கேர்ணல் கிட்டுவில் குரங்கு

        கேர்ணல்கிட்டுவின்குரங்கு

         அ.முத்துலிங்கம்

என்னுடையபெயர்சிவபாக்கியலட்சுமி. வயது82. எனக்கு

மறதிவரவரக்கூடிக்கொண்டேபோகுது. காலையிலேமருந்துக்

குளிசையைபோட்டேனாஎன்பதுகூடமறந்துபோகுது. என்மூளையில

இருந்துசிலஞாபகங்கள்  மறையுமுன்னர்அதைஉங்களுக்கு

சொல்லவேண்டும்  என்பதுதான்என்ஆசை.

 

என்னுடையபுருசன்அரசாங்கஉத்தியோகத்தர். அவர்ஓய்வு

பெற்றபிறகுயாழ்ப்பாணத்தில்எங்கடசொந்தஊரானகொக்கு

விலுக்குவந்துசேர்ந்தோம். ஒரேமகளைக்கட்டிக்கொடுத்து

வெளிதேசம்அனுப்பிவிட்டோம். வாழ்நாள்முழுக்கசேமித்தகாசில்

ஒருசின்னவீட்டைச்சொந்தமாககட்டிஅதில்தங்கியிருந்தோம்.

என்னுடையபுருசன்சும்மாஇருக்கமாட்டார். தோட்டத்தில்

கத்தரி, வெண்டி, தக்காளிஎன்றுபோடுவார். வாழைமரத்தில்

குலைகுலையாகத்தள்ளும். மரவள்ளியில்கிழங்குவிழும். என்னுடைய

தம்பியின்மகள்மார்  இரண்டுபேரும்எங்களோடதங்கியிருந்தார்கள்.

வீட்டில்  இருந்துபள்ளிக்கூடம்போய் வருவார்கள். மூத்தவளுக்கு

வயது14, மற்றவளுக்கு13. மாதாமாதம்வரும்பென்சன்காசில்

மட்டுமட்டாகசீவித்துக்கொண்டுவந்தோம். வீடுஎப்போதும்

கலகலப்பாகஇருக்கும்.

 

அது1986ம்ஆண்டு. என்னுடைய82 வருட

வாழ்க்கையில்இதுமிகவும்சந்தோசமானஒருபகுதி.

யாழ்ப்பாணத்தில்சங்கிலியன்காலம், பரநிருபசிங்கன்காலம்

என்றுஇருக்கிறதல்லவா? அதுபோலகேர்ணல்கிட்டுவின்காலம்

என்றுஒன்றுஇருந்தது. சனங்கள்அவரில்அளவில்லாதமதிப்பு

வைத்திருந்தார்கள். யாழ்ப்பாணம்கோட்டையில்அப்போதுகாப்டன்

கொத்தலாவலைஇருந்தார். கிட்டுவும்அவரும்எதிரிகள்என்றாலும்

நட்பாகஇருந்தார்கள். கோட்டைக்குவிறகு, மாம்பழம்என்று

கிட்டுஅவ்வப்போதுஅனுப்பிவைப்பார். இப்பஜனாதிபதியாக

இருக்கும்சந்திரிகாவின்கணவர்விஜயகுமாரதுங்காயாழ்ப்பாணம்

வந்தபோதுசுமுகமானவரவேற்புகொடுத்துபேச்சுவார்த்தை

நடத்தியவர்இவர்தான்.

 

கிட்டுவுக்குஒருகாதலிஇருந்ததுயாழ்ப்பாணம்முழுவதுக்கும்

தெரியும். அவர்பெயர்சிந்தியா. மருத்துவக்கல்லூரிமாணவி.

ஒரேஒருமுறைஎங்கள்வீட்டுக்குவந்திருந்தார். இவரைப்பார்த்துவிட்டு

மிற்சுபிசிலான்சரில்திரும்பும்போதுதான்யாரோஇனம்தெரியாத

வர்கள்வீசியகைக்குண்டில்கிட்டுதனதுவலதுகாலைஇழந்தார்.

பின்னாளில்எங்கள்வீட்டில்கிட்டுதங்கியிருந்தபோதுசெயற்கை

காலுடன்தான்நடமாடினார்.

 

இயக்கக்காரர்கள்அவ்வப்போதுவந்துஎங்கள்வீட்டுவிறாந்தையில்

தங்கிவிட்டுஅதிகாலையிலேயேபோய்விடுவார்கள். வாய்திறந்து

ஒருகோப்பைதேத்தண்ணிஎன்றுகேட்கமாட்டார்கள். நாங்களாக

கேட்டுகொடுத்தால்உண்டு. விதம்விதமானஆயுதங்களைஎல்லாம்

காவிவருவார்கள். கைக்குண்டுகள், துப்பாக்கிகள், ஏகே47 என்று

சகலதும்இருக்கும். பகலில்தங்கும்வேளைகளில்துப்பாக்கிகளை

கழட்டிகழட்டிபூட்டுவதும்துடைப்பதுவுமாகஇருப்பார்கள்.

திடீரென்றுஒருசெய்திவரும், உடனேயேமறைந்துவிடுவார்கள்.

கிட்டுஎப்பொழுதாவதுஅபூர்வமாகத்தான்வருவார். வந்தால்

தன்சகாக்களுடன்சிலநாட்கள்தங்குவார். சட்டுபுட்டென்று

ஓடர்கள்போடுவார். வீடுஒருபுதுபொலிவுஅடைந்துஅமளி

துமளியாகஇருக்கும். அந்தச்சமயங்களில்எல்லாம்இந்தஇரண்டு

பெட்டையளும்என்காலைச்சுற்றியபடிநிற்பாளவை. என்னை

விட்டுஒருஇன்ச்அகலமாட்டினம்.

 

ஒருமுறைகிட்டுவெளிவிறாந்தையில்அமர்ந்திருந்தார். ஒரு

கையைகதிரையின்கைப்பிடியில்வைத்திருந்தார், மற்றக்கையின்

ஒருவிரலால்தேத்தண்ணிகோப்பையின்கைப்பிடியைசுற்றி

வளைத்துபிடித்திருந்தார். சேர்ட்டைக்கழற்றியிருந்தபடியால்கையில்

லாதபனியனில்அவருடையகைகள்உருண்டைஉருண்டையாகத்

தெரிந்தன. என்னைஇடித்தபடிபின்னால்இவள்கள். ’என்னஅம்மா?’

என்றார்கிட்டு. ’பெட்டையள் உங்கள்கையெழுத்துவேணுமாம்.’ அதற்கென்ன

என்றுசிரித்தபடிஇரண்டுபேருக்கும்போட்டுக்கொடுத்தார்.

அப்பொழுதுதான்முதன்முதல்பார்த்தேன். அவருடையவலது

பக்கத்தில்ஒருகுரங்கு. பார்த்தஉடனேயேஅதுகண்ணுக்கு

தெரியாது. அவருடைய கால்சட்டை ஆர்மி கலரிலேயேஇருந்ததால்

மறைந்துபோய்இருந்தது. கிட்டுவின்எந்தமுக்கியமானகூட்டம்

என்றாலும்அங்கேகுரங்குஇருக்கும் என்று சொல்வார்கள். அடிக்கடிஅதைதிரும்பி பார்த்தபடிதான்கிட்டுபேசுவார். ஏதோஆலோசனைகேட்பதுபோல

அதுஇருக்கும்.

 

கிட்டுதுப்பாக்கிசுடுவதில்வல்லவர். இரண்டுகைகளிலும்

துப்பாக்கிவைத்துக்கொண்டுஇலக்குகளைமாறிமாறிசுடுவார்.

புதிதாகஇயக்கத்தில்சேர்ந்தபையன்கள்  வாய்பிளந்துபார்த்துக்

கொண்டிருப்பார்கள். இவர்களோடுஓர்இளம்பையன்இருந்தான்.

ஊதிவிட்டால்விழுந்துவிடுவான். அடிக்கடிசிரிப்பான். அவனுடைய

முன்பல்லில்ஒருதுண்டுஉடைந்துபோனதால்சிரிக்கும்போது

மிகஅழகாகத்தென்படுவான்.

ஒருநாள்இவன்என்னிடம்அவசரமாகவந்துஅம்மாஅந்தப்

பிலாப்பழம்பழுத்துபோச்சுபோலகிடக்குஎன்றுமேலேசுட்டிக்

காட்டினான். அதுஅருமைஅருமையாய் காய்க்கின்றமரம். பழம்

தேன்போலஇனிப்பு. தம்பியவைநீங்கள்புடுங்கிசாப்பிடுங்கோ

என்றேன்.

 

நான்இந்தப்பக்கம்திரும்பியதும்ஒருபெடியன்அணில்

ஏறுவதுபோலஏறிநிமிடத்தில்பழத்தைஇறக்கிவிட்டான். கீழே

வந்தபிறகுமரத்தில்இருந்ததிலும்பார்க்கபழம்பென்னம்பெரிய

சைஸாகஇருந்தது. நான்வீட்டுக்குள்  போய்  கத்தியையும்,

நல்லெண்ணெய்  போத்தலையும்எடுத்துவந்தேன். அதற்கிடையில்

பழத்தைகல்லிலேபோட்டுபிளந்துகைகளால்சுளைகளைப்

பிடுங்கிபிடுங்கிச்சாப்பிட்டுமுடித்துவிட்டார்கள். கொட்டைகளை

எல்லாம்குவித்துதென்னோலைபோட்டுஎரித்துஅதையும்

சாப்பிட்டார்கள். தடல்கள்தான்மிச்சம். நான்அதைமாட்டுக்கு

போட்டேன். சிலநிமிடங்களுக்குமுன்மரத்திலேபழமாகதொங்கி

யதற்குஅத்தாட்சியாகஒன்றுமேமிஞ்சவில்லை.

 

இந்தக்காலங்களில்எனக்கிருந்தஒரேகஷ்டம்இந்தஇரண்டு

குமர்களையும்கட்டிக்காப்பதுதான். அதுவும்இளையவளோடு

மாரடிக்கஏலாது. ஒருநாள்இந்தப்பையன்‘அம்மா, எல்லோரும்

கனடாவுக்குஓடினம். அதுஎங்கையிருக்கு?’ என்றுஅப்பாவியாகக்

கேட்டான். நான்வாய்  திறக்குமுன்இளையவள் வந்து‘அஞ்சாம்

குறுக்குத்தெரு’ என்றுசொல்லிவிட்டுவாயைப்பொத்திக்கொண்டு

ஓடிவிட்டாள். உள்ளேஇரண்டுபேரும்‘கெக்கேகெக்கே’ என்று

வயித்தைப்பிடிச்சுக்கொண்டுசிரிக்கிறாளவை.

 

சனிக்கிழமைகாலைவேளைஎன்றால்இவளவையின்அரியண்டம்

தாங்க ஏலாது. அன்றைக்குகடுமையானவெக்கை. நான்கைவேலையாய்

இருந்தேன். ஒருத்தரைஒருத்தர்இடிச்சுக்கொண்டுசிரித்தபடியே

ஓடிவந்தாளவை. ஏதோவில்லங்கம்தான். மாமிஉங்கடைமூளைக்கு

ஒருவேலைஎன்றாள்மூத்தவள். மற்றவள்சாடையாகசிரிச்சுக்

கொண்டுகால்களைவிரிச்சபடிநின்றாள். ‘ஒருஅறையின்சுவரில்

இருந்துஒருநத்தைஎதிர்ச்சுவருக்குவெளிக்கிட்டது. அதுபாதித்

தூரத்தைஇரண்டுநிமிடத்தில்கடந்தது. மீதித்தூரத்தில்பாதியை

ஒருநிமிடத்தில்கடந்தது. மீதிதூரத்தில்பாதியைஇன்னும்பாதி

நேரத்தில்கடந்தது. இன்னும்மீதிதூரத்தில்பாதியைஇன்னும்

பாதிநேரத்தில்கடந்தது. இப்படியேபோனது. நத்தைஎப்போது

மற்றச்சுவரைஅடையும்?’ ‘போங்கடி, எனக்குவேலைகிடக்கு. நான்

உளுந்துநனையப்போடவேணும்’ என்றுஎழும்பினேன்.

அப்பபாத்ரூம்கதவுகொஞ்சம்திறந்திருந்தது. உள்ளே  யாரோ

சோசோவென்றுகுளிக்கும்சத்தம்கேட்டது. என்னுடையபுருசன்

வெளியேபோனவர்இன்னும்வரவில்லை. இதுயார்என்று

எனக்குபயமாயிருந்தது. மெதுவாய்எட்டிப்பார்த்தேன். இவளவை

எனக்குப்பின்னால். நான்கண்டகாட்சிமறக்கக்கூடியதல்ல.

கிட்டுவின்குரங்குஒருமனிதரைப்போலநின்றுதண்ணியை

அள்ளிஅள்ளி  தலையிலேஊத்தியது. பைப்திறந்துதண்ணி

ட்ரம்மைநிறைத்துக்கொண்டிருந்தது. சற்றுதிரும்பிகுரங்குஎன்னைப்

பார்த்தது. எதையுமேசட்டைசெய்யாமல்மீண்டும்தண்ணீரை

அள்ளிஅள்ளிதலையிலேஊத்தியது. திடீரென்றுஒருஎட்டுபாய்ந்து

சோப்பெட்டியைதட்டியது. மூடிகழன்றுசோப்உருளஅதை

எடுத்துகை, வயிறு, கழுத்துஎன்றுமுறையாகதேய்த்தது.  பிறகும்

சோப் போக அள்ளிக்குளித்தது. எல்லாம்முடிந்தபிறகுபைப்பைமூடியது. இனி

டவலைஎடுக்கும்என்றுஎதிர்பார்த்தேன். எடுக்கவில்லை. இன்னொரு

முறைஎன்னைத்திரும்பிப்பார்த்துவிட்டுஅப்படியேதுள்ளிப்

பாய்ந்துயன்னல்வழியாகப்போய்விட்டது.

 

கிட்டுஎங்கள்வீட்டில்தங்கியசமயங்களில்எல்லாம்சரியாக

11 மணிக்குகுரங்குவந்துகுளித்துவிட்டுப்போகும். பெட்டையள்

பள்ளிக்கூடத்தில்இருந்துவந்ததும்கேட்கும்முதல்கேள்வி‘மாமி,

இன்றைக்கும்குரங்குகுளித்ததா?’ என்பதுதான்.

ஒருநாள்இரவுநாங்கள்மூன்றுபேரும்உட்கார்ந்துகல், கத்தரிக்

கோல், பேப்பர்விளையாட்டுவிளையாடிக்கொண்டிருந்தோம்.

இவளவைஇரண்டுபேரையும்என்னால் ஏய்க்கமுடியாது. நான்

பேப்பரைக்காட்டினால்ஒருத்திகத்தரிக்கோலைகாட்டுவாள்;

நான்கல்லைக்காட்டினால்மற்றவள்பேப்பரைக்காட்டுவாள்.

இப்படிஅளாப்பிஅளாப்பிஇரண்டுபேரும்மாறிமாறிவென்று

கொண்டிருந்தார்கள். என்னுடையஇவர்அடிக்கடி‘சரி, போய் இனிப்

படுங்கோ’ என்றுசொல்லிஅலுத்துப்போனார். நேரம்போய்க்

கொண்டேஇருந்தது.

 

அப்பபார்த்துவெளியிலேதடதடவென்றுசத்தம்கேட்டது.

நான்இவளவையைபேசவேண்டாம்என்றுசைகைகாட்டிவிட்டு

யன்னல்வழியாகஎட்டிப்பார்த்தேன். அப்படியேதிடுக்கிட்டு

நின்றேன். எங்கள்வீட்டில்வழக்கமாகத்தங்கும்பையன்களுடன்

சேர்த்துஇன்னும்புதிதாகமூன்றுபேர்வந்திருந்தார்கள். அவர்கள்

எல்லாம்சீரியஸ்முகத்தோற்றமுள்ளவர்களாககாணப்பட்டார்கள்.

இதற்குமுன்நாங்கள்பார்த்திராதகனமானஆயுதங்களைஎல்லாம்

காவிக்கொண்டிருந்தார்கள். இதிலேஒன்றுதோளிலேவைத்து

விமானத்தைசுட்டுவிழுத்தும்ஆயுதம்.

நான்மரியாதைக்காக ‘தம்பியவை, சாப்பிட்டீங்களா?’ என்று

கேட்டுவைத்தேன். எங்களுக்குபழக்கமானஇளம்பையன்இங்கையு

மில்லாமல், அங்கையுமில்லாமல்‘எல்லாம்பழகிப்போச்சுஅம்மா’

என்றான். எனக்குஎன்னதோன்றியதோதெரியாது. வதவதவென்று

வீட்டிலேகிடந்தமாஅவ்வளவையும்எடுத்துஅரித்துபுட்டுஅவிக்

கத்தொடங்கினேன். இதற்கிடையில்என்மருமகள்மார்இரண்டுபேரும்

உற்சாகமாகதேங்காய்துருவிசம்பலும்அரைத்து  விட்டார்கள். மூன்று

நீத்துப்பெட்டிநிறையபுட்டையும், சம்பலையும்எடுத்துக்கொண்டு

போனேன். அவர்கள்  வெளிலைட்டைநூர்த்துவிட்டுமெழுகுதிரி

வெளிச்சத்தில்ஒருவரைபடத்தைசுற்றியிருந்துவிவாதித்துக்

கொண்டிருந்தார்கள்.

சாப்பாட்டைக்கண்டதும்அவர்கள்முகத்தில்பொங்கிய

சந்தோசத்தைச்சொல்லமுடியாது. ஆர்பெற்றபிள்ளைகளோ.

மௌனமாகஅவ்வளவுபுட்டையும்ஒருசொட்டுமிச்சம்விடாமல்

சாப்பிட்டுமுடித்தார்கள். ‘அம்மாஉங்களைமறக்கமாட்டோம்’

என்றார்அவர்களில்மூத்தவர்போலதோற்றமளித்தஒருவர். அன்று

இரவுவெகுநேரம்வரைஅவர்கள்சத்தம்கேட்டபடியேஇருந்தது.

 

அடுத்தநாள்  அதிகாலைநான்எழும்பிவந்துபார்த்தபோது

அவர்கள்  போய்விட்டார்கள்.  அதுவேகடைசி. அவர்கள்இருந்ததற்

கானதடயம்ஒன்றுகூடஇல்லை. அதற்குபிறகுபோர்உச்ச

நிலையைஅடைந்தது. கூட்டைவிட்டுவெளியேறினதேனீக்கள்

போலஅவர்கள்  பிறகுவீடுதிரும்பவேஇல்லை.

 

அன்றுகாலைபேப்பரைபடித்தபோதுதான்பெரியஒருஒப்பரேசன்

நடந்ததுதெரியவந்தது. நான்அவித்துக்கொடுத்தபுட்டைநடுச்

சாமத்துக்குமேல்சாப்பிட்டுவிட்டுபோனஅத்தனைபோராளிகளில்

எத்தனைபேர்திரும்பினார்களோதெரியாது. அல்லதுஎல்லோருமே

இறந்துபோனார்களோ, அதுவும்தெரியாது.

என்புருசன்மாரடைப்பில்திடீரென்றுகாலமானபிறகுநான்

கனடாவுக்குவந்துமகளுடன்தங்கியிருந்தேன். இங்கேவந்த

ஒரேயொருதமிழ்பேப்பரில்கிட்டுஇறந்துபோனசெய்தியை

பிரசுரித்திருந்தார்கள்.  33 வயதுஎன்னபெரியவயதா? 33 வயதுக்கு

இன்னும்14 நாட்கள்இருக்கும்போதுஅவருக்குமரணம்வந்தது;

தானாகவரவழைத்தமரணம். 16 ஜனவரி1993 என்பதுஎனக்கு

நல்லஞாபகம். கிட்டுவும்அவருடையசகாக்கள்எட்டுப்பேரும்

பயணித்த  கப்பலைஇந்தியராணுவம்  சுற்றிவளைத்துப்பிடித்தது.

கிட்டுவும்போராளிகளும்தற்கொலைசெய்துகொண்டார்கள்.

நடுக்கடலில்கப்பல்தீப்பற்றிஎரிந்துபோனது. இப்படிபடித்தேன்.

இப்பொழுதுஇங்கேதமிழ்பேப்பர்கள்கூடிவிட்டன. அவற்றி

னுடையமறதியும்கூடிவிட்டது. சமீபத்தில்கிட்டுவினுடைய12வது

நினைவுதினம்வந்தது. ஒருபேப்பர்பத்தாவதுதினம்என்றுஎழுதியது.

இன்னொருபேப்பர்அவருடையசகபோராளிகளின்எண்ணிக்கையை

தவறாகஎழுதியது. ஒவ்வொருமுறையும்நினைவுதினபேப்பர்களை

நான்துழாவிப்படிப்பேன். ஓர்இணைத்தளபதிபோலஅவருக்கு

பக்கத்திலேயேஎப்போதும் காணப்பட்டகுரங்குபற்றிஏதாவதுசெய்தி வந்திருக்குமா என்றுபார்ப்பேன். சரியாககாலை11 மணிக்கு  பைப்தண்ணீரில்

குளிக்கப்பழக்கப்படுத்தியஒருவளர்ப்புபிராணிக்குநஞ்சுக்குப்பி

கடிக்கபழக்கப்படுத்தியிருக்கமாட்டார்களா, என்ன? ஒருவேளை

அதுகடல்தண்ணீரில்மூழ்கியும்இறந்துபோயிருக்கலாம். அது

பற்றிஒருபேப்பரும்இன்றுவரைஎழுதவில்லை.

END

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta