ஜெயமோகனுக்கு இயல் விருது – 2014

ஜெயமோகனுக்குஇயல்விருது- 2014

 

கனடாதமிழ்இலக்கியத்தோட்டத்தின் வருடாந்திரஇயல்விருதுஇவ்வருடம்(2014) திரு. 

பா. ஜெயமோகன்அவர்களுக்குவழங்கப்படுகிறது. சமகாலத்தில்’எழுத்துஅசுரன்’என்று 

வர்ணிக்கப்படும்இவர்புதினங்கள், சிறுகதைகள்,  அரசியல், வாழ்க்கை 

வரலாறு, காப்பியம்,  இலக்கியத்திறனாய்வு, பழந்தமிழ்இலக்கியம், மொழியாக்கம், 

அனுபவம், தத்துவம், ஆன்மீகம், பண்பாடு, திரைப்படம்  எனதமிழ்இலக்கியத்தின் 

அனைத்துத்துறைகளிலும்தனதுஎழுத்தின்மூலம்ஆழமானமுத்திரையைதொடர்ந்துபதித்து 

வருகிறார்.  இந்தவிருதைப்பெறும்16வதுஎழுத்தாளர்இவராகும். இதற்குமுன்னர் சுந்தர

ராமசாமி, வெங்கட்சாமிநாதன், ஜோர்ஜ்ஹார்ட், ஐராவதம்மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை, 

எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு.தியடோர்பாஸ்கரன், டொமினிக் ஜீவா  போன்றவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.

 

ஜெயமோகன்1962 ல்அருமனையில்(கன்னியாகுமரி) பிறந்தார்.  நாகர்கோயில்பயோனியர்குமாரசாமிக்கல்லூரியில்வணிகவியல்இளங்கலை படிப்பைபாதியிலே விட்டுவிட்டு இந்தியா முழுவதும் இரண்டு வருடமாக அலைந்து வாழ்க்கையை கற்றுக்கொண்டார். 1984ல்கேரளத்தில்காசர்கோடுதொலைபேசிநிலையத்தில்தற்காலிகஊழியராகவேலைக்குச்  சேர்ந்தார்.  எழுத்தாளர்சுந்தரராமசாமியால் ஆற்றுப்படுத்தப்பட்டு தமிழ் இலக்கியத்துக்குள் நுழைந்தார். 1987ல் அவர் எழுதிய ’நதி’ சிறுகதை முதன்முறையாக கணையாழியில் பிரசுரமாகி  அவர் எழுத்து வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தது. இவருடைய ’விஷ்ணுபுரம்’ நாவல் பரவலான வாசகர்களை அடைந்து பெரும் புகழ்பெற்றது. அதைத் தொடர்ந்து காடு, ஏழாம் உலகம், கொற்றவை, வெள்ளையானை ஆகிய 13 நாவல்களையும், 11 சிறுகதை தொகுப்புகளையும், 50 கட்டுரை நூல்களையும் இதுவரை எழுதியிருக்கிறார்.  1990 ஆண்டுஅகிலன்நினைவுப்போட்டிப்பரிசு, 1992  ஆண்டுக்கானகதாவிருது, 1994  ஆண்டுக்கானசம்ஸ்கிருதிசம்மான்தேசியவிருது, 2008  ஆண்டுபாவலர்விருது, 2011  ஆண்டு’அறம்’சிறுகதைத்தொகுதிக்காகமுகம்விருது,   ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார்.  ஜெயமோகன்பங்கேற்றுவெளிவந்த திரைப்படங்கள்கஸ்தூரிமான், நான்கடவுள், அங்காடித்தெரு, நீர்ப்பறவை, ஒழிமுறி, கடல், ஆறு  மெழுகுவர்த்திகள், காஞ்சி, காவியத்தலைவன்ஆகியவை பெரும் வெற்றியீட்டின.

 

1998 முதல்2004 வரை"சொல்புதிது" என்றசிற்றிதழைநண்பர்களுடன்இணைந்துநடத்தினார்.

2010 ஆம்ஆண்டுமுதல்இவரதுபடைப்பானவிஷ்ணுபுரம்பெயரால்’விஷ்ணுபுரம்இலக்கிய 

வட்டம்’ இலக்கிய ஆளுமைகளுக்கு விருது அளித்து வருகிறது. அபூர்வமான  சொல்லழகும், பொருள்செறிவும்கொழிக்கும்மொழியில்  2014  புத்தாண்டின்முதல்நாள்தொடங்கிமகாபாரதத்தின்மறுஆக்கமாகஇவர்தற்போதுஇணையத்தில் ’வெண்முரசு’ நாவலை. ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் எனப் பத்தாண்டுகள் திட்டமிட்டு, எழுதி வருகிறார். ஏறக்குறைய நாற்பது நாவல்களாக இது நிறைவுபெறும். தமிழில் வேறு யாருமே முயன்றிராத பிரம்மாண்டமான பணி இது.

 

இவருடைய மனைவி அருண்மொழிநங்கை, மகன் அஜிதன், மகள் சைதன்யாவுடன் நாகர்கோவிலில் வசித்து வருகிறார். ’இயல்விருது’கேடயமும்,2500 டொலர்பணப்பரிசும்கொண்டது. விருதுவழங்கும்விழா 

ரொறொன்ரோவில்2015 ஜூன்மாதம்வழமைபோலநடைபெறும்.

 

 

 

 

 

About the author

2 comments

Leave a Reply to Dino Czapiewski Cancel reply

  • Nice weblog right here! Additionally your web site quite a bit up very fast! What host are you using? Can I am getting your affiliate hyperlink to your host? I wish my site loaded up as fast as yours lol

  • I used to be suggested this web site via my cousin. I am now not positive whether or not this publish is written through him as no one else understand such certain about my difficulty. You’re amazing! Thank you!

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta