ArchiveDecember 2019

ஊபர்

                                     ஊபர்                                 அ.முத்துலிங்கம் சிலருக்கு  எங்கே போனாலும் ஒரு பிரச்சினை வரும். சிலர் பிரச்சினையை தங்களுடன் எடுத்துக்கொண்டு செல்வார்கள். நான் இரண்டாவது வகை. எங்கே போனாலும் என் கைப்பைபோல பிரச்சினையும் வந்துவிடுகிறது. இப்பொழுது பொஸ்டனுக்குப் போனபோதும் இப்படி நடந்தது. ஒருநாள் காலை நண்பரிடமிருந்து அழைப்பு ஒன்று வந்தது. ’ஒரு சந்திப்பு ஏற்பாடு...

எதிர்பாராதது

                                   எதிர்பாராதது                                    அ.முத்துலிங்கம் ஒரு பிரபலத்தை நேர்காணல் செய்வதற்கு எனக்கு ஒரு வருடகாலம்கூட அலையவேண்டி இருந்திருக்கிறது. என் வாழ்க்கையில் பலரை நேர்காணல் செய்திருக்கிறேன். பிரபல எழுத்தாளர்கள், நடிகர்கள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், இயக்குநர்கள், பாடகர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் இலகுவில் நேரத்தை ஒதுக்கித்...

எக்ஸ் தந்த நேர்காணல்

                               எக்ஸ் தந்த நேர்காணல்                                   அ.முத்துலிங்கம் சினிமா என்று வரும்போது நடிகர் நடிகைகளையே எல்லோரும் சந்திக்க விரும்புவார்கள். அடுத்து இயக்குநர். அதற்கும் அடுத்தபடியாக  இசையமைப்பாளர். பின்னர் பாடகர் இப்படிப் போகும். நான் பார்க்க விரும்புவது தயாரிப்பாளர்களைத்தான். அவர்கள்மேல் நெடுங்காலமாக எனக்கு இருக்கும் ஈர்ப்பை வர்ணிக்கமுடியாது. அதைப்பற்றி...

மோசமான விடைபெறுதல்

மோசமான விடைபெறுதல்     லாரி டேவிட் [சமீபத்தில் இந்தக் குறிப்பை ஆங்கிலத்தில் படித்தேன். மொழிபெயர்க்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் இது நேரடியான வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு அல்ல. தழுவல் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். எழுத்து எழுத்து என்று சொல்கிறோமே. இதுதான் எழுத்து. இலக்கியம் என்றும் சொல்லலாம். – அ.முத்துலிங்கம் ] 1942ம் ஆண்டு, ஜூன் 25. நான் போருக்குப் புறப்பட்ட நாள். உயர்நிலை...

இரண்டு டொலர்

இரண்டு டொலர் அ.முத்துலிங்கம் வரிசை தொடங்கிய இடமும் முடிந்த இடமும் ஒன்று. நம்பர் 498 பஸ்சுக்கு நான் மட்டுமே தனியாக  காத்து நின்றேன். சாம்பல் நிறப் பகல்.   தற்காலிகமாக நான் தங்கியிருந்த இடம்  மோசமானது. பஸ் வுட்வார்ட் அவென்யூ வழியாகப் போகும்போது  ஏமாற்றுக்காரப் பேர்வழிகள் எல்லாம் ஏறுவார்கள், இறங்குவார்கள்.  அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? கோப்பை கழுவும் வேலையிலும்  பார்க்க உயர்ந்த வேலை  எனக்கு...

இரண்டு சம்பவங்கள்

                                              இரண்டு சம்பவங்கள்                                         அ.முத்துலிங்கம் இன்று முக்கியமான நாள். இந்த நாளில்தான் 40 வருடங்களுக்கு முன்னர் நான் இலங்கையை விட்டுப் புறப்பட்டேன். இரவு ஒரு மணி. ஆழமான தூக்கம். வழக்கம்போல டெலிபோன் அடித்தது. வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் அந்த நேரம்தான் வரும். நித்திரைக் கலக்கத்தில் எழும்பி ஒவ்வொரு பட்டனாக...

தோணித்து அழுதேன்

தோணித்து, அழுதேன் அ.முத்துலிங்கம் சில வேளைகளில் அப்படித்தான். மனம் நிலை கொள்ளாது அலையும். காரணம் இல்லாமல் அழத் தோன்றும். அப்படி பல தடவை நடந்திருக்கிறது. வாழ்க்கையில் எத்தனை சம்பவங்களைப் பார்க்கிறோம். ஆனால் சிலதான் மனதில் நிற்கின்றன. எத்தனை கவிதைகள் படிக்கிறோம். படிக்கும்போது சுவையாக இருக்கின்றன. ஆனால் புத்தகத்தை மூடியவுடன் அவை மறந்துவிடுகின்றன, சில நிற்கின்றன. சில கவிதைகள் மட்டும் ஏன் தங்கின என்ற...

எடிசன் 1891

                                    எடிசன் 1891                                                 சைமன் ரிச்                                                         தமிழில் அ.முத்துலிங்கம் ‘தொந்தரவுக்கு மன்னிக்கவும்,’ ஜெட் முனகினான். ’நான் மறுபடியும் ஏதோ குழப்பிவிட்டேன் என்று நினைக்கிறேன்.’ தோமஸ் அல்வா எடிசன் கண்களைச் சுருக்கி அந்தப் பையனைப் பார்த்தார். ஜெட்டுக்கு மூளை கிடையாது என்ற விசயம்...

அன்றன்றைக்கு உரிய அப்பம்

                    அன்றன்றைக்கு உரிய அப்பம்                     அ.முத்துலிங்கம்                         2018 யூன் மாதத்து காலை நேரம். ரொறொன்ரோ விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. நான் பூச்செண்டுடன் காத்திருந்தேன். சரியாக 10 மணிக்கு விமானம் தரை இறங்கிவிட்டது என அறிவுப்புத்திரை சொன்னது. நேரம் 11ஐ தாண்டிவிட்டது. நான் பக்கத்தில் நின்ற நண்பர் செல்வத்தை பார்க்கிறேன். அவரும் பார்க்கிறார்...

தங்கத் தாம்பாளம்

                                           தங்கத் தாம்பாளம்                                                அ.  முத்துலிங்கம் ஐம்பதுகள் என் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம். இந்த வருடங்கள்தான் என்னை உருவாக்கின. நான் பிற்காலத்தில் என்ன ஆவேன் என்பதை தீர்மானித்த வருடங்கள். அப்போதெல்லாம் அது தெரியவில்லை. இப்பொழுது திரும்பிப்  பார்க்கும்போதுதான் அவை துல்லியமாகத் தெரியத் தொடங்குகின்றன. என் அண்ணர்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta