எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.
இலக்கியப் பணிகள்
அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்
. கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது
நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இவரது நூல்கள்
புதினம்
- உண்மை கலந்த நாட்குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம் (2008)
- கடவுள் தொடங்கிய இடம்
சிறுகதை தொகுப்பு
- அக்கா (1964)
- திகடசக்கரம் (1995)
- வம்சவிருத்தி (1996)
- வடக்கு வீதி (1998)
- மகாராஜாவின் ரயில் வண்டி (2001)
- அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)
- ஒலிப்புத்தகம் – (சிறுகதைகள் தொகுப்பு – 2008)
- அமெரிக்கக்காரி (2009)
- Inauspicious Times – 2008 – (Short stories by Appadurai Muttulingam – translation by Padma Narayanan – available at Amazon.com)
- குதிரைக்காரன் – (2012)
- கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) – (2013) – காலச்சுவடு பதிப்பகம் – தொகுப்பு ஆசிரியர் க.மோகனரங்கன்
- பிள்ளை கடத்தல்காரன் (2015)
- ஆட்டுப்பால் புட்டு (2016)
- After Yesterday – Translated from Tamil – Short stories – 2017
- அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகம்- 2016
கட்டுரைத் தொகுப்பு
- அங்கே இப்ப என்ன நேரம்? (2005)
- பூமியின் பாதி வயது – உயிர்மை பதிப்பகம் (2007)
- கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு – 2006)
- வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) – காலச்சுவடு பதிப்பகம் (2006)
- அமெரிக்க உளவாளி – கிழக்கு பதிப்பகம் (2010)
- ஒன்றுக்கும் உதவாதவன் – உயிர்மை பதிப்பகம் (2011)
- தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை – நேர்காணல்கள் (2013)
- தோற்றவர் வரலாறு (2016)
- அ.முத்துலிங்கம் கட்டுரைகள் – முழுத்தொகுப்பு – இரண்டு பாகம்- 2018ல் வெளிவருகிறது
சிறுகதைகள் பட்டியல்
| சிறுகதைகள் |
ஆண்டு |
| அக்கா தொகுப்பு 1964 |
| 1. கடைசி கைங்கரியம் |
1958 |
| 2. ஊர்வலம் |
1958 |
| 3. கோடைமழை |
1959-1961 |
| 4. அழைப்பு |
1959-1961 |
| 5. ஒரு சிறுவனின் கதை |
1959-1961 |
| 6. அனுலா |
1959-1961 |
| 7. சங்கல்ப நிராகரணம் |
1959-1961 |
| 8. இருப்பிடம் |
1959-1961 |
| 9. பக்குவம் |
1959-1961 |
| 10. அக்கா |
1959-1961 |
| திகடசக்கரம் தொகுப்பு 1995 |
| 11. பார்வதி |
1994 |
| 12. குங்கிலிய கலய நாயனார் |
1994 |
| 13. பெருச்சாளி |
1994 |
| 14. மாற்றமா?தடுமாற்றமா? |
1994 |
| 15. வையன்னா கானா |
1994 |
| 16. குதம்பேயின் தந்தம் |
1994 |
| 17. செல்லரம்மான் |
1994 |
| 18. திகடசக்கரம் |
1994 |
| வம்சவிருத்தி தொகுப்பு 1996 |
| 19. துரி |
1995 |
| 20. ஒருசாதம் |
1995 |
| 21. கிரகணம் |
1995 |
| 22. விழுக்காடு |
1995 |
| 23. பீனிக்ஸ் பறவை |
1995 |
| 24. முழுவிலக்கு |
1995 |
| 25. முடிச்சு |
1995 |
| 26. ஞானம் |
1995 |
| 27. சிலம்பு செல்லப்பா |
1995 |
| 28. வம்சவிருத்தி |
1995 |
| 29. பருத்தி பூ |
1995 |
| 30. வடக்கு வீதி |
1996-1997 |
| வடக்கு வீதி தொகுப்பு 1998 |
| 31. எலுமிச்சை |
1996-1997 |
| 32. குந்தியின் தந்திரம் |
1996-1997 |
| 33. வசியம் |
1996-1997 |
| 34. பூமாதேவி |
1996-1997 |
| 35. யதேச்சை |
1996-1997 |
| 36. கம்ப்யூட்டர் |
1996-1997 |
| 37. ரி |
1996-1997 |
| 38. உடும்பு |
1996-1997 |
| 39. மனுதர்மம் |
1996-1997 |
| 40. விசா |
1996-1997 |
| 41. ஒட்டகம் |
1996-1997 |
| மகாராஜாவின் ரயில்வண்டி தொகுப்பு 2001 |
| 42. மகாராஜாவின் ரயில்வண்டி |
1999-2000 |
| 43. நாளை |
1999-2000 |
| 44. தொடக்கம் |
1999-2000 |
| 45. ஆயுள் |
1999-2000 |
| 46. விருந்தாளி |
1999-2000 |
| 47. மாற்று |
1999-2000 |
| 48. அம்மாவின் பாவாடை |
1999-2000 |
| 49. செங்கல் |
1999-2000 |
| 50. கடன் |
1999-2000 |
| 51. பூர்வீகம் |
1999-2000 |
| 52. கறுப்பு அணில் |
1999-2000 |
| 53. பட்டம் |
1999-2000 |
| 54. ஐவேசு |
1999-2000 |
| 55. எதிரி |
1999-2000 |
| 56. ஐந்தாவது கதிரை |
1999-2000 |
| 57. தில்லை அம்பல பிள்ளையார் கோயில் |
1999-2000 |
| 58. கல்லறை |
1999-2000 |
| 59. கொம்புளானா |
1999-2000 |
| 60. ராகு காலம் |
1999-2000 |
| 61. ஸ்ரோபரி ஜாம் போத்தலும் அபீஸீனியன் பூனையும் |
1999-2000 |
| பிற |
| 62. 23 சதம் |
2001 |
| 63. மொசுமொசுவென்று சடை வைத்த வெள்ளை முடி ஆடுகள் |
2001 |
| 64. அடைப்புகள் |
2001 |
| 65. போரில் தோற்றுப்போன குதிரை வீரன் |
2001 |
| 66. தாத்தா விட்டுபோன தட்டச்சு மெசின் |
2002 |
| 67. ஆப்பிரிக்காவில் அரை நாள் |
2002 |
| 68. கொழுத்தாடு பிடிப்பேன் |
2002 |
| 69. அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை |
2003 |
| 70. முதல் விருந்து முதல் பூகம்பம் முதல் மனைவி |
2003 |
| 71. காபூல் திராட்சை |
2003 |
| 72. நாற்பது வருட தாபம் |
2003 |
| 73. பூமத்திய ரேகை |
2003 |
| 74. தளுக்கு |
2003 |
| 75. எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை |
2003 |
| குதிரைக்காரன் தொகுப்பு |
2012 |
| 76. குதிரைக்காரன் |
2012 |
| 77.குற்றம் கழிக்க வேண்டும் |
2012 |
| 78.மெய்காப்பளன் |
2012 |
| 79.பாரம் |
2012 |
| 80.ஐந்து கால் மனிதன் |
2012 |
| 81.ஜகதலப்ரதாபன் |
2012 |
| 82.புளிக்கவைத்த அப்பம் |
2012 |
| 83.புது பெண்சாதி |
2012 |
| 84.22 வயது |
2012 |
| 85.எங்கள் வீட்டு நீதிவான் |
2012 |
| 86.தீர்வு |
2012 |
| 87.எல்லாம் வெல்லும் |
2012 |
| 88.மூளையால் யோசி |
2012 |
| 89.ஆச்சரியம் |
2012 |
| 90.கனகசுந்தரி |
2012 |
| அமெரிக்ககாரி தொகுப்பு |
2009 |
பரிசுகளும், விருதுகளும்
- தினகரன் சிறுகதைப் போட்டி பரிசு – 1961
- கல்கி சிறுகதைப் போட்டி பரிசு
- திகடசக்கரம் – லில்லி தேவசிகாமணிப் பரிசு – 1995
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – தமிழ்நாடு அரசாங்கம் முதல் பரிசு – 1996
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – இந்திய ஸ்டேட் வங்கி முதல் பரிசு – 1996
- ஜோதி விநாயகம் பரிசு – 1997
- வடக்கு வீதி – சிறுகதைத் தொகுப்பு – இலங்கை அரசு சாகித்தியப் பரிசு – 1999
- கனடா தமிழர் தகவல் – நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை விருது – பிப்ரவரி 2006
- திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது – 2012
- குதிரைக்காரன் – சிறுகதைத் தொகுப்பு – 2012ன் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விகடன் விருது[1]
- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராய விருது 2013
- மார்க்கம் நகரசபை இலக்கிய விருது – 2014
Latest stories
இந்த மாதம் நல்ல மாதம். பரிசுகள் கிடைக்கும் மாதம். மூன்று பரிசுகள் கிடைத்தன. என் மகள் ஒரு நோட்டுப் புத்தகம் பரிசு தந்தார். எழுத்தாளருக்கு இதை விடச் சிறந்த பரிசு என்ன? சிலவேளைகளில் புத்தகங்களும் பரிசாக எனக்கு கிடைத்திருக்கின்றன. ஆனால் ஒரு பிரச்சினை உண்டு. அவை வார்த்தைகளால் நிரம்பியிருக்கும். அவற்றை எல்லாம் படிக்கவேண்டும். நோட்டுப் புத்தகம் என்றால் ஒற்றைகள் வெறுமையாக இருக்கும். ஒன்றுமே படிக்கத்தேவை...
எனக்கு சில புது வாசகர்களிடம் இருந்து கடிதங்கள் வந்தன. ஒன்றுமே புரியவில்லை. பிறகு பார்த்தால் ஜெயமோகன் தன்னுடைய தளத்தில் என் எழுத்தைப் பற்றி எழுதியிருந்தார். என் எழுத்தை கவுண் அணிந்த தமிழன்னை என்று சொல்லியிருந்தார். படித்ததும் சிரித்துவிட்டேன். ’’நண்பருடைய அறை ஒரு பழைய கட்டிடத்தின் 16வது மாடியில் இருந்தது. ஒரு ரயில்பெட்டி எப்படி காட்சியளிக்குமோ அப்படி ஒடுக்கமாக நீண்டிருந்தது. நடுவிலே...
சிலவேளை அதிர்ஷ்டம் ஓர் இஞ்ச் கிட்டவந்து தவறிப்போய் விடுகிறது. சரியாக இன்று காலை ஆறுமணிக்கு தொலைபேசி வந்தது. அதன் மணிச்சத்தம் சிறிய இடைவெளிவிட்டு அவசர அவசரமாக அழைத்தது. உள்நாட்டு டெலிபோன் என்றால் நீண்ட இடைவெளி இருக்கும். இது வெளிநாட்டு அழைப்பு. ஹலோ என்றேன். மறுபக்கம் ஹலோ சொல்லவில்லை. முன்கூட்டியே தயாரித்த ஒரு பேச்சை வெள்ளைக்காரப் பெண்குரல் ஒன்று வேகமாகப் பேசியது. 'தயவுசெய்து நிறுத்துங்கள்...
எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு ஜேர்மன்காரி வசிக்கிறார். 80க்கு மேலே வயதாகியிருக்கும் இவருக்கு லொற்றே என்று பெயர். ஹிட்லர் ஆட்சியின்போது இவர் யுவதியாக ஜேர்மனியில் இருந்தவர். இரண்டாவது உலகப் போர் முடிந்ததும் மணமுடித்து கணவருடன் கனடாவுக்கு குடிபெயர்ந்துவிட்டார். போர்க்கால சம்பவங்களையும், இவருடைய அம்மா காலத்து சம்பவங்களையும் இவர் வர்ணிக்கக் கேட்டு நான் ஆச்சரியப்படுவதுண்டு. ஒரு...
விமானத்திலே கிடைத்த சஞ்சிகை ஒன்றில் சமீபத்தில் ஓர் அனுபவக் கட்டுரை படித்தேன். இதை எழுதியவர் ஒரு வெற்றிபெற்ற வழக்கறிஞர். சீராகப்போன அவருடைய வாழ்க்கை திடீரென்று சரியத்தொடங்கியது. தொழிலில் நட்டம் ஏற்பட்டது. மனைவி விவாகரத்து கோரினார். அவருடைய மகன் வீட்டை விட்டு விலகினான். நண்பர்கள் எதிரிகளானார்கள். அவர் நம்பி கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிதராமல் ஏமாற்றினார்கள். எல்லாம் இழந்து இனி இழப்பதற்கு...
கிறிஸ்மஸ் வரும்போது தபால்காரர், குப்பை எடுப்பவர், பேப்பர் போடுபவர் போன்றவர்களுக்கு பரிசுகள் கொடுப்பது அமெரிக்காவில் வழக்கம். சிலர் குடும்ப மருத்துவருக்கும் பரிசு வழங்குவார்கள். இம்முறை நான் சுப்பர்மார்க்கட் மனேஜரையும் பரிசுப் பட்டியலில் சேர்த்துக்கொண்டேன். ஒருவரும் அப்படிச் செய்வதில்லை. ஆனால் நான் அவரைச் சேர்த்ததற்கு காரணம் இருந்தது. எங்கள் சுப்பர்மார்க்கட் மனேஜர் ஒரு பெண்மணி. சதுரமான முகம்...
திரும்பத் திரும்ப 18 தொலைபேசி அழைப்புகள் வந்தன. ’ஐயா, பிரபலமானவர்களின் புத்தகம் ஒன்று தயாரிக்கிறோம். அதில் அவர்கள் பெயர், புகைப்படம், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி இலக்கம் ஆகிய விவரங்களை தருவோம். உங்களைப் பற்றிய தகவல்களை இந்தப் புத்தகத்தில் சேர்ப்பது முக்கியம் என்று நினைக்கிறோம். நீங்கள் 20 டொலர் கட்டினால் உங்கள் பெயரையும் இணைத்து புத்தகத்தை சீக்கிரமாக வெளியிட்டு விடுவோம்’ என்று குரல்...
நண்பர் அவசரமாகக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார். யாரோ துரத்துகிறார்கள் என்று நான் நினைத்தேன். தலைமுடி சீவாமல் பறந்தது. முகம் வியர்த்துக் கிடந்தது. வணக்கம் சொல்லவில்லை. கோட்டை கழற்றவில்லை. நீலமேனி நெடியோன்போல எனக்கு முன்னே உயரமாக நின்றார். பெட்டியிலே வந்த புது சேர்ட்டில் இரண்டு கைகளையும் பின்னுக்கு மடித்து ஊசி குத்தியிருப்பார்கள். அதுபோல கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு நான் முதலில் வணக்கம்...
சென்ற முறை நத்தார் விடுமுறையின்போது நண்பர் செல்வம் ஒரு பரிசு தந்தார். 'சொல்வலை வேட்டுவன்' என்பது புத்தகத்தின் பெயர். அதன் ஆசிரியர் பா.ரா.சுப்பிரமணியன். வழக்கம்போல புத்தகத்தை பின்னட்டையில் தொடங்கி வாசித்துக்கொண்டே வந்தபோது ஓர் இடம் வந்ததும் அப்படியே நின்றேன். அதை அப்படியே கீழே தந்திருக்கிறேன். 'சென்னை மாநகரில் 'அகராதி' என்கிற சொல்லைவிட டிக்சனரி என்னும் வார்த்தையைத்தான்...
சென்ற முறை நத்தார் விடுமுறையின்போது நண்பர் செல்வம் ஒரு பரிசு தந்தார். 'சொல்வலை வேட்டுவன்' என்பது புத்தகத்தின் பெயர். அதன் ஆசிரியர் பா.ரா.சுப்பிரமணியன். வழக்கம்போல புத்தகத்தை பின்னட்டையில் தொடங்கி வாசித்துக்கொண்டே வந்தபோது ஓர் இடம் வந்ததும் அப்படியே நின்றேன். அதை அப்படியே கீழே தந்திருக்கிறேன். 'சென்னை மாநகரில் 'அகராதி' என்கிற சொல்லைவிட டிக்சனரி என்னும் வார்த்தையைத்தான்...
Recent Comments