Authoramuttu

குற்றம் கழிக்கவேண்டும்

இந்தச் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன. காலையில் அந்த வீதியில் ஒவ்வொரு வீடாக ஏறி கதவு மணியை அந்தச் சிறுமி அடித்தாள். அதே வீதியில் வசிக்கும் அவளுக்கு வயது 12 – 13 தான் இருக்கும். முகம் நிறைய புன்னகை பூத்துக்கொண்டு மீதிப்புன்னகையை என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்தபடி நின்றாள். கையிலே இருந்த அழைப்பிதழை நீட்டி விழாவுக்கு அழைத்தாள். அது அவளுடைய பூப்புனித நீராட்டு விழா...

பேச்சுப் போட்டி

   சிறுவயதில் அம்மாவுடன் வெளியே போவதற்கு எனக்கு பிடிக்கும். ஒருநாள் அம்மா என்னைக் கூட்டிக்கொண்டு பெரியகடைக்கு வெண்கலப்பானை ஒன்று வாங்கவென்று போனார். நாலு கடைகள் ஏறி இறங்கி அவரின் மனதில் இருந்த ஏதோ ஒரு பானையை தேடி அலைந்து கடைசியில் ஒரு கடையில் அதைக் கண்டுபிடித்தார். அந்தப் பானை முப்பது நாற்பது பேருக்கு  சமைக்க ஏற்றதாக இருக்கும் என்று கடைக்காரன் அபிப்பிராயப்பட்டான். அம்மா அதை...

ஜகதலப்ரதாபன்

  முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணப் பட்டினத்துக்கு ஒரு புதுப்படம் வந்தால் அதைக் கிராமங்களில் விளம்பரப் படுத்துவதற்கு மாட்டு வண்டில்களைப் பயன்படுத்துவார்கள். வண்டிலின் இரண்டு பக்கங்களிலும் தொங்கும் விளம்பரத் தட்டிகளில் எம்.கே.டி பாகவதரோ, டி.ஆர் ராஜகுமாரியோ, எம்.எஸ். சுப்புலட்சிமியோ, பி.யு.சின்னப்பாவோ காட்சியளிப்பது வழக்கம். மேளம் அடித்தபடி வண்டில் கிராமத்து ஒழுங்கைகளில் ஓடும். அப்படி ஓடும்போது...

22 வயது

2

ஒரு நிமிடம் கழிந்திருந்தால் அவன் அந்தச் சிக்கலில் இருந்து தப்பியிருக்கலாம். இது அவனுடைய முதல் வேலை. இன்னும் இரண்டு நாட்களில் அவனுக்கு 22வது வயது பிறக்கிறது. வேலையில் சேர்ந்த ஒரு வருடத்தில் அலுவலகத்தில் அவன் ஓடம்போல மிதந்துகொண்டிருந்தான். யாரும் எவரும் எதற்கும் எப்பவும் அவனை உபயோகித்துக்கொள்ளலாம். அவனுக்கு ஒதுக்கப்பட்ட அடைப்புக்குள் இருந்து யன்னல் வழியே பார்த்தால் ரொறொன்ரோவின் சிஎன் கோபுரம்...

உலக மனிதர்களின் வீடியோ ஆல்பம்

  மிக சுவாரஸ்யமான நாற்பத்தியாறு சிறுகதைகளை படிக்கிறீர்கள். ஒவ்வொரு சிறுகதையும் மலைக்க வைக்கின்றன. அதில் இடம் பெறும் சம்பவங்களும் அதை விவரித்திருக்கும் முறையும் இப்படியெல்லாம் நாம் வாக்கியங்கள் அமைக்கவில்லையே என்று ஏங்க வைக்கின்றன. படைப்பின் பிரமிப்பே இதுபோல் நாம் ஏன் உருவாக்கவில்லை என்ற ஏக்கத்தை உருவாக்க வைப்பதுதானே? இந்த நூல் அதைச் செய்கிறது. ஆனால் இந்த நூல் அவருடைய சிறுகதைத் தொகுதி அல்ல...

ரயில் வண்டிகளின் மகாராஜா

ரயில் வண்டிகளின் மகாராஜா – November 21st, 2008 பா.ராகவன்                        வாழ்வில் நம்மையறியாமல் நேர்ந்துவிடுகிற சில அபத்தங்கள்கூட சமயத்தில் சரித்திர முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. என்னைப் பொருத்தவரை, அ. முத்துலிங்கத்தை நான் வாசிக்கத் தவறவிட்டது ஒரு மிக முக்கியமான அபத்தம்...

Inauspicious Times

I

Friday, February 20, 2009 “Inauspicious Times” by Appadurai Muttulingam – A Tiny Treasure Chest of Tamil Tales Little did I know when I met Appadurai Muttulingam at a wedding on Nantucket a few summers ago what benefits would accrue from that new relationship. It turns out that this fascinating gentleman is an accomplished and gifted writer, who has penned over 100 short stories...

பெயர் மாறும் பெண்

ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்னர் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதை அனுப்பியவருடைய பெயர் உமா பார்வதி என்று இரண்டு பெண்களின் பெயரை தொடுத்திருந்தது எனக்கு புதுமையாக பட்டது. அவர் எழுதிய கடிதம்கூட புதுமையாகத்தான் இருந்தது. என்னுடைய 'மகாராஜாவின் ரயில்வண்டி' சிறுகதை தொகுப்பை படித்துவிட்டு அதிலிருந்த ஒவ்வொரு கதையையும் எடுத்து அதற்கு நீண்ட விமர்சனம் எழுதியிருந்தார். நான் அந்தக் கடிதத்திற்கு நன்றி...

இளைய அப்துல்லாஹ்

அன்பான முத்துலிங்கம் கொக்குவில் இந்துக்கல்லூரியின் நூற்றாண்டு விழாவை இங்கு லண்டனில் கொண்டாடுகிறார்கள். அதற்கு பஞ்சலிங்கம் மாஸ்டர் வந்திருந்நதார் நான் எனது தொலைக்காட்சி இன்டவியுவிற்காக அவரை கூப்பிட்டிருந்தேன். அவர் வரும்பொழுது 381 பக்க  நூற்றாண்டு விழா மலரை கொண்டுவந்தார் அப்பிடியே தட்டிக்கொண்டிரந்தபோது உங்களின்    மறக்க முடியாத ஆசிரியர்கள் கட்டுரையை கண்டு விட்டு இந்த...

இனிமையான யாழிசை

அ.முத்துலிங்கத்தின் "வியத்தலும் இலமே" "வியப்பு தான் மனிதனை வாழ வைக்கிறது.எப்பொழுது ஒருத்தர் வியப்பதை நிறுத்திவிடுகிறாரோ அப்பொழுதே அவர் வாழ்வதை நிறுத்தி விட்டார் என்று தான் நினைக்கின்றேன்" – அ.முத்துலிங்கம் இத்தொகுப்பை வாசிக்க தொடங்கிய சில நிமிடங்களில், தமிழின் அபூர்வ நூல் ஒன்றை வாசித்து கொண்டிருக்கின்றேன் என்ற எண்ணம் தோன்றியது.உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் உடனான...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta