என் பள்ளிப் பருவத்தில் பல பாடசாலைகளில். பல வகுப்புகளில், பல ஆசிரியர்களிடம் படித்திருக்கிறேன். பல மாணவர்களை பரிச்சயம் செய்துகொண்டு பல வாங்குகளைத் தேய்த்திருக்கிறேன். பலவகைப்பட்ட வண்ண மைகளில் தோய்த்து தோய்த்து தொட்டெழுதும் பேனாவினால் ஊறும் தாள் கொப்பிகளை நிரப்பியிருக்கிறேன். ஊறாமல் தேங்கி நிற்கும் எழுத்துக்களை ஒற்றுத்தாள்களில் ஒற்றி எடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு கிளாஸை மட்டும் என்னால்...
பாகிஸ்தான் உளவுத்துறையும், நானும்
இஸ்லாமபாத்தை என்னால் மறக்க முடியாது. பணி நிமித்தமாக பாகிஸ்தானின் தலைநகரத்துக்கு என்னை மாற்றியிருந்தார்கள். காலடி வைத்து பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக நான் ஏமாற்றப்பட்டேன். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் பல டாக்ஸி டிரைவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். தாடி வைத்து தொள தொளவென்று நீண்ட மேலங்கி அணிந்த உயரமான பட்டான் சாரதி ஒருத்தர் என்னை வெற்றி கொண்டார். அவருடைய...
விட்டுப்போச்சுது
[கலாநிதி செவாலியர் அடைக்கலமுத்து ஐயா அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் ரொறொன்ரோ வந்திருந்தபோது அவரைச் சென்று சந்தித்தேன். அந்தச் சந்திப்பு எனக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஐயா எழுதிய 'இந்த வேலிக்கு கதியால் போட்டவர்கள்' நூலினை படித்து அனுபவித்தேன். சென்ற மாதம் அவர் இறந்துபோனது தமிழுக்கு பெரும் இழப்பு. அவர் ஞாபகமாக இந்தப் பதிவு.] அடைக்கலமுத்து...
நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு
நான் எங்கு போவதானாலும் குறித்த நேரத்துக்குப் போய்விடுவேன். எனக்கு ஒருவரையும் காக்க வைத்துப் பழக்கமில்லை. ஆனபடியால் கனடா விமான நிலையத்துக்கு நான் ஐந்து நிமிடம் முன்பாகவே சென்றுவிட்டேன். அன்று பார்த்து விமானம் 25 நிமிடங்கள் முன்னதாக வந்து என்னை லேட்டாக்கிவிட்டது. பார்த்தால் அங்கே ஏற்கனவே பெரும்கூட்டம் திரண்டிருந்தது. நான் நடிகை பத்மினியை நேரே கண்டவன் அல்ல. சினிமாவில்...
சட்டவிரோதமான காரியம்
பல வருடங்களுக்கு முன் என்னுடன் ஒருவர் வேலை செய்தார். அவர் ஒரு போர்த்துக்கீய பெண்ணை மணமுடித்து. அந்த நாட்டிலேயே தங்கிவிட்டவர். அப்பொழுது ஆப்கானிஸ்தான் பிரிவில் என்னுடன் பெஷாவாரில் வேலை பார்த்தார். அவர் பங்களுர்க்காரர் ஆகையால் கொங்கணி என்று ஒரு பாஷை இருக்கிறதாம், அதை பேசுவார். ஆங்கிலத்தையும் அதே மாதிரி பேசுவார். சில நிமிடங்களும், முதல் நாலு வார்த்தைகளும் தவறிய பிறகுதான் அவர் ஆங்கிலம்...
ஐந்து பணத்துக்கு ஒரு குதிரை
என்னைப் பார்த்து ஒரு பெண் கண்ணடித்தாள். இது நடந்தது கனடாவில் ஒரு பலசரக்குக் கடையில். நான் ஓர் உணவுப் பக்கற்றை தூக்கி வைத்து இது பழசா? இதை வாங்கலாமா? என்று விசாரித்தேன். அவள் கீழ்ப்படிவதற்கு பழக்கப்பட்ட ஒரு விற்பனைப் பெண். ஒரு மயிலின் தலைபோல தானாக ஆடுகிற சிறய தலை அவளுக்கு. என்னை உற்றுப் பார்த்தாள். என்னிடம் அவளுக்கு இரக்கம் உண்டாகியிருக்கலாம். உடம்பின் சகல அங்கங்களையும் ஒடுக்கி, விறைப்பாக வைத்துக்...
இரண்டு பூமிகள் தேவை
நன்றி கூறல் நாள் மறுபடியும் வந்து போனது. அமெரிக்க ஜனாதிபதி வழக்கம்போல ஒரு வான்கோழியை மன்னித்து அதற்கு விடுதலை வழங்கினார். அந்த வான்கோழி ஒருவித குற்றமும் செய்யவில்லை. குற்றம் செய்தது மனிதன்தான். அன்றிரவு மட்டும் அமெரிக்காவில் ஐந்து கோடி வான்கோழிகள் கொல்லப்பட்டு அவனுக்கு உணவாகின. இந்த விழாவுக்காக இரண்டு வான்கோழிகளை வெள்ளை மாளிகையில் பாதுகாப்பார்கள். விருந்துக்கு முன்னர் ஒன்றுக்கு ஏதாவது...
தனியாக அனுப்பிவிட்ட மகிழ்ச்சி
அப்பூதியடிகள் என்ற தொண்டரைப்பற்றி பெரியபுராணத்தில் படித்திருப்போம். அவர் திருநாவுக்கரசரில் அளவில்லாத பக்தி கொண்டவர். திருநாவுக்கரசரை அவர் பார்த்தது கிடையாது, கேள்விப்பட்டதுதான். ஆன்மீக குருவாக அவரை வரித்து நிறைய தானதருமங்கள் செய்து வந்தார். அவருடைய பிள்ளைகள் எல்லோருக்கும் 'திருநாவுக்கரசர்' என்றே பெயர் சூட்டினார். ஆடு மாடுகளுக்கும் அதே பெயர்தான். திருநாவுக்கரசர் பெயரால் ஒரு தண்ணீர் பந்தல்...
நாளுக்கு ஒரு நன்மை
நான் அப்போது பொஸ்டனில் இருந்தேன். எங்கள் வீட்டில் இரண்டு விதமான ஆட்கள் இருந்தார்கள். உட்கார்ந்து வேலைசெய்துவிட்டு நின்று இளைப்பாறுபவர்கள்; நின்று வேலை செய்துவிட்டு உட்கார்ந்து இளைப்பாறுபவர்கள். நான் மூன்றாவது வகை. நின்று இளைப்பாறிவிட்டு உட்கார்ந்து இளைப்பாறுபவன். அப்படியிருக்க அன்று அதிகாலை சூரியன் எழும்ப முன்னர் நான் எழும்பிவிட்டேன். கதவை யாரோ தட்டும் சத்தம்...
குழையல்
நான் சின்ன வயதாயிருந்தபோது அம்மா சமைப்பதை பார்த்திருக்கிறேன். தினமும் பத்து பேருக்கு அவர் சமைப்பார். கிணற்றடியிலிருந்து தண்ணீர் அள்ளுவதிலிருந்து சமைப்பதற்கு விறகு பொறுக்குவதுவரை எல்லாம் அவர்தான் செய்யவேண்டும்.காலை ஐந்து மணிக்கு அடுப்பு மூட்டினார் என்றால் இரவு பத்துமணிக்கு படுக்கப்போகும்வரை அது எரிந்துகொண்டே இருக்கும். அவ்வளவு நேரமும் அம்மா அடுக்களையில்தான். காலை உணவு, மதிய உணவு, மாலை...

Recent Comments