| 81.ஜகதலப்ரதாபன் |
2012 |
| 82.புளிக்கவைத்த அப்பம் |
2012 |
| 83.புது பெண்சாதி |
2012 |
| 84.22 வயது |
2012 |
| 85.எங்கள் வீட்டு நீதிவான் |
2012 |
| 86.தீர்வு |
2012 |
| 87.எல்லாம் வெல்லும் |
2012 |
| 88.மூளையால் யோசி |
2012 |
| 89.ஆச்சரியம் |
2012 |
| 90.கனகசுந்தரி |
2012 |
| அமெரிக்ககாரி தொகுப்பு |
2009 |
பரிசுகளும், விருதுகளும்
- தினகரன் சிறுகதைப் போட்டி பரிசு – 1961
- கல்கி சிறுகதைப் போட்டி பரிசு
- திகடசக்கரம் – லில்லி தேவசிகாமணிப் பரிசு – 1995
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – தமிழ்நாடு அரசாங்கம் முதல் பரிசு – 1996
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – இந்திய ஸ்டேட் வங்கி முதல் பரிசு – 1996
- ஜோதி விநாயகம் பரிசு – 1997
- வடக்கு வீதி – சிறுகதைத் தொகுப்பு – இலங்கை அரசு சாகித்தியப் பரிசு – 1999
- கனடா தமிழர் தகவல் – நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை விருது – பிப்ரவரி 2006
- திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது – 2012
- குதிரைக்காரன் – சிறுகதைத் தொகுப்பு – 2012ன் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விகடன் விருது[1]
- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராய விருது 2013
- மார்க்கம் நகரசபை இலக்கிய விருது – 2014
Latest stories
பரா சுந்தரலிங்கம், அவுஸ்திரேலியாவில் இருந்து கடிதம் போட்டிருக்கிறார். 'வணங்குவதற்கு ஒரு மண்' கட்டுரையை படித்துவிட்டு ஆர்லிங்டன் மயானத்தைப் பற்றிய சில தகவல்கள் அனுப்பியிருக்கிறார். 1) ஆர்லிங்கடனில் பெயர் தெரியாத போர்வீரனின் சமாதியை இரண்டு போர்வீரர்கள் காவல் காப்பார்கள். 21 அடிகள் வைத்து அணிவகுத்து ஒருவரை ஒருவர் எதிரெதிராகக் கடந்து பின்னர் திரும்பவும் அதே பாதையில் நடப்பார்கள்...
றிக் பாஸ் என்பவர் அமெரிக்க எழுத்தாளர். இவரை நான் மூன்று தடவை சந்தித்திருக்கிறேன். பழகுவதற்கு அருமையானவர். இவருடைய சிறுகதைகள் அமெரிக்க சிறந்த கதைகளில் தெரிவாகியிருக்கின்றன. இவர் எழுதும் சிறுகதைகள் இயற்கையோடு சம்பந்தப்பட்டவை. மிகவும் நுட்பமாக எழுதப்பட்ட இந்தச் சிறுகதைகளை நான் திரும்ப திரும்ப படிப்பதுண்டு. இயற்கையோடு ஒட்டி இவர் வாழ்வதால் இவருடைய வாழ்க்கை சாகசம் நிறைந்ததாகவும், கேளிக்கை...
சமயோசிதம் என்றால் உடனுக்குடன் ஒன்றை யோசித்து செய்வது; அல்லது சொல்வது. வின்ஸ்டன் சேர்ச்சில் அதில் கெட்டிக்காரர் என்று சொல்வார்கள். அவருடைய புகழ் உச்சத்தில் இருந்த சமயம் ஒரு பெண் அவரிடம் வந்து 'வின்ஸ்டன், உங்களிடம் எனக்கு பிடிக்காதது இரண்டு விசயம்தான். உங்களுடைய மீசை; மற்றது உங்கள் அரசியல்' என்றார். அதற்கு சேர்ச்சில் 'அம்மணி, விசனம் வேண்டாம். இரண்டுக்கும் அருகாமையில் வரும் வாய்ப்பு...
கனடாவுக்கு வரமுன்னர் நான் என் வாழ்க்கையில் மூன்று நிலநடுக்கங்களைச் சந்தித்திருக்கிறேன். பாகிஸ்தானில் இருந்தபோது பெசாவார் என்ற இடத்தில் வேலை செய்தேன். ஆனாலும் ஆப்கானிஸ்தானுக்கு அடிக்கடி போய்வரவேண்டும். சிலவேளைகளில் சின்ன தனியார் விமானத்தில் பறந்து போவோம், சிலவேளைகளில் வாகனத்தில் பயணிப்போம். ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் வரும். அதன் அதிர்வுகள் பாகிஸ்தானின் பெசாவார் பகுதிகளையும்...
நாலு வருடங்களுக்கு முன்னர் 'தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்' என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கம்புயூட்டரைப் பற்றி அப்பொழுது எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இப்பொழுதும் தெரியாது. ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு கம்புயூட்டர் முக்கியம் என்பது தெரிந்திருந்தது. என்னுடைய கட்டுரை இப்படி ஆரம்பமாகியிருந்தது. 'கம்புயூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனேயே சம்மதித்தேன்...
கூகிள் பற்றி தெரியாதவர்கள் குறைவு. மாணவர்களிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் வரை இன்று கூகிளைப் பாவிக்கிறார்கள். ஒருநாளில் ஐம்பது அறுபது தடவை கூகிளை பயன்படுத்துபவர்கள் உண்டு. ஒரு வார்த்தையின் முதல் எழுத்தை அடித்ததும் கூகிள் பத்து வார்த்தைகளை உங்களுக்கு தெரிவு செய்கிறது. வார்த்தையின் அடுத்த எழுத்தை எழுதியதும் கூகிள் இன்னொரு பத்து வார்த்தைகளை காட்டுகிறது. இப்படியே கூகிள் நீங்கள் என்ன வார்த்தையை...
ஒரு காலத்தில் தசாவதானி, அட்டாவதானி என்றெல்லாம் இருந்தார்கள். இப்பொழுதும் இருக்கக்கூடும், நான் சந்தித்ததில்லை. அட்டாவதானி ஒரே நேரத்தில் எட்டு விசயங்களில் கவனம் செலுத்துவார். தசாவதானியால் ஒரே நேரத்தில் பத்து விசயங்களில் கவனம் செலுத்தமுடியும். அவர்களுக்கு பரீட்சைகூட இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லும் பொருளில் அவர் ஒரு வெண்பா இயற்றுவார். அதே சமயம் நான்கு தானத்தை நான்கு...
ஐயா வணக்கம். 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' வாசித்து முடித்து நிறைவாக நெஞ்சோடு புத்தகத்தை அணைத்திருந்த கையோடு உங்களுக்கு எழுதுகிறேன். (ஜெயகாந்தன் சொல்லுவார், 'உங்கள் கைகளில் தவழ்வது புத்தகம் அல்ல; எழுதியவனின் இதயம் என்று'.) மனம் நிறைந்த வாசிப்பனுபவம். ஒரு மனிதருடைய வாழ்க்கை கண் முன்னே பல்வேறு சம்பவங்களோடு நிகழ்கிறது. வாழ்க்கையின் அன்றாட விஷயங்களின் மீது உள்ள உங்களுடைய தேர்ந்த...
குறுந்தொகையில் ஒரு பாடலைப் படித்தபோது சட்டென்று ஓர் எண்ணம் தோன்றியது. இவ்வளவு காலமும் அப்படி தோன்றியதில்லை. இந்த உலகத்தில் பல விசயங்கள் உங்கள் உற்றார் உறவினர் ஊரார் என்ன சொல்வார்கள் என்ற பயத்தினால்தான் நடக்கின்றன. மனிதன் தன் சொந்த புத்தியால் யோசித்து எடுக்கும் முடிவுகள் குறைவு என்றே படுகிறது. இன்று அல்ல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது தொடங்கிவிட்டது. மனிதனை நல்வழிப் படுத்துவதோ தீ...
'நீங்கள் ஒரு விஞ்ஞானியா?' என்றார் ரொறொன்ரோவின் பிரபலமான கவி. 'அப்படித்தான் சொல்கிறார்கள்' என்றார் விஞ்ஞானி. 'நான் மிகப் பெரிய சோகத்தில் இருக்கிறேன்.' 'அப்படியா?' 'என் மலைப்பாம்பு சாகப் போகுது' என்று சொல்லி கவி விம்மத் தொடங்கினார். இந்த சம்பாசணையை கேட்டு மற்றவர்கள் திரும்பி பார்த்தார்கள். ரொறொன்ரோவின் சீலி மண்டபத்து வரவேற்பு பகுதியில் இது நடந்தது...
Recent Comments