வே.சபாநாயகம் நான் மதிக்கும் பெரிய எழுத்தாளர். ‘கணையாழியின் பரிணாம வளர்ச்சி’ என்ற முக்கியமான தொடரை எழுதியவர். அவர் சமீபத்தில் ‘இவர்களது எழுத்துமுறை’ என்ற தொடரை எழுதிவருகிறார். பல எழுத்தாளர்கள் அனுசரிக்கும் விதவிதமான அணுகுமுறைகள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். இத்தொடரில் அ.முத்துலிங்கம் என்று குறிப்பிட்டு எழுதியது வந்திருக்கிறது. நான் எங்கோ எழுதியது, பேசியது எல்லாவற்றையும்...
ஆறாத் துயரம்
நான் பல சமயங்களில் பலர் ஆறாத் துயரம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்; எழுதியிருப்பதை படித்துமிருக்கிறேன். நான் நேரில் கண்ட சம்பவம் ஒன்று இரண்டு நாட்கள் முன்புதான் நடந்தது. என் நண்பர் ஒருவர் உடல் நலமில்லாமல் இருந்தார். மூன்று மாதங்களாக பல மருத்துவர்களைப் பார்த்தும் நிறைய மருந்துகள் எடுத்தும் ஒரு பிரயோசனமில்லை. எக்ஸ்ரே, ஸ்கான், ரத்தப் பரிசோதனை என்று நிறையச் செய்து பார்த்துவிட்டார்கள் ஆனால்...
என்ன கதைப்பது
ஓரு துறையில் பிரசித்தி பெற்றவரை திடீரென்று சந்தித்தால் வாயடைத்து நிற்பது என் வழக்கம். அப்படியிருக்க வீடு தேடிவந்த கொலைகாரனிடம் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது. அத்தோடு மொழிப்பிரச்சினை வேறு எனக்கு இருந்தது. இது நடந்தது பல வருடங்கள் முன்பு. இன்று அதையெல்லாம் தாண்டி நான் வந்திருந்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருடனும் பேசுவதை கலையாகவே வளர்த்து வைத்திருக்கும் சிலரை...
குரல் மட்டுமே எஞ்சியிருக்கிறது
அந்தக் கட்டிடத்தை அணுகியதும் நான் பார்த்த காட்சி எதிர்பாராதது. அதிர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது. பனி தூவி முடிந்து, மழை தூற ஆரம்பித்த ஒரு ஜனவரி வியாழன் காலை நேரம். பொஸ்டன் நகரத்து 20 பார்க் பிளாஸா உயர் கட்டிடத்தின் வரவேற்பறை. நான் உள்ளே கால் வைக்கமுடியாதபடி வரவேற்பறையை மறித்து குறுக்காகப் படுத்தபடி கிடந்தன மனித உடல்கள். நான் என்ன செய்வதென்று அறியாது திகைத்துப்போய் நின்றேன். எனக்கு...
பிணங்களை வெளியே கொண்டுவாருங்கள்
17ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் இரண்டாவது சார்ல்ஸ் மன்னரின் ஆட்சி நடந்தபோது பிளேக் எனும் கொடிய கொள்ளை நோய் பரவியது. இது பயங்கரமான தொற்று வியாதி. மக்கள் நூற்றுக் கணக்கில் தினமும் செத்து விழுந்தனர். செல்வந்தர்கள் ஊரை விட்டு, நாட்டை விட்டு தப்பி ஓடினர். அரசன்கூட ஒரு தருணத்தில் வேறு ஊருக்கு தன் அரண்மனையை மாற்றினான். அவன் கட்டளைப்படி தினம் அரச சேவகர்கள் கைவண்டிகளை தள்ளிக்கொண்டு தெருத் தெருவாகச்...
உங்கள் பெயர் என்ன?
ரொறொன்ரோவில் உள்ள பிரபலமான தமிழ் புத்தகக் கடையில் நுழைந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு திரும்பும்போது கடைக்காரர் என்னைப் பார்த்து 'உங்களுக்கு ஒரு டிவிடி இருக்கிறது' என்றார். '1960 களில் கலைஞர் கதை வசனம் எழுதி, சமீபத்தில் வெளிவந்த 'உளியின் ஓசை' திரைப்படத்தின் டிவிடி. இந்தப் படத்தில் வரும் ஏழு பாடல்களுக்கும் இளையராஜா ஒரே நாளில் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.' அவர்...
இருளில்
எனக்கு பல நாட்களாக ஒரு சந்தேகம் இருந்தது. பார்வையற்றவர்களுக்கு கனவு வருமா? அது எப்படிப்பட்ட கனவாக இருக்கும்? கனடா வந்து பிரபா என்ற நண்பர் பழக்கமான சில நாட்களிலேயே அவரிடம் இந்தக் கேள்வியை கேட்டேன். பிரபா பார்வையற்றவர். அவருடைய கனவில் அம்மா வருகிறார். அவருடன் படித்த பள்ளிக்கூட நண்பர்கள் வருகிறார்கள். அவருக்கு கண்பார்வை போனது ஏழுவயதில் என்பதால் அவர் காட்சிகள் எல்லாம் ஏழுவயதோடு உறைந்து...
ஆப்பிரிக்காவில் அரை நாள்
முப்பது வருடங்களுக்கு முன்பு British Caledonian என்று ஒரு விமான சேவை இருந்தது. இதுதான் என்னை முதன்முதல் ஆப்பிரிக்காவிற்குக் காவிச் சென்ற விமானம். இந்த விமானம் சியாரா லியோனின் வெளி எல்லைக்குள் 350 மைல் வேகத்தில் நுழைந்தபோது சூரியன் தன் அன்றைய வேலையை முடித்துவிட்டான். நீலமான முகில்கள் ஒன்றையொன்று சத்தம் இல்லாமல் இடித்துக் கொண்ட அந்த மாலை வேளையில் அவற்றைக் கிழித்துக்கொண்டு பிளேன் கீழே...
உடலழகன் போட்டி
உடலழகன் போட்டிக்கு போவதென்பது முடிவாகிவிட்டது. இதற்கு முன்னர் நான் அப்படியான ஒரு போட்டியை பார்க்க எங்கேயும் போனதில்லை. பிரச்சினை என்னவென்றால் நான் ரொறொன்ரோவில் இருந்தேன், போட்டி 350 கி.மீட்டர் தூரத்திலிருந்த ஒட்டாவாவில் நடந்தது. நான் மனைவியிடம் போட்டி எத்தனை மணிக்கு ஆரம்பம் என்று கேட்டேன். அவர் 'காலை ஒன்பது மணி, பழைய நேரம் பத்து மணி' என்றார். ஒக்டோபர் மாதத்து...
அருமையான பாதாளம்
இம்முறை நான் அமெரிக்காவுக்கு சென்றபோது ஒரு பிரம்மாண்டமான நூலகத்துக்கு போனேன். அங்கே அபூர்வமான நூல்கள் எல்லாம் இருந்தன. எனக்குப் பிடித்த அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெய்ன். அவர் எழுதிய அத்தனை புத்தகங்களும் இந்த நூலகத்தில் பூர்வ அட்டைகளுடன் கிடைத்தன. அமெரிக்க இலக்கியத்தின் ஆரம்பமே மார்க் ட்வெய்ன் என்று சொல்வார்கள். இவருக்கு பின்னால் வந்த அமெரிக்க எழுத்தாளர்களில் எவரும் இவரைத் தாண்டவில்லை...

Recent Comments