Categoryசிறுகதைகள்

.23 சதம்

 கனடிய டொலர் .23 சதம். இதன் மதிப்பு இலங்கை ரூபாயில் 15.00, இந்திய ரூபாயில் 8.00. இத்தாலிய லீராவில் 333, யப்பானிய யென்னில் 20. அது அல்ல முக்கியம். கனடிய அரசாங்கம் இந்த .23 சதத்தை எனக்கு தரவேண்டும். பல வருடங்களாக. அதை எப்படித் தருவது என்று அரசாங்கத்துக்கு குழப்பமாக இருக்கிறது. எனக்கும் எப்படி வாங்குவது என்பது தெரியவில்லை. G8 என்று சொல்லப்படும் உலகத்து முக்கிய நாடுகளில் ஒன்றான கனடா நாடு இப்படி...

கொம்புளானா

  உலகத்து சிறுவர்களை எல்லாம் நடுங்க வைக்கும் திறமை கொண்ட ஒரு தமிழ் எழுத்து இருக்கிறது. அது வேறொன்று மில்லை, கொம்புளானாதான். ‘ழ’ இருக்கிறது ‘ல’ இருக்கிறது. அதற்கு நடுவில் இது என்ன பெரிசாகக் கொம்பு வைத்துக்கொண்டு என்று அவள் சிறுவயதில் யோசித்திருக்கிறாள். இலக்கணப் பெரியவர்களைத் திருப்திபடுத்தும் ஒரே நோக்கத்தோடு படைக்கப்பட்ட இந்த ‘ளா’னா இன்று தன்...

ராகு காலம்

   திங்கட்கிழமைகளை எனக்குப் பிடிக்காதென்று சிலர் நினைக்கிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால் திங்கட்கிழமைகளில் எனக்கு ஒருவித மனஸ்தாபமும் இல்லை. இவை வரும்போது பின்னால் இன்னும் நாலு நாட்களை இழுத்துக்கொண்டு வருவதுதான் எனக்குப் பிடிக்காது. அடுத்த சனி, ஞாயிறு நாட்கள் வெகு து}ரத்தில் இருந்தன. அதுதான் வில்லங்கம், இதைத்தவிர எனக்குக் திங்கட்கிழமைகளில் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது...

மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள்

 பச்சை, மஞ்சள், வெள்ளை பரிசாரகி உடையணிந்து நிற்பவள் ஓர் அகதிப் பெண்;  இலங்கை அல்லது இந்தியப் பெண்ணாக இருக்கும். கயானாவாகக்கூட இருக்கலாம். கறுப்பு சருமம், கறுப்பு தலைமயிர், கறுப்பு கண்கள். அவள் உதட்டுச் சாயம், நகப்பூச்சுக்கூட கறுப்பாகவே இருந்தது. அவள் பெயர் நீளமாகவும் அதிக மெய்யெழுத்துக்கள் நிரம்பியதாகவும் இருந்திருக்கக்கூடும். அதைச் சுருக்கி 'ரத்ன' என்று தன் உடையின் ஒரு...

சுவருக்குள்ளே மறையும் படுக்கை

  கனடாவுக்கு வந்து இறங்கிய முதல் நாள் அவருடைய மருமகள் வத்ஸலா ஒரு பொய் சொன்னாள். அவள் எதற்காக சொன்னாள் என்பது இன்றும் மர்மமாகவே இருந்தது. யாரைக் காப்பாற்றுவதற்காகச் சொன்னாள். அல்லது யாரைப் பழிதீர்க்கச் சொன்னாள். அதுவும் காதலித்து கல்யாணம் செய்துகொண்ட தன் கணவனிடம், அவருடைய மகனிடம், சொல்லியிருக்கிறாள். அவருக்கு அது தெரியாது. நாலு வருடங்கள் கழித்து தற்செயலாகத்தான் அதைக் கண்டுபிடிப்பார்...

பாதிக் கிணறு

  சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன். கனடாவின் பிரபல எழுத்தாளர் மார்கிரட் அட்வூட் எழுதியது. மார்கிரட்டின் தாயார் 94 வயதில் இறந்துபோனபோது அவரைப் பற்றிய தன் நினைவுக் குறிப்புகளை எழுதினார்.      அவருடைய ஆக முந்திய நினைவு அவர் சிறுமியாக இருந்தபோது காட்டோரத்தில் இருந்த வீட்டிலே நிகழ்ந்தது. அவருடைய தாயார் தும்புக்கட்டையை எடுத்துக்கொண்டு வெளியே போய் வீட்டுக்கு வரும் கரடிகளை...

தளுக்கு

    யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தில் மூன்று சிநேகிதிகள் இருந்தார்கள். மூன்று உடலும், ஓர் உயிரும் என்று சொல்லாம். ஒன்றாகவே சைக்கிளில் பள்ளிக்கூடம் போனார்கள். ஒன்றாகவே படித்தார்கள். ஒன்றாகவே விளையாடினார்கள். ஒன்றாகவே ரகஸ்யம் பேசினார்கள். ஒரு கரண்ட் வயரில் வேலை செய்யும் மூன்று பல்புகள் போல அவர்கள் இருந்தார்கள்.    பேன் பார்ப்பதில் கூட ஒரு புதுமை செய்தார்கள். முக்கோண...

யுவராசா பட்டம்

 என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஆக இக்கட்டான சம்பவம் என்னவாயிருக்கும் என்று சமீபத்தில் நினைத்துப்  பார்த்தேன். உடனே ஒன்றும் மூளையில் தோன்றவில்லை. ஆனால் சில நிமிடங்கள் கழிந்ததுமே ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது. என் உடம்பிலே உயிர் இருக்கும்வரை மறக்கமுடியாத ஒரு சம்பவத்தை எப்படி மறந்தேன் என்பது வியப்பாக இருந்தது. யோசித்துப் பார்த்தபோது இன்னொன்றும் நினைவுக்கு வந்தது. பேராசை. பேராசை என்றால்...

ஆச்சரியம்

  நான் சில மாதங்கள் ஒரு அச்சகத்தில் வேலை பார்த்திருக்கிறேன். ஒரு பெரிய கம்பனியில் அச்சகம் என்பது சிறிய பிரிவு. அந்தப் பிரிவில் கணக்காளர் பகுதியில் எனக்கொரு சின்ன வேலை. கம்பனியின் முதன்மை இயக்குநர் கொழும்பு மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர். பரம்பரை செல்வந்தராக இருக்கவேண்டும். அவருக்கு இந்த அச்சகம் தேவையில்லாத ஒன்று. அச்சகத்துக்கு பொறுப்பான மேலாளர்  சகலதையும் கவனித்தார். ஆனாலும் முதன்மை...

என் குதிரை நல்லது

அமெரிக்காவின் மொன்ரானா மாநிலம் எனக்குப் பிடிக்கும். கனடாவைத் தொட்டுக்கொண்டு இது வாஷிங்டனுக்கு பக்கத்தில் இருந்தது. ஏப்ரஹாம் லிங்கன் காலத்தில் இருந்தது போலவே இயற்கை வளங்கள் இன்றும் மனிதக் குறுக்கீடுகளில் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. நிறைய மலைத் தொடர்களும், ஆறுகளும். நேரம் தப்பாமல் சீறியடிக்கும் சுடுநீர்க் கிணறுகள்; வனவிலங்கு சரணாலயங்கள். இவை எல்லாவற்றையும் மீறி நட்பான மனிதர்கள் அங்கே...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta