ArchiveJuly 2023

அதிர்ஷ்டம் என்பது ஒருவித திறமை

டிசம்பர் 21 நடுச்சாமம். கனடாவின் அதி நீண்ட இரவு. 15 மணி நேரம் இரவு; 9 மணி நேரம் பகல். வெளியே பனி கொட்டிக்கொண்டே இருந்தது. யன்னலில் பாதி உயரத்துக்கு ஏறிவிட்ட்து. அது சற்று ஓய்ந்ததும் வேறு விதமான சத்தம் ஆரம்பித்தது. சற்று நேரம் நின்று மறுபடியும் துவங்கியது. பழுதுபட்ட வாகனம் கிளம்புவதுபோல ஒரு வித்தியாசமான ஒலி. மெதுவாக படுக்கையை விட்டு எழும்பி போய் வெளி லைட்டை போட்டேன். பக்கத்து வீட்டு நிலவறையில்...

சீலாவதி

இரவு பத்துமணி இருக்கும்போது டெலிபோன்அடித்தது. அப்பொழுதெல்லாம் செல்பேசி கிடையாது. கைவிரலால்  சுழட்டிப் பேசும் தொலைபேசிதான். ஆப்பிரிக்காவில் பலவருடங்கள் வாழ்ந்திருந்தாலும் இரவு பத்துமணிக்கு அழைக்கும் நண்பர்கள் யாரும் உண்டாகவில்லை. டெலிபோனை எடுத்து ‘ஹலோ’ என்றேன். ஒருமுறை இப்படித்தான் நடு இரவில் ஓர் அழைப்பு ஜனாதிபதி மாளிகையிலிருந்து வந்தது. என்னை இரவு  விருந்துக்கு அழைக்கவில்லை. ஓர்...

கடல் ஆமை விஞ்ஞானி

இது ஓர் உண்மைக் கதை. அமெரிக்காவின் மொன்ரானா மாநிலத்தில் நடந்தது. அவருடைய பெயர் டேவிட் (பொய்ப் பெயர்). அமெரிக்காவில் கடல் ஆமைகள் ஆராய்ச்சி மையம் ஒன்றில் விஞ்ஞானியாக  பணியாற்றுகிறார். ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாத முடிவில் தவறாமல் காட்டுக்குச் சென்று ஒரு கிறிஸ்மஸ் மரம் வெட்டி வருவார். அவரும் மனைவியும் கிறிஸ்மஸ் மரத்தை சோடித்து வண்ணமயமான மின்விளக்குகள் பூட்டி கொண்டாடுவார்கள். இந்த வருடம்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta