இரண்டு சம்பவங்கள் அ.முத்துலிங்கம் இன்று முக்கியமான நாள். இந்த நாளில்தான் 40 வருடங்களுக்கு முன்னர் நான் இலங்கையை விட்டுப் புறப்பட்டேன். இரவு ஒரு மணி. ஆழமான தூக்கம். வழக்கம்போல டெலிபோன் அடித்தது. வெளிநாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் அந்த நேரம்தான் வரும். நித்திரைக் கலக்கத்தில் எழும்பி ஒவ்வொரு பட்டனாக...
தோணித்து அழுதேன்
தோணித்து, அழுதேன் அ.முத்துலிங்கம் சில வேளைகளில் அப்படித்தான். மனம் நிலை கொள்ளாது அலையும். காரணம் இல்லாமல் அழத் தோன்றும். அப்படி பல தடவை நடந்திருக்கிறது. வாழ்க்கையில் எத்தனை சம்பவங்களைப் பார்க்கிறோம். ஆனால் சிலதான் மனதில் நிற்கின்றன. எத்தனை கவிதைகள் படிக்கிறோம். படிக்கும்போது சுவையாக இருக்கின்றன. ஆனால் புத்தகத்தை மூடியவுடன் அவை மறந்துவிடுகின்றன, சில நிற்கின்றன. சில கவிதைகள் மட்டும் ஏன் தங்கின என்ற...
எடிசன் 1891
எடிசன் 1891 சைமன் ரிச் தமிழில் அ.முத்துலிங்கம் ‘தொந்தரவுக்கு மன்னிக்கவும்,’ ஜெட் முனகினான். ’நான் மறுபடியும் ஏதோ குழப்பிவிட்டேன் என்று நினைக்கிறேன்.’ தோமஸ் அல்வா எடிசன் கண்களைச் சுருக்கி அந்தப் பையனைப் பார்த்தார். ஜெட்டுக்கு மூளை கிடையாது என்ற விசயம்...
அன்றன்றைக்கு உரிய அப்பம்
அன்றன்றைக்கு உரிய அப்பம் அ.முத்துலிங்கம் 2018 யூன் மாதத்து காலை நேரம். ரொறொன்ரோ விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. நான் பூச்செண்டுடன் காத்திருந்தேன். சரியாக 10 மணிக்கு விமானம் தரை இறங்கிவிட்டது என அறிவுப்புத்திரை சொன்னது. நேரம் 11ஐ தாண்டிவிட்டது. நான் பக்கத்தில் நின்ற நண்பர் செல்வத்தை பார்க்கிறேன். அவரும் பார்க்கிறார்...
தங்கத் தாம்பாளம்
தங்கத் தாம்பாளம் அ. முத்துலிங்கம் ஐம்பதுகள் என் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம். இந்த வருடங்கள்தான் என்னை உருவாக்கின. நான் பிற்காலத்தில் என்ன ஆவேன் என்பதை தீர்மானித்த வருடங்கள். அப்போதெல்லாம் அது தெரியவில்லை. இப்பொழுது திரும்பிப் பார்க்கும்போதுதான் அவை துல்லியமாகத் தெரியத் தொடங்குகின்றன. என் அண்ணர்...
இரு கவிகள்
இரு கவிகள் அ.முத்துலிங்கம் சென்ற வாரம் ரொறொன்ரோவில் இரண்டு கவிகளைச் சந்தித்தேன். தனித்தனியாக. ஒரு கவியை சந்திப்பதே சிரமமான காரியம். ஆனால் சில அதிசயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அன்று காலையே சந்தைப்படுத்தும் தொலைபேசி அழைப்புகள் வரத்தொடங்கிவிட்டன. தலைமைப் பண்பு எனத் தொடங்கும் ஓர் அழைப்பு வந்ததும்...
என்னை விட்டு தப்புவது
என்னைவிட்டு தப்புவது அ.முத்துலிங்கம் 2017 முழுக்க எனக்கு கூகிள் வருடமாக அமைந்தது. ஒவ்வொரு வார்த்தையாக கூகிளில் தேடினேன். என்னுடைய தேடலில் நான் எழுதிய கட்டுரை ஒன்றுதான் வந்தது. ’அட, இங்கேயும் அப்படியா?’ என்று கம்புயூட்டரை மூடிவைத்தேன். எழுத்தாளர் மூளையிலே கரு எப்படி உதிக்கிறது என்பதுதான் கேள்வி. பல காரணங்களைச் சொல்லலாம்...
உள்ளே வராதே
உள்ளே வராதே அ.முத்துலிங்கம் சிறுவயது ஞாபகங்கள் என்றும் மனதிலிருந்து அழிவதில்லை. இன்று காலை என்ன உணவு சாப்பிட்டேன்? ஞாபகமில்லை. நேற்று பத்திரிகை தலைப்பு செய்தி என்ன? ஞாபகம் இல்லை. ஆனால் பல வருடங்களுக்கு முன்னர் நடந்தவை இன்னும் நினைவில் அப்படியே நிற்கின்றன. அதுமட்டுமல்ல, அப்போ நடந்தவற்றையும், படித்தவற்றையும்...
ஆறாம் திணை
ஆறாம் திணை அ.முத்துலிங்கம் நாங்கள் அப்போது இலங்கையில் மவுண்லவினியா என்னும் இடத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுக்குச் சொந்தக்காரர் பெயர் பிரீஸ். அவருக்கு தமிழ் தெரியாது. எனக்கு சிங்களம் தெரியாது. 1958ம் ஆண்டு மே மாதம் ஓர் இரவு கலவரம் மெல்ல மெல்ல ஊர்ந்து கொழும்புக்கு வந்தது. எந்த நேரமும் எங்கள் வீடு தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று உணர்ந்து அண்ணர் எங்கள் உயிரையும் உடைமைகளையும்...
தனித்து நின்ற பெண்
தனித்து நின்ற பெண் அ.முத்துலிங்கம் அந்த உணவகத்துக்குள் நுழைந்தபோது நான் முதலில் பார்த்தது அந்த இளம் பெண்ணைத்தான். இரண்டு நாற்காலிகள் போட்ட சதுரமான மேசையில் தனியாக உட்கார்ந்திருந்தார். விருந்துக்குப் புறப்பட்டதுபோல ஒப்பனை செய்யப்பட்ட முகம். நல்ல ஆடையில் அலங்காரமாக காணப்பட்டார். என்னை இழுத்தது நீண்டுபோன அவருடைய கண்கள்தான்...
Recent Comments