கூந்தலழகி – விளக்கம்

பத்து கடிதத்திற்கு மேல் வந்துவிட்டது விளக்கம் கேட்டு.

1) ஒரு சிறுமியும் இரண்டு சிறுவர்களும் உதைபந்தாட்டம் விளையாடுவதுடன் கதை ஆரம்பமாகிறது. கதை சொல்லி அந்தச் சிறுமிதான்.

2) மாமா கொடுத்த பூஞ்செடிகளை ஆர்வமாக வளர்க்கிறாள்.

3) வளர்ந்து எஞ்சினியர் ஆகிறாள்.

4) ஒரு நாள் கார் ஓட்டும்போது விபத்து ஏற்படுகிறது. கர்வமான இளைஞன். அழகான தங்கை அவன் பக்கத்தில். இளைஞனை திருமணம் செய்கிறாள்.

5) ஒவ்வொரு பூஞ்செடியாக வாடி செத்துவிடுகிறது. 

6) ஒரு நாள் சர்மிளா என்னும் உதவி எஞ்சினயருடன் கட்டிடம் பார்வையிடச் செல்கிறாள். திரும்பும்போது அந்தப் பெண் ஒரு விசயம் சொல்கிறாள். ‘வேண்டாத மனிதனின் மூச்சுக்காற்றுக்கு தாவரங்கள் வாடிவிடும்’ என்று. இவளுக்கு ஏன் தாவரங்கள் சாகின்றன என்பதற்கு விடை கிடைக்கிறது.

7) வீட்டுக்கு வந்து கணவன் சுமந்திரன் வருகைக்கு காத்திருக்கிறாள். என்ன பேசப்போகிறாள் என்பது வாசகரின் ஊகத்துக்கு விடப்படுகிறது.

8) கதையில் எந்த இடத்திலும் கதைசொல்லி ஓர் ஆண் என்று சொல்லவே இல்லை. வாசகர்கள் தாங்களாகவ அனுமானித்ததுதான்.  திரும்பவும் கதையை படித்தால் இது புரியும். 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta