ArchiveApril 11, 2011

நம்பமுடியாது

'நம்பமுடியாது' என்றேன். சுரேஷ் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் பேசிய ஒரு மணி நேரத்தில் 'நம்பமுடியாது' என்ற வார்த்தையை 16 தடவை சொல்லிவிட்டேன். எதிர்பார்த்ததிலும் பார்க்க அவர் இளமையாகத் தோற்றமளித்தார். உபசரிப்பவரிடம் போதும் என்று சொல்லும்போது ஒரு சிரிப்பு சிரிப்போமே அப்படி சுரேஷ் சிரித்தார். என்னைப்போல 'நம்பமுடியாது' என்று சொல்லும் பலரை அவர் சந்தித்திருப்பார். ஒவ்வொரு...

அமெரிக்க உளவாளி

விருந்துக்கு என்னையும் அழைத்துப் போகும்படி நண்பனிடம் கேட்டேன். அவன் மறுத்துவிட்டான். அப்பொழுது நான் வாசிங்டனில் சில நாட்களை விடுமுறையில் கழிப்பதற்காக போய் தங்கியிருந்தேன். என்னுடைய முகம் அப்படி விழுந்துபோகும் என்று நண்பன் எதிர்பார்க்கவில்லை. 'சரி சரி அவர்களிடம் பேசிவிட்டு சொல்கிறேன்' என்றான். எனக்கு உடனேயே கூச்சம் வந்தது. ஐஸ்கிரீம் வண்டியை துரத்திச் சென்ற சிறுவனிடம் ஐஸ்கிரீம்காரர்...

ஓர் ஆசை

’வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்கிறதா?’ என்றார் நண்பர். இருக்கிறதே என்று பதில் கூறினேன். சொல்லுங்கள் என்றார். ’உங்களிடம் இரண்டு மணிநேரம் அவகாசம் இருக்கிறதா?’ என்றேன். ’இரண்டு மணிநேரம் எதற்கு?’ ’என்னுடைய நிறைவேறாத ஆசைகளை நான் பட்டியலிடுவதானால் அதற்கு இரண்டுமணிநேரம் எடுக்கும்’ என்றேன். நண்பர் திகைத்துவிட்டார். ‘அத்தனை ஆசைகளா, சரி ஒன்றைச்...

இலவசமாகக் கிடைத்த கையெழுத்து

ஒரு விருந்திலே நண்பர் ஒருவர் என்னைக் கண்டு முறைப்பாடு செய்தார். நண்பர் என்றால் ஒன்றிரண்டு தடவை அவரை முன்னே பார்த்ததுண்டு. அவ்வளவுதான். 'நீங்கள் புத்தகம் வெளியிட்டீர்களாமே. எனக்கு ஒரு புத்தகம்கூட தரவில்லை. உங்கள் கையெழுத்தை வைத்து ஒன்று தாருங்கள்' என்றார். இவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை. நான் ஒரு புத்தகம் வெளியிட்டால் அதை வீடு வீடாக எடுத்துச் சென்று கதவை தட்டி ஆட்களிடம்...

திருடித் தின்னும் மிருகம்

ஆப்பிரிக்காவில் ஒரு சின்னக் குற்றம் செய்த சிறுமியின் புகைப்படத்தை என் வீட்டில் கடந்த இருபது வருடங்களாக மாட்டி வைத்திருக்கிறேன். சின்னக் குற்றம் என்று சொன்னால் அங்கே பலருக்கு விளங்காது. ஆப்பிரிக்காவில் குற்றங்களை ஆண்பால் பெண்பால் என்று பிரித்திருப்பார்கள். பாரதூரமான குற்றம் என்றால் அது ஆண்பால்; சிறு குற்றம் என்றால் அது பெண்பாலாக இருக்கும். உதாரணமாக கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி, தீவைத்தல் போன்ற...

ஆதித் தாய்

  இன்று என் வாழ்க்கையில் முக்கியமான நாள். பிறந்தநாள்போல, சோதனையில் சித்தியடைந்த நாள் போல, வேலை கிடைத்த நாள்போல, திருமண நாள்போல, முதல் பிள்ளை பிறந்த நாள்போல முக்கியமானது. என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன். அதாவது 160,000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கு ஆப்பிரிக்காவில் உதித்த ஒரு தாய்தான் என்னுடைய வம்சத்தின் ஆரம்பம். என்னுடைய வம்ச வழியை அப்படியே பின்னோக்கி 5000 தலைமுறைகள் தள்ளிக்கொண்டே போனால் அந்த...

தண்டனை

விமானத்தில் ஒரு முறை பறந்து கொண்டிருந்தபோது அது பாதி வழியில் பழுதாகி மேலே பறக்க முடியாமல் கீழே அகப்பட்ட விமான நிலையம் ஒன்றில் இறங்கியது. முதலில் இரண்டு மணித்தியாலத்தில் விமானம்  சரியாகிவிடும் என்று சொன்னார்கள். பின்னர் ஆறு மணி நேரம் என்றார்கள். பழுதுபார்க்கப்பட்ட விமானத்தில் ஏறி மூன்று மணிநேரம் ஓடுதரையில் காத்திருந்த பின்னர் மீண்டும் இறக்கப்பட்டோம். ஒரு முழு நாள் ஆனது. விமானக் கம்பனி...

சில்லறை விசயம் (ஓர் உண்மைக் கதை)

    சில்லறை விசயம் (ஓர் உண்மைக் கதை) (2010-11-16)       சிலர் பணம் சேமிப்பதற்கு சீட்டு போடுவார்கள். எனக்கு அது பிடிக்காது. சிலர் சேமிப்பு வங்கிக் கணக்கு திறந்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக சேமிப்பார்கள். அது எனக்கு பிடிக்காது. வருமானத்தில் செலவழிந்தது போக மீதிப் பணம் சேமிப்பு. இது நாலாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் தெரியும். அறிவு தெரிந்த நாளிலிருந்து எனக்கு...

பதற்றம்

  எனக்கு வரும் பதற்றம் நானாக உருவாக்குவதில்லை. பக்கத்தில் இருப்பவர் அதை உருவாக்குவார். நேபாளத்திலிருந்து நண்பர் வந்து ரொறொன்ரோவில் இறங்கியதும் அது ஆரம்பித்தது. இவருடைய வேலை தேசம் தேசமாக சுற்றிக்கொண்டிருப்பது. உலகத்து நாடுகளில் 72 நாடுகளுக்கு பயணித்திருக்கிறார். கனடாவுக்கு பல தடவை வந்து போயிருக்கிறார். கையில் எதை எடுத்தாலும் அதை முதல் காரியமாக தொலைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அவர்...

ஓட்டை விழுந்த வெண்ணெய்க் கட்டி

  இம்முறையும் பொஸ்டன் போனபோது வழக்கமான புத்தகக் கடைக்குள் நுழைந்தேன். பொஸ்டனில்தான் பிரபலமான Barnes and Noble புத்தகக் கடை உள்ளது. ரொறொன்ரோவில் பார்க்கமுடியாத புத்தகங்களையெல்லாம் அங்கே காணலாம். பின்னட்டைகளைப் படித்தபடியே ஒரு மணி நேரத்தை ஓட்டிவிடலாம். நான் நாலு புத்தகங்கள் வாங்கினேன். என்னுடைய தெரிவு புத்தகங்களின் பின்னட்டைகளை வாசித்தும், பத்திரிகை மதிப்பீடுகளைப் படித்தும் நண்பர்களின்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta