எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.
இலக்கியப் பணிகள்
அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்
. கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது
நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இவரது நூல்கள்
புதினம்
- உண்மை கலந்த நாட்குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம் (2008)
- கடவுள் தொடங்கிய இடம்
சிறுகதை தொகுப்பு
- அக்கா (1964)
- திகடசக்கரம் (1995)
- வம்சவிருத்தி (1996)
- வடக்கு வீதி (1998)
- மகாராஜாவின் ரயில் வண்டி (2001)
- அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)
- ஒலிப்புத்தகம் – (சிறுகதைகள் தொகுப்பு – 2008)
- அமெரிக்கக்காரி (2009)
- Inauspicious Times – 2008 – (Short stories by Appadurai Muttulingam – translation by Padma Narayanan – available at Amazon.com)
- குதிரைக்காரன் – (2012)
- கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) – (2013) – காலச்சுவடு பதிப்பகம் – தொகுப்பு ஆசிரியர் க.மோகனரங்கன்
- பிள்ளை கடத்தல்காரன் (2015)
- ஆட்டுப்பால் புட்டு (2016)
- After Yesterday – Translated from Tamil – Short stories – 2017
- அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகம்- 2016
கட்டுரைத் தொகுப்பு
- அங்கே இப்ப என்ன நேரம்? (2005)
- பூமியின் பாதி வயது – உயிர்மை பதிப்பகம் (2007)
- கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு – 2006)
- வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) – காலச்சுவடு பதிப்பகம் (2006)
- அமெரிக்க உளவாளி – கிழக்கு பதிப்பகம் (2010)
- ஒன்றுக்கும் உதவாதவன் – உயிர்மை பதிப்பகம் (2011)
- தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை – நேர்காணல்கள் (2013)
- தோற்றவர் வரலாறு (2016)
- அ.முத்துலிங்கம் கட்டுரைகள் – முழுத்தொகுப்பு – இரண்டு பாகம்- 2018ல் வெளிவருகிறது
சிறுகதைகள் பட்டியல்
| சிறுகதைகள் |
ஆண்டு |
| அக்கா தொகுப்பு 1964 |
| 1. கடைசி கைங்கரியம் |
1958 |
| 2. ஊர்வலம் |
1958 |
| 3. கோடைமழை |
1959-1961 |
| 4. அழைப்பு |
1959-1961 |
| 5. ஒரு சிறுவனின் கதை |
1959-1961 |
| 6. அனுலா |
1959-1961 |
| 7. சங்கல்ப நிராகரணம் |
1959-1961 |
| 8. இருப்பிடம் |
1959-1961 |
| 9. பக்குவம் |
1959-1961 |
| 10. அக்கா |
1959-1961 |
| திகடசக்கரம் தொகுப்பு 1995 |
| 11. பார்வதி |
1994 |
| 12. குங்கிலிய கலய நாயனார் |
1994 |
| 13. பெருச்சாளி |
1994 |
| 14. மாற்றமா?தடுமாற்றமா? |
1994 |
| 15. வையன்னா கானா |
1994 |
| 16. குதம்பேயின் தந்தம் |
1994 |
| 17. செல்லரம்மான் |
1994 |
| 18. திகடசக்கரம் |
1994 |
| வம்சவிருத்தி தொகுப்பு 1996 |
| 19. துரி |
1995 |
| 20. ஒருசாதம் |
1995 |
| 21. கிரகணம் |
1995 |
| 22. விழுக்காடு |
1995 |
| 23. பீனிக்ஸ் பறவை |
1995 |
| 24. முழுவிலக்கு |
1995 |
| 25. முடிச்சு |
1995 |
| 26. ஞானம் |
1995 |
| 27. சிலம்பு செல்லப்பா |
1995 |
| 28. வம்சவிருத்தி |
1995 |
| 29. பருத்தி பூ |
1995 |
| 30. வடக்கு வீதி |
1996-1997 |
| வடக்கு வீதி தொகுப்பு 1998 |
| 31. எலுமிச்சை |
1996-1997 |
| 32. குந்தியின் தந்திரம் |
1996-1997 |
| 33. வசியம் |
1996-1997 |
| 34. பூமாதேவி |
1996-1997 |
| 35. யதேச்சை |
1996-1997 |
| 36. கம்ப்யூட்டர் |
1996-1997 |
| 37. ரி |
1996-1997 |
| 38. உடும்பு |
1996-1997 |
| 39. மனுதர்மம் |
1996-1997 |
| 40. விசா |
1996-1997 |
| 41. ஒட்டகம் |
1996-1997 |
| மகாராஜாவின் ரயில்வண்டி தொகுப்பு 2001 |
| 42. மகாராஜாவின் ரயில்வண்டி |
1999-2000 |
| 43. நாளை |
1999-2000 |
| 44. தொடக்கம் |
1999-2000 |
| 45. ஆயுள் |
1999-2000 |
| 46. விருந்தாளி |
1999-2000 |
| 47. மாற்று |
1999-2000 |
| 48. அம்மாவின் பாவாடை |
1999-2000 |
| 49. செங்கல் |
1999-2000 |
| 50. கடன் |
1999-2000 |
| 51. பூர்வீகம் |
1999-2000 |
| 52. கறுப்பு அணில் |
1999-2000 |
| 53. பட்டம் |
1999-2000 |
| 54. ஐவேசு |
1999-2000 |
| 55. எதிரி |
1999-2000 |
| 56. ஐந்தாவது கதிரை |
1999-2000 |
| 57. தில்லை அம்பல பிள்ளையார் கோயில் |
1999-2000 |
| 58. கல்லறை |
1999-2000 |
| 59. கொம்புளானா |
1999-2000 |
| 60. ராகு காலம் |
1999-2000 |
| 61. ஸ்ரோபரி ஜாம் போத்தலும் அபீஸீனியன் பூனையும் |
1999-2000 |
| பிற |
| 62. 23 சதம் |
2001 |
| 63. மொசுமொசுவென்று சடை வைத்த வெள்ளை முடி ஆடுகள் |
2001 |
| 64. அடைப்புகள் |
2001 |
| 65. போரில் தோற்றுப்போன குதிரை வீரன் |
2001 |
| 66. தாத்தா விட்டுபோன தட்டச்சு மெசின் |
2002 |
| 67. ஆப்பிரிக்காவில் அரை நாள் |
2002 |
| 68. கொழுத்தாடு பிடிப்பேன் |
2002 |
| 69. அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை |
2003 |
| 70. முதல் விருந்து முதல் பூகம்பம் முதல் மனைவி |
2003 |
| 71. காபூல் திராட்சை |
2003 |
| 72. நாற்பது வருட தாபம் |
2003 |
| 73. பூமத்திய ரேகை |
2003 |
| 74. தளுக்கு |
2003 |
| 75. எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை |
2003 |
| குதிரைக்காரன் தொகுப்பு |
2012 |
| 76. குதிரைக்காரன் |
2012 |
| 77.குற்றம் கழிக்க வேண்டும் |
2012 |
| 78.மெய்காப்பளன் |
2012 |
| 79.பாரம் |
2012 |
| 80.ஐந்து கால் மனிதன் |
2012 |
| 81.ஜகதலப்ரதாபன் |
2012 |
| 82.புளிக்கவைத்த அப்பம் |
2012 |
| 83.புது பெண்சாதி |
2012 |
| 84.22 வயது |
2012 |
| 85.எங்கள் வீட்டு நீதிவான் |
2012 |
| 86.தீர்வு |
2012 |
| 87.எல்லாம் வெல்லும் |
2012 |
| 88.மூளையால் யோசி |
2012 |
| 89.ஆச்சரியம் |
2012 |
| 90.கனகசுந்தரி |
2012 |
| அமெரிக்ககாரி தொகுப்பு |
2009 |
பரிசுகளும், விருதுகளும்
- தினகரன் சிறுகதைப் போட்டி பரிசு – 1961
- கல்கி சிறுகதைப் போட்டி பரிசு
- திகடசக்கரம் – லில்லி தேவசிகாமணிப் பரிசு – 1995
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – தமிழ்நாடு அரசாங்கம் முதல் பரிசு – 1996
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – இந்திய ஸ்டேட் வங்கி முதல் பரிசு – 1996
- ஜோதி விநாயகம் பரிசு – 1997
- வடக்கு வீதி – சிறுகதைத் தொகுப்பு – இலங்கை அரசு சாகித்தியப் பரிசு – 1999
- கனடா தமிழர் தகவல் – நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை விருது – பிப்ரவரி 2006
- திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது – 2012
- குதிரைக்காரன் – சிறுகதைத் தொகுப்பு – 2012ன் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விகடன் விருது[1]
- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராய விருது 2013
- மார்க்கம் நகரசபை இலக்கிய விருது – 2014
Latest stories
விமானத்தில் ஒரு முறை பறந்து கொண்டிருந்தபோது அது பாதி வழியில் பழுதாகி மேலே பறக்க முடியாமல் கீழே அகப்பட்ட விமான நிலையம் ஒன்றில் இறங்கியது. முதலில் இரண்டு மணித்தியாலத்தில் விமானம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள். பின்னர் ஆறு மணி நேரம் என்றார்கள். பழுதுபார்க்கப்பட்ட விமானத்தில் ஏறி மூன்று மணிநேரம் ஓடுதரையில் காத்திருந்த பின்னர் மீண்டும் இறக்கப்பட்டோம். ஒரு முழு நாள் ஆனது. விமானக் கம்பனி...
சில்லறை விசயம் (ஓர் உண்மைக் கதை) (2010-11-16) சிலர் பணம் சேமிப்பதற்கு சீட்டு போடுவார்கள். எனக்கு அது பிடிக்காது. சிலர் சேமிப்பு வங்கிக் கணக்கு திறந்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக சேமிப்பார்கள். அது எனக்கு பிடிக்காது. வருமானத்தில் செலவழிந்தது போக மீதிப் பணம் சேமிப்பு. இது நாலாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் தெரியும். அறிவு தெரிந்த நாளிலிருந்து எனக்கு...
எனக்கு வரும் பதற்றம் நானாக உருவாக்குவதில்லை. பக்கத்தில் இருப்பவர் அதை உருவாக்குவார். நேபாளத்திலிருந்து நண்பர் வந்து ரொறொன்ரோவில் இறங்கியதும் அது ஆரம்பித்தது. இவருடைய வேலை தேசம் தேசமாக சுற்றிக்கொண்டிருப்பது. உலகத்து நாடுகளில் 72 நாடுகளுக்கு பயணித்திருக்கிறார். கனடாவுக்கு பல தடவை வந்து போயிருக்கிறார். கையில் எதை எடுத்தாலும் அதை முதல் காரியமாக தொலைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அவர்...
இம்முறையும் பொஸ்டன் போனபோது வழக்கமான புத்தகக் கடைக்குள் நுழைந்தேன். பொஸ்டனில்தான் பிரபலமான Barnes and Noble புத்தகக் கடை உள்ளது. ரொறொன்ரோவில் பார்க்கமுடியாத புத்தகங்களையெல்லாம் அங்கே காணலாம். பின்னட்டைகளைப் படித்தபடியே ஒரு மணி நேரத்தை ஓட்டிவிடலாம். நான் நாலு புத்தகங்கள் வாங்கினேன். என்னுடைய தெரிவு புத்தகங்களின் பின்னட்டைகளை வாசித்தும், பத்திரிகை மதிப்பீடுகளைப் படித்தும் நண்பர்களின்...
அறைக் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்த நான் திடுக்கிட்டு நின்றேன். என் மனைவி கன்னத்தை மேசையில் வைத்து படுத்துக் கொண்டிருந்தார். முதல் பார்வையில் அழுகிறார் என்று நினைத்தேன். அன்று காலை எழும்பியதிலிருந்து நான் ஒரு குற்றமும் செய்யத் தொடங்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. பதறியபடி 'என்ன, என்ன?' என்றேன். 'ஒன்றுமில்லை. கம்புயூட்டர் திரையை பார்க்கிறேன்' என்றார். 'அதை ஏன்...
எனக்குப் பிடித்த எழுத்தாளர்களை நினைக்கும்போது பல்வேறு சித்திரங்கள் தோன்றும். அசோகமித்திரனை நினைத்தால் என்ன காரணமோ சமிக்ஞை விளக்குகள் ஞாபகத்துக்கு வருகின்றன. புதுமைப்பித்தன் என்றால் மாம்பழம். பிரமிள் என்றால் இறகு, லா.ச.ரா என்றால் ஊஞ்சல், எஸ்.ராமகிருஷ்ணன் – மகாபாரதம், நாஞ்சில்நாடன் – பாம்பு, ஜெயமோகன் – மேப்பிள் இலை. வெங்கட் சாமிநாதன் என்றால் எனக்கு Crimson Gold...
நான் பொஸ்டனுக்கு போனால் அவர் ரொறொன்ரோவுக்கு போனார். நான் ரொறொன்ரோவுக்கு போனால் அவர் பொஸ்டனுக்கு போனார். கடைசியில் ஒருவாறு சந்திப்பு நிகழ்ந்தது. பொஸ்டன் நண்பர் வேல்முருகன் என்னை வந்து காரில் அழைத்துப் போனார். பொஸ்டன் பாலாஜி அவரைக் கூட்டிவந்தார். வேல்முருகன் வீட்டில் சந்தித்துக் கொண்டோம். இப்படித்தான் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதியை சந்தித்தேன். இதுவே முதல் தடவை. ஒருமுறை அமெரிக்காவில் சு.ராவைச்...
நான் ஆப்பிரிக்காவுக்கு போய்ச் சேர்ந்த அந்த வருடம்தான் உலகத்தின் மூன்றாவது பெரிய வைரக்கல்லைக் கண்டுபிடித்தார்கள். உலகத்தின் வைரம் விளையும் நாடுகளில் சியாரோ லியோன் பிரசித்தமானது. அந்த ஆண்டு சியாரோ லியோனில் கண்டுபிடிக்கப்பட்ட வைரம் 969 காரட்டில், அரை றாத்தல் எடை இருந்தது என்று பத்திரிகைகள் வர்ணித்தன. பெரிய வைரம் கிடைத்த நாளை அரசாங்கம் கொண்டாடியது. அதுவும் பொருத்தமாக காதலர்கள் தின நாளில்...
பிரபஞ்சன் எழுதிய ’வானம் வசப்படும்’ நாவலில் ஒர் இடம் வரும். ஏழைக் கவிராயர் ஒருத்தர் நீண்ட தூரம் பயணம் செய்து ஆனந்தரங்கம் பிள்ளையை பார்க்கப் போகிறார். கவிராயரின் மனைவி வீட்டில் சுகவீனமுற்றுக் கிடப்பதால் அவர் மனது சங்கடப்பட்டாலும் நம்பிக்கையுடன் பிள்ளை அவர்களிடம் செல்கிறார். பிள்ளை வீட்டில் இல்லை, களத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். கவிராயர் களத்துக்கே போய்விடுகிறார். தான்...
சூடானுக்கு நான் மாற்றலாகிப் போனபோது என் மனைவியும் கூடவே வந்தாள். வழக்கமாக நான் முதலில் போய் வீடு வசதிகள் எல்லாம் ஏற்பாடு செய்தபிறகே அவள் வருவாள். ஆனால் அந்த முறை பிடிவாதமாக அவளும் என்னுடனேயே வந்துவிட முடிவு செய்தாள். நாங்கள் போய் இறங்கிய சில வாரங்களிலேயே எங்கள் சாமான்களும் வந்து சேர்ந்தன. பெரிய லொறியொன்றில் நடுச்சாமத்தில் பிரம்மாண்டமான பெட்டிகளில் அவை வந்து இறங்கின. லொறி வேலையாட்கள் நாங்கள்...
Recent Comments