Categoryகட்டுரைகள்

சில்லறை விசயம் (ஓர் உண்மைக் கதை)

    சில்லறை விசயம் (ஓர் உண்மைக் கதை) (2010-11-16)       சிலர் பணம் சேமிப்பதற்கு சீட்டு போடுவார்கள். எனக்கு அது பிடிக்காது. சிலர் சேமிப்பு வங்கிக் கணக்கு திறந்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக சேமிப்பார்கள். அது எனக்கு பிடிக்காது. வருமானத்தில் செலவழிந்தது போக மீதிப் பணம் சேமிப்பு. இது நாலாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் தெரியும். அறிவு தெரிந்த நாளிலிருந்து எனக்கு...

பதற்றம்

  எனக்கு வரும் பதற்றம் நானாக உருவாக்குவதில்லை. பக்கத்தில் இருப்பவர் அதை உருவாக்குவார். நேபாளத்திலிருந்து நண்பர் வந்து ரொறொன்ரோவில் இறங்கியதும் அது ஆரம்பித்தது. இவருடைய வேலை தேசம் தேசமாக சுற்றிக்கொண்டிருப்பது. உலகத்து நாடுகளில் 72 நாடுகளுக்கு பயணித்திருக்கிறார். கனடாவுக்கு பல தடவை வந்து போயிருக்கிறார். கையில் எதை எடுத்தாலும் அதை முதல் காரியமாக தொலைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அவர்...

ஓட்டை விழுந்த வெண்ணெய்க் கட்டி

  இம்முறையும் பொஸ்டன் போனபோது வழக்கமான புத்தகக் கடைக்குள் நுழைந்தேன். பொஸ்டனில்தான் பிரபலமான Barnes and Noble புத்தகக் கடை உள்ளது. ரொறொன்ரோவில் பார்க்கமுடியாத புத்தகங்களையெல்லாம் அங்கே காணலாம். பின்னட்டைகளைப் படித்தபடியே ஒரு மணி நேரத்தை ஓட்டிவிடலாம். நான் நாலு புத்தகங்கள் வாங்கினேன். என்னுடைய தெரிவு புத்தகங்களின் பின்னட்டைகளை வாசித்தும், பத்திரிகை மதிப்பீடுகளைப் படித்தும் நண்பர்களின்...

பழைய புகைப்படம்

அறைக் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்த நான் திடுக்கிட்டு நின்றேன். என் மனைவி கன்னத்தை மேசையில் வைத்து படுத்துக் கொண்டிருந்தார். முதல் பார்வையில் அழுகிறார் என்று நினைத்தேன். அன்று காலை எழும்பியதிலிருந்து நான் ஒரு குற்றமும் செய்யத் தொடங்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. பதறியபடி 'என்ன, என்ன?' என்றேன். 'ஒன்றுமில்லை. கம்புயூட்டர் திரையை பார்க்கிறேன்' என்றார். 'அதை ஏன்...

வெ.சா – வித்தியாசமான மனிதர்

  எனக்குப் பிடித்த எழுத்தாளர்களை நினைக்கும்போது பல்வேறு சித்திரங்கள் தோன்றும். அசோகமித்திரனை நினைத்தால் என்ன காரணமோ சமிக்ஞை விளக்குகள் ஞாபகத்துக்கு வருகின்றன. புதுமைப்பித்தன் என்றால் மாம்பழம். பிரமிள் என்றால் இறகு, லா.ச.ரா என்றால் ஊஞ்சல், எஸ்.ராமகிருஷ்ணன் – மகாபாரதம், நாஞ்சில்நாடன் – பாம்பு, ஜெயமோகன் – மேப்பிள் இலை. வெங்கட் சாமிநாதன் என்றால் எனக்கு Crimson Gold...

கிழங்கு கிண்டியபோது கிடைத்த ரத்தினக் கல்

நான் பொஸ்டனுக்கு போனால் அவர் ரொறொன்ரோவுக்கு போனார். நான் ரொறொன்ரோவுக்கு போனால் அவர் பொஸ்டனுக்கு போனார். கடைசியில் ஒருவாறு சந்திப்பு நிகழ்ந்தது. பொஸ்டன் நண்பர் வேல்முருகன் என்னை வந்து காரில் அழைத்துப் போனார். பொஸ்டன் பாலாஜி அவரைக் கூட்டிவந்தார். வேல்முருகன் வீட்டில் சந்தித்துக் கொண்டோம். இப்படித்தான் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதியை சந்தித்தேன். இதுவே முதல் தடவை. ஒருமுறை அமெரிக்காவில் சு.ராவைச்...

என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும்

  நான் ஆப்பிரிக்காவுக்கு போய்ச் சேர்ந்த அந்த வருடம்தான் உலகத்தின் மூன்றாவது பெரிய வைரக்கல்லைக் கண்டுபிடித்தார்கள். உலகத்தின் வைரம் விளையும் நாடுகளில் சியாரோ லியோன் பிரசித்தமானது. அந்த ஆண்டு சியாரோ லியோனில் கண்டுபிடிக்கப்பட்ட வைரம் 969 காரட்டில், அரை றாத்தல் எடை இருந்தது என்று பத்திரிகைகள் வர்ணித்தன. பெரிய வைரம் கிடைத்த நாளை அரசாங்கம் கொண்டாடியது. அதுவும் பொருத்தமாக காதலர்கள் தின நாளில்...

இடம் மாறியது

  பிரபஞ்சன் எழுதிய ’வானம் வசப்படும்’ நாவலில் ஒர் இடம் வரும். ஏழைக் கவிராயர் ஒருத்தர் நீண்ட தூரம் பயணம் செய்து ஆனந்தரங்கம் பிள்ளையை பார்க்கப் போகிறார். கவிராயரின் மனைவி வீட்டில் சுகவீனமுற்றுக் கிடப்பதால் அவர் மனது சங்கடப்பட்டாலும் நம்பிக்கையுடன் பிள்ளை அவர்களிடம் செல்கிறார். பிள்ளை வீட்டில் இல்லை, களத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். கவிராயர் களத்துக்கே போய்விடுகிறார். தான்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta