எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.
இலக்கியப் பணிகள்
அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்
. கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது
நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இவரது நூல்கள்
புதினம்
- உண்மை கலந்த நாட்குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம் (2008)
- கடவுள் தொடங்கிய இடம்
சிறுகதை தொகுப்பு
- அக்கா (1964)
- திகடசக்கரம் (1995)
- வம்சவிருத்தி (1996)
- வடக்கு வீதி (1998)
- மகாராஜாவின் ரயில் வண்டி (2001)
- அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)
- ஒலிப்புத்தகம் – (சிறுகதைகள் தொகுப்பு – 2008)
- அமெரிக்கக்காரி (2009)
- Inauspicious Times – 2008 – (Short stories by Appadurai Muttulingam – translation by Padma Narayanan – available at Amazon.com)
- குதிரைக்காரன் – (2012)
- கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) – (2013) – காலச்சுவடு பதிப்பகம் – தொகுப்பு ஆசிரியர் க.மோகனரங்கன்
- பிள்ளை கடத்தல்காரன் (2015)
- ஆட்டுப்பால் புட்டு (2016)
- After Yesterday – Translated from Tamil – Short stories – 2017
- அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகம்- 2016
கட்டுரைத் தொகுப்பு
- அங்கே இப்ப என்ன நேரம்? (2005)
- பூமியின் பாதி வயது – உயிர்மை பதிப்பகம் (2007)
- கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு – 2006)
- வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) – காலச்சுவடு பதிப்பகம் (2006)
- அமெரிக்க உளவாளி – கிழக்கு பதிப்பகம் (2010)
- ஒன்றுக்கும் உதவாதவன் – உயிர்மை பதிப்பகம் (2011)
- தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை – நேர்காணல்கள் (2013)
- தோற்றவர் வரலாறு (2016)
- அ.முத்துலிங்கம் கட்டுரைகள் – முழுத்தொகுப்பு – இரண்டு பாகம்- 2018ல் வெளிவருகிறது
சிறுகதைகள் பட்டியல்
| சிறுகதைகள் |
ஆண்டு |
| அக்கா தொகுப்பு 1964 |
| 1. கடைசி கைங்கரியம் |
1958 |
| 2. ஊர்வலம் |
1958 |
| 3. கோடைமழை |
1959-1961 |
| 4. அழைப்பு |
1959-1961 |
| 5. ஒரு சிறுவனின் கதை |
1959-1961 |
| 6. அனுலா |
1959-1961 |
| 7. சங்கல்ப நிராகரணம் |
1959-1961 |
| 8. இருப்பிடம் |
1959-1961 |
| 9. பக்குவம் |
1959-1961 |
| 10. அக்கா |
1959-1961 |
| திகடசக்கரம் தொகுப்பு 1995 |
| 11. பார்வதி |
1994 |
| 12. குங்கிலிய கலய நாயனார் |
1994 |
| 13. பெருச்சாளி |
1994 |
| 14. மாற்றமா?தடுமாற்றமா? |
1994 |
| 15. வையன்னா கானா |
1994 |
| 16. குதம்பேயின் தந்தம் |
1994 |
| 17. செல்லரம்மான் |
1994 |
| 18. திகடசக்கரம் |
1994 |
| வம்சவிருத்தி தொகுப்பு 1996 |
| 19. துரி |
1995 |
| 20. ஒருசாதம் |
1995 |
| 21. கிரகணம் |
1995 |
| 22. விழுக்காடு |
1995 |
| 23. பீனிக்ஸ் பறவை |
1995 |
| 24. முழுவிலக்கு |
1995 |
| 25. முடிச்சு |
1995 |
| 26. ஞானம் |
1995 |
| 27. சிலம்பு செல்லப்பா |
1995 |
| 28. வம்சவிருத்தி |
1995 |
| 29. பருத்தி பூ |
1995 |
| 30. வடக்கு வீதி |
1996-1997 |
| வடக்கு வீதி தொகுப்பு 1998 |
| 31. எலுமிச்சை |
1996-1997 |
| 32. குந்தியின் தந்திரம் |
1996-1997 |
| 33. வசியம் |
1996-1997 |
| 34. பூமாதேவி |
1996-1997 |
| 35. யதேச்சை |
1996-1997 |
| 36. கம்ப்யூட்டர் |
1996-1997 |
| 37. ரி |
1996-1997 |
| 38. உடும்பு |
1996-1997 |
| 39. மனுதர்மம் |
1996-1997 |
| 40. விசா |
1996-1997 |
| 41. ஒட்டகம் |
1996-1997 |
| மகாராஜாவின் ரயில்வண்டி தொகுப்பு 2001 |
| 42. மகாராஜாவின் ரயில்வண்டி |
1999-2000 |
| 43. நாளை |
1999-2000 |
| 44. தொடக்கம் |
1999-2000 |
| 45. ஆயுள் |
1999-2000 |
| 46. விருந்தாளி |
1999-2000 |
| 47. மாற்று |
1999-2000 |
| 48. அம்மாவின் பாவாடை |
1999-2000 |
| 49. செங்கல் |
1999-2000 |
| 50. கடன் |
1999-2000 |
| 51. பூர்வீகம் |
1999-2000 |
| 52. கறுப்பு அணில் |
1999-2000 |
| 53. பட்டம் |
1999-2000 |
| 54. ஐவேசு |
1999-2000 |
| 55. எதிரி |
1999-2000 |
| 56. ஐந்தாவது கதிரை |
1999-2000 |
| 57. தில்லை அம்பல பிள்ளையார் கோயில் |
1999-2000 |
| 58. கல்லறை |
1999-2000 |
| 59. கொம்புளானா |
1999-2000 |
| 60. ராகு காலம் |
1999-2000 |
| 61. ஸ்ரோபரி ஜாம் போத்தலும் அபீஸீனியன் பூனையும் |
1999-2000 |
| பிற |
| 62. 23 சதம் |
2001 |
| 63. மொசுமொசுவென்று சடை வைத்த வெள்ளை முடி ஆடுகள் |
2001 |
| 64. அடைப்புகள் |
2001 |
| 65. போரில் தோற்றுப்போன குதிரை வீரன் |
2001 |
| 66. தாத்தா விட்டுபோன தட்டச்சு மெசின் |
2002 |
| 67. ஆப்பிரிக்காவில் அரை நாள் |
2002 |
| 68. கொழுத்தாடு பிடிப்பேன் |
2002 |
| 69. அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை |
2003 |
| 70. முதல் விருந்து முதல் பூகம்பம் முதல் மனைவி |
2003 |
| 71. காபூல் திராட்சை |
2003 |
| 72. நாற்பது வருட தாபம் |
2003 |
| 73. பூமத்திய ரேகை |
2003 |
| 74. தளுக்கு |
2003 |
| 75. எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை |
2003 |
| குதிரைக்காரன் தொகுப்பு |
2012 |
| 76. குதிரைக்காரன் |
2012 |
| 77.குற்றம் கழிக்க வேண்டும் |
2012 |
| 78.மெய்காப்பளன் |
2012 |
| 79.பாரம் |
2012 |
| 80.ஐந்து கால் மனிதன் |
2012 |
| 81.ஜகதலப்ரதாபன் |
2012 |
| 82.புளிக்கவைத்த அப்பம் |
2012 |
| 83.புது பெண்சாதி |
2012 |
| 84.22 வயது |
2012 |
| 85.எங்கள் வீட்டு நீதிவான் |
2012 |
| 86.தீர்வு |
2012 |
| 87.எல்லாம் வெல்லும் |
2012 |
| 88.மூளையால் யோசி |
2012 |
| 89.ஆச்சரியம் |
2012 |
| 90.கனகசுந்தரி |
2012 |
| அமெரிக்ககாரி தொகுப்பு |
2009 |
பரிசுகளும், விருதுகளும்
- தினகரன் சிறுகதைப் போட்டி பரிசு – 1961
- கல்கி சிறுகதைப் போட்டி பரிசு
- திகடசக்கரம் – லில்லி தேவசிகாமணிப் பரிசு – 1995
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – தமிழ்நாடு அரசாங்கம் முதல் பரிசு – 1996
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – இந்திய ஸ்டேட் வங்கி முதல் பரிசு – 1996
- ஜோதி விநாயகம் பரிசு – 1997
- வடக்கு வீதி – சிறுகதைத் தொகுப்பு – இலங்கை அரசு சாகித்தியப் பரிசு – 1999
- கனடா தமிழர் தகவல் – நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை விருது – பிப்ரவரி 2006
- திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது – 2012
- குதிரைக்காரன் – சிறுகதைத் தொகுப்பு – 2012ன் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விகடன் விருது[1]
- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராய விருது 2013
- மார்க்கம் நகரசபை இலக்கிய விருது – 2014
Latest stories
ஆங்கில சினிமா ஒன்று பார்ப்பதற்காக டிக்கட் வாங்குவதற்கு வரிசையில் நின்றபோது ஓர் இளம் பெண் என்னைப் பார்த்து சிரித்தார். வெள்ளைக்காரப் பெண். ஒரு மாமனாருக்கு மருமகள் கொடுக்கும் சிரிப்புபோல அந்தச் சிரிப்பில் மரியாதை இருந்தது. அல்லது ஒரு மேலதிகாரிக்கு அவர் கீழ் வேலை செய்யும் பெண் எதிர்பாராத விதமாக சந்தித்தபோது கொடுக்கும் சிரிப்பு என்றும் சொல்லலாம். சில நொடிகளில் அவள் தவறு செய்தது அவளுக்கு...
நான் ஸ்கூலில் இருந்து திரும்பியபோது அது நடந்தது. அத்தனை சாதாரணமாவும் நிதானமாகவும் நடந்து முடிந்தது எனக்கே ஆச்சரியம்தான். மயிர் அடர்ந்த வலிமையான கரம் என்னைப் பற்றி இழுத்தது. மரக்குத்தி போல இருந்த மற்றக்கை என் வாயை பொத்தியது. என் கண்களில் தோன்றிய பீதியை பார்த்துவிட்டு அவன் கையை எடுத்திருக்கவேண்டும். பூவரச மரம் ஒன்றுக்கு பக்கத்தில் என்னைக் கிடத்தினான். தோள் மூட்டை அவன் அழுத்திப் பிடித்ததில்...
நான் ஒரு ஜேர்மன் அதிகாரியிடம் சில காலம் வேலை பார்த்தேன். ஜேர்மன் அதிகாரி என்றால் கண்டிப்பானவர் என்பது சொல்லாமலே விளங்கிவிடும். முதல் பிரச்சினை அவர் பெயர். அவருடைய பெயரிலுள்ள எழுத்துக்களுக்கும் உச்சரிப்புக்கும் ஒருவித தொடர்பும் இல்லை. தன் பெயரை எப்படி உச்சரிக்கவேண்டும் என்பதை தினமும் மினக்கெட்டு சொல்லித் தருவார். உச்சரிப்புக்குத் தக்கமாதிரி எழுத்தை மாற்றிவிடவேண்டியதுதானே. ஆனால் அவரிடம் அதை...
கொழும்பிலே ரயில் ஏறும்போது பத்மலோசனிக்கு தன்னுடைய பெயர் இனிமேல் பயன்படாது என்பது தெரியாது. அவள் கணவனைத் தேடினாள். அவன் மும்முரமாக இரண்டு பெரிய பெட்டிகளையும் அவனுடைய வயதிலும் பார்க்க கூடிய வயதான ஒரு சூட்கேசையும் ஏற்றிக்கொண்டிருந்தான். அவர்களுக்கு கல்யாணம் முடிந்து ஒருநாள்தான் ஆகியிருந்தது. அவளுடைய தாலி வட்டமாக தொங்கியது. கண்ணுக்கு மை பூசியிருந்தாள். தலையிலே மல்லிகைப்பூ. பெருவிரலைப்...
வே.சபாநாயகம் நான் மதிக்கும் பெரிய எழுத்தாளர். ‘கணையாழியின் பரிணாம வளர்ச்சி’ என்ற முக்கியமான தொடரை எழுதியவர். அவர் சமீபத்தில் ‘இவர்களது எழுத்துமுறை’ என்ற தொடரை எழுதிவருகிறார். பல எழுத்தாளர்கள் அனுசரிக்கும் விதவிதமான அணுகுமுறைகள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். இத்தொடரில் அ.முத்துலிங்கம் என்று குறிப்பிட்டு எழுதியது வந்திருக்கிறது. நான் எங்கோ எழுதியது, பேசியது எல்லாவற்றையும்...
நான் பல சமயங்களில் பலர் ஆறாத் துயரம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்; எழுதியிருப்பதை படித்துமிருக்கிறேன். நான் நேரில் கண்ட சம்பவம் ஒன்று இரண்டு நாட்கள் முன்புதான் நடந்தது. என் நண்பர் ஒருவர் உடல் நலமில்லாமல் இருந்தார். மூன்று மாதங்களாக பல மருத்துவர்களைப் பார்த்தும் நிறைய மருந்துகள் எடுத்தும் ஒரு பிரயோசனமில்லை. எக்ஸ்ரே, ஸ்கான், ரத்தப் பரிசோதனை என்று நிறையச் செய்து பார்த்துவிட்டார்கள் ஆனால்...
ஓரு துறையில் பிரசித்தி பெற்றவரை திடீரென்று சந்தித்தால் வாயடைத்து நிற்பது என் வழக்கம். அப்படியிருக்க வீடு தேடிவந்த கொலைகாரனிடம் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது. அத்தோடு மொழிப்பிரச்சினை வேறு எனக்கு இருந்தது. இது நடந்தது பல வருடங்கள் முன்பு. இன்று அதையெல்லாம் தாண்டி நான் வந்திருந்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருடனும் பேசுவதை கலையாகவே வளர்த்து வைத்திருக்கும் சிலரை...
அந்தக் கட்டிடத்தை அணுகியதும் நான் பார்த்த காட்சி எதிர்பாராதது. அதிர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது. பனி தூவி முடிந்து, மழை தூற ஆரம்பித்த ஒரு ஜனவரி வியாழன் காலை நேரம். பொஸ்டன் நகரத்து 20 பார்க் பிளாஸா உயர் கட்டிடத்தின் வரவேற்பறை. நான் உள்ளே கால் வைக்கமுடியாதபடி வரவேற்பறையை மறித்து குறுக்காகப் படுத்தபடி கிடந்தன மனித உடல்கள். நான் என்ன செய்வதென்று அறியாது திகைத்துப்போய் நின்றேன். எனக்கு...
17ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் இரண்டாவது சார்ல்ஸ் மன்னரின் ஆட்சி நடந்தபோது பிளேக் எனும் கொடிய கொள்ளை நோய் பரவியது. இது பயங்கரமான தொற்று வியாதி. மக்கள் நூற்றுக் கணக்கில் தினமும் செத்து விழுந்தனர். செல்வந்தர்கள் ஊரை விட்டு, நாட்டை விட்டு தப்பி ஓடினர். அரசன்கூட ஒரு தருணத்தில் வேறு ஊருக்கு தன் அரண்மனையை மாற்றினான். அவன் கட்டளைப்படி தினம் அரச சேவகர்கள் கைவண்டிகளை தள்ளிக்கொண்டு தெருத் தெருவாகச்...
ரொறொன்ரோவில் உள்ள பிரபலமான தமிழ் புத்தகக் கடையில் நுழைந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு திரும்பும்போது கடைக்காரர் என்னைப் பார்த்து 'உங்களுக்கு ஒரு டிவிடி இருக்கிறது' என்றார். '1960 களில் கலைஞர் கதை வசனம் எழுதி, சமீபத்தில் வெளிவந்த 'உளியின் ஓசை' திரைப்படத்தின் டிவிடி. இந்தப் படத்தில் வரும் ஏழு பாடல்களுக்கும் இளையராஜா ஒரே நாளில் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.' அவர்...
Recent Comments