கூந்தலழகி

சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற மருத்துவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. தான் பல வருடங்களுக்கு முன்னர் என்னுடைய ’கூந்தலழகி’ சிறுகதையை படித்திருந்ததாகக் கூறினார். அப்பொழுதுதான் அதை தேடிப் பார்த்தேன். ஒரு தொகுப்பிலும் அது சேர்க்கப்படவில்லை. எப்படியோ தவறிவிட்டது. என் கையிலும் பிரதியில்லை. பல மணிநேரமாக  இணையத்தில் தேடி அது மீண்டும் கிடைத்துவிட்டது.

இது 18 வருடங்களுக்கு முன்னர் எழுதிய கதை. கடைசி வரி சிலருக்கு புரியவில்லை. ஆகவே கதையும் புரியவில்லை. இந்தக் கதை எழுதிய சமயம் பிறந்த ஒரு குழந்தைக்கு இன்று வாக்களிக்கும் வயது வந்துவிட்டது. இப்பொழுதாவது கதை புரிகிறதா பார்க்கலாம். பத்துப்பேர் ‘கதை புரியவில்லை’ என்று எழுதினால் அதற்கு விளக்கம் அளிக்கலாம் என்று இருக்கிறேன். கீழே கதை.

 

 

 

மாமாவீட்டுபின்வளவில்எங்களுடையஉதைபந்தாட்டம்நடைபெறும். நல்லாகதேய்ந்து, மயிர்எல்லாம்போய், இனிதேய்வதற்குஇடமில்லாமல்வழுவழுவென்றுஇருக்கும்டென்னிஸ்பந்தில், சூரியன்முற்றாகஅஸ்தமித்தபிறகும்விளையாட்டுதொடரும். இதில்முக்கியமானவர்கள்நான், ரவி, சண்முகம்தான்.

 

ரவியும், சண்முகமும்உதைபந்தாட்டத்தில்மன்னர்கள். ரவிஒருபக்கமும்சண்முகம்எதிர்பக்கமுமாகநிற்பார்கள். நாங்கள்ஒருபத்துபேர்அவர்களைசுற்றிமுகத்தைபார்த்துக்கொண்டுகாத்திருப்போம். ரவிஒருபேரைச்சொல்லஅவன்ரவியின்பக்கம்போய்சேர்ந்துகொள்வான். சண்முகம்ஒருபேரைக்கூப்பிடஅவன்அந்தப்பக்கம்போவான். இப்படியாகஇரண்டு டீம்உருவாக்கப்படும்.

ஒவ்வொருமுறைஆள்தெரிவுசெய்யும்போதும்நான்துள்ளிதுள்ளிகையைகாட்டுவேன். இருந்தும்ஒருவரும்என்னைகண்டுகொள்ளமாட்டார்கள். இனிஒருவருமில்லைஎன்றநிலையில்கடைசியாகநான்சேர்க்கப்படுவேன்.

இப்படிநான்கடைநிலைக்குதள்ளப்பட்டதற்குஇரண்டுகாரணங்கள்இருந்தன:

1) ஒரேயொருமுறைஅசந்தர்ப்பவசத்தால்தன்சைட்கோல்போட்டது.

2) எதிரில்உருண்டோடிவரும்பந்தைஓங்கிஉதைக்கநான்எடுக்கும்அவகாசம்பந்துகாலைத்தாண்டிபோகஎடுக்கும்நேரத்திலும்பார்க்ககூடியதாகஇருப்பது.

இருந்தாலும், விளையாட்டுமைதானத்துக்குஉடமைக்காரர்என்றமுறையில்என்னுடையமுக்கியத்துவத்தையாரும்மறுக்கமுடியாதபடிக்குஅடிக்கடிஅச்சுறுத்தியும், ஞாபகமூட்டியும்நிலைநிறுத்தநான்தவறவில்லை.

 

விளையாட்டுமுடிந்ததும்நாங்கள்மூன்றுபேரும்மாமாவீட்டுக்குபோவோம். சற்றுமுன்புவரைவளைந்தும், நிமிர்ந்தும், ஓடியும், உதைத்தும்செயல்பட்டஎங்கள்உடம்புஇப்பொழுதுவிறைப்புநிலையைஅடைந்துவிடும். மாமா சிரித்தமுகத்துடன்வரவேற்பார். பாதிஉண்டுமுடித்தசாப்பாடுகளும், இன்னும்சாப்பிடஉத்தேசித்திருக்கும்உணவுகளும், கம்பிவலைஅடித்தஅலுமாரியில்கண்பார்க்கக்கூடியதாகஇருக்கும். அவற்றில்சிலஎங்களுக்குதரப்படும். அதுதவிரஅவருடையபூஞ்சோலையில்விளையாடஅனுமதியும்கிடைக்கும்.

 

வீட்டின்உள்ளேயும், வெளியேயும்மாமாஅபூர்வமானதாவரங்களையும், கொடிகளையும், செடிகளையும்வளர்த்துவந்தார். இவற்றோடுஅவர்பலமணிநேரங்களைசெலவழிப்பார். நாங்கள்அங்கேபோனால்மாமாவுக்குஇன்னும்உற்சாகம்வந்துவிடும். ஒவ்வொருதாவரமாகஅறிமுகம்செய்துஅதனுடையஅன்றையமகிமைகளைவிளக்குவார்.

 

எப்பவும்பிரமிப்பைதருவது'நேற்று, இன்று, நாளை' என்னும்செடிதான். இந்தச்செடிமுதல்நாள்பூக்கும்போதுகறுப்புஊதாக்கலரில்பூக்கும்; இரண்டாவதுநாள்இதேபூமங்கியஊதாவாகமாறிவிடும். மூன்றாவதுநாள், நம்பமுடியாதபடிக்குவெள்ளைப்பூவாகியிருக்கும். எந்தஒருநேரத்திலும்மூன்றுகலரில்பூத்துகுலுங்கும். நான்பலகாலமாகஇந்தமரத்தில்மூன்றுநிறபூக்கள்பூப்பதாகநினைத்திருந்தேன்; இந்தமர்மத்தைவிடுவித்ததுமாமாதான்.

 

அடுத்துஎனக்குபிடித்ததுimpatient என்றமரம்தான். பொறுமைஇல்லாதஇந்தமரத்துடன்நான்பொறுமையாகவிளையாடுவதைமாமாபார்த்துக்கொண்டேஇருப்பார். யாராவதுகிட்டபோனால்இந்தமரத்தின்மொட்டுக்கள்பயத்தினால்வெடிக்கும். நான்அடிக்கடிதொட்டுபயம்காட்டிக்கொண்டுஇருப்பேன். மாமாவும்என்னுடன்சிலசமயம்சேர்ந்துவிளையாடுவார். நான்பார்க்காதநேரங்களில்மாமாஅந்தசெடிகளுடன்ரகஸ்யமாகசல்லாபிப்பதைஅவதானித்திருக்கிறேன். அதில்ஒருஅந்தரங்கமும்பாசமும்இருக்கும். வெகுகாலத்துக்குபிறகு, என்திருமணம்முடிந்தபின்புதான், மாமாமணமுடிக்காததன்காரணம்எனக்குதெரியவரும்.

 

அந்தக்காலத்தில்நான்பலநீண்டவார்த்தைகளைசேகரித்துவைத்திருந்தேன். 'நாழிகை, நாலாம்ஜாமம், உப்பரிகை, முப்பதுகாதம், கிருஷ்ணபட்சம், அத்தாணிமண்டபம், ஜலக்கிரீடை' என்றுவகைவகையானசொற்கள். இதனால்என்நண்பர்கள்மத்தியில்எனக்குபயமும், மரியாதையும்இருந்தது. எங்கள்மூவரையும்ஒன்றாகப்பார்க்கும்போதுமாமா'அடுப்புக்கட்டிகளே' என்றுதான்அழைப்பார்.

 

எங்கள்வீட்டில்பாம்புகளோடுவிளையாடுவதுதடுக்கப்பட்டிருந்தது. பாம்புகள்மாத்திரமல்ல. நாய், பூனை, கிளிஇவற்றோடுபழகுவதற்கும்அனுமதிகிடையாது. ஆனால்செடிவளர்ப்பதற்குமட்டும்தடைஇல்லை. இந்தச்சமயத்தில்மாமாபெரியஉதவிசெய்தார். எங்கள்ஆசையைதூண்டிவிட்டுஆளுக்கொருசெடியும்தந்தார். இதில்எனக்குதந்ததுநான்முந்திபிந்திபார்த்திராத, கேட்டிராதசெடி. ஆபிரிக்க  வயலட்.

 

ஒருசட்டியிலேஆறுஅங்குலத்திலும்குறைந்தஉயரமாகஅதுஇருந்தது. அதன்பெயருக்கும்அதற்கும்ஒருவிதசம்பந்தமும்கிடையாது. அதுஆபிரிக்காவில்மட்டுமல்லஉலகம்முழுவதும்பரவியசெடி. அதனுடையபூசிவப்பு, வெள்ளை, அடர்நீலம், வயலட்இப்படிபலவர்ணத்திலும்இருக்கும். எனக்குகிடைத்தசெடியின்பூநிறம்இளம்சிவப்பு. இந்தச்செடிவந்தபிறகுஎன்னிடம்அதிசயமானமாற்றம்ஏற்பட்டது. என்னுடையவிளையாட்டுநேரம்கணிசமாகக்குறைந்துசெடிவளர்க்கும்ஆசைகூடியதுஅப்போதுதான்.

அதுநடந்துஒருஇருபதுவருடம்இருக்கும். என்றாலும்என்னால்மாமாவைமறக்கமுடியாது. சமீபத்தில்நான்காதலில்அடிபட்டுவிழுந்தபோதுவந்துஉதவியவரும்அவர்தான். 'அடிபட்டது' என்றால்உண்மையானaccident தான்.

 

நான்காரைஓட்டிக்கொண்டுவந்தேன். எனக்குபக்கத்தில்இன்னொருகாரும்வேகமாகவந்தது. முன்னுக்குஇருந்ததுஒருகார்மட்டுமேபோகக்கூடியஒடுங்கியரோட்டு. பார்த்ததும்ஆசையைதூண்டக்கூடியவிதமானவழுவழுப்பானபாதை. என்கார்பாய்ந்தஅதேசமயம்பக்கத்துக்காரும்பாய்ந்தது.

 

அப்பொழுதுதான்விபத்துஏற்பட்டது. என்னஅழகானவிபத்து.

அந்தக்காரைஓட்டியவன்கர்வமானமுகத்துடன்இருந்தான். அவனுக்குப்பக்கத்திலேஒருதேவகன்னிகை. அவளுடையகூந்தலைப்போலநான்என்வாழ்நாளில்பார்த்ததில்லை. தண்ணீருக்குள்அமிழ்ந்துஇருக்கும்போதுமயிர்மிதப்பதுபோல, ஒருமயில்தோகைவிரித்தபாவனையில்புவியீர்ப்பைஎதிர்த்துபக்கவாட்டில்பரவியிருந்தது. என்னால்என்கண்களைபிடுங்கிஎடுக்கமுடியவில்லை. அவள், அவனுடையமனைவியாகஇருக்கமுடியாது. மனைவியின்முகம்அவளுக்குஇல்லை. காதலியாகவோ, தங்கையாகவோஇருக்கலாம். என்மனம்விபத்தைமறந்துவிட்டு'தங்கையாகஇருக்கட்டும், தங்கையாகஇருக்கட்டும்' என்றுபிரார்த்திக்கதொடங்கியது.

 

உடல்காயம்இல்லாதவிபத்து. என்றாலும்ஞாயிறுகாலைதோறும்நியூகுளொஸ்மினுக்கிபோட்டுதேய்த்து, தேய்த்துபளபளப்பாக்கியகார்நசுங்கிவிட்டது. இதுவிஷயமாகபலதடவைபொலீஸ்ஸ்டேசனுக்குபோகவேண்டிவந்தது. அப்பொழுதுமாமாவும்கூடவேவந்தார். சமரசப்பேச்சுக்கள்நடக்கும்போதேஅவருக்குஎன்மனதுபுரிந்துவிட்டது. அவர்தான்என்பெற்றோருக்குஎன்விருப்பத்தைஎடுத்துச்சொன்னார். என்வாழ்க்கையில்இதுபெரியதிருப்பம்என்பதுஅப்போதுஎனக்குதெரியவில்லை. சிறுதூறல்போட்டஒருகுளிர்காலநாளின்முன்மதியத்தில்எங்கள்திருமணம்நடந்துமுடிந்தது.

 

விபத்திலேசந்திப்புதொடங்கினாலும்நாங்கள்அவசரப்பட்டுமணந்துகொள்ளவில்லை. ஒருவரைஒருவர்புரிந்துகொள்வதற்குபோதியசந்தர்ப்பங்களைஉண்டாக்கிக்கொண்டோம். கடற்கரையில்உட்கார்ந்துமணிக்கணக்காகபேசினோம். புத்தகங்கள்பரிமாறிக்கொண்டோம்; இலக்கியம்பற்றிவிவாதித்தோம்.

 

ஆனால்ஒரேயொருசிறுகேள்வியைமட்டும்நான்கேட்கதவறிவிட்டேன்.

ஒருகதவு, இரண்டுஜன்னல், முக்கோணகூரையிலேஒருபுகைபோக்கி, சுருளாமல்மேலேபோகும்புகை, நீளமானமஞ்சள்பாதை, மறைகிறதோ, எழுகிறதோஎன்றுகுழப்பம்தரும்அரைச்சூரியன், இறகைவிரித்துப்பறக்கும்சிவப்புபறவைகள்: இவைதான்அந்தவீடு. அவருடையசிறியமகளோ, மகனோவரைந்தஅந்தவீட்டுபடத்துக்குகீழேதான்எங்கள்அலுவலகத்தின்பாரதூரமானதிட்டங்கள்போடும்'திங்கள்காலைகூட்டம்' நடைபெறும். சேர்மன்ஒருநீலவரைபடத்தைகாட்டிகம்பனிநிலவரத்தைவிவரித்துக் கொண்டிருந்தார். என்னுடையமனம்வெள்ளிக்கிழமைமாலைஆவேசத்துடன்மல்லிகைச்சரம்அறுக்கப்பட்டசம்பவத்தில்தொடங்கி, சனிகாலை, மாலை, ஞாயிறுஇரவு, திங்கள்அதிகாலைஎன்றுஒவ்வொருகாட்சியாகஅடுக்காக, நிறுத்தி, நிறுத்திலயித்துக்கொண்டிருந்தது.

 

பெரிதாகcivil works என்றசொல்உச்சரிக்கக்கேட்டு  நான்திடுக்கிட்டபோதுஒருசிவப்புபடத்தைகாட்டிசேர்மன்விளக்கிக்கொண்டிருந்தார். நீலம்எப்பொழுதுசிவப்பாகமாறியதோ தெரியவில்லை. அந்திரக்கிலேஸின்சிங்கம்போலஇவருடையஞாபகசக்திஅபாரமானது. சென்றதிங்கள்தொடர்கட்டடமேற்பார்வைக்குபணிக்கப்பட்டிருந்தேன். வேறுவிஷயங்களால்நிரம்பியிருந்தஎன்மூளையிலிருந்துஅதுநழுவிவிட்டது. கையிலேmarker உடன்ஒருகொழுக்கவைக்கப்பட்டகடல்ஆமைஅபூர்வசக்திபெற்றுநிமிர்ந்துநிற்பதுபோலஅவர்நின்றபடிக்குஎன்னைஉற்றுப்பார்த்தார்.

 

இந்தக்காலங்களில்நான்என்னைமறந்தநிலையில்இருந்தேன். நான்ஆசையாகவளர்த்தசெடிகளும், கொடிகளும்இடம்பெயர்ந்துகொண்டிருந்தன. சட்டியில்வளர்க்கும்செடிகளுக்குஅவைஇருக்கும்இடம்பிரதானமானதென்பதுஒருமுழுமூடனுக்கும்தெரியும். புதுமணமோகத்தில்நான்கவனிக்காமல்விட்டவிஷயங்களில்இதுவும்ஒன்றாகிவிட்டது.

 

நான்மூன்றுவயதாயிருந்தபோதுஎன்மண்டையில்பட்டகாயத்தில்ரத்தம்ஒழுகியபோதுமாமாதூக்கியதில்அவர்சேட்டில்ரத்தக்கறைபட்டிருந்தது. இந்தசம்பவம்என்ஞாபகத்தில்இருந்துமறைந்துவிடும்என்றுபயந்துஅடிக்கடிதனதுரத்தக்கறைசேட்டைமாமாகாட்டுவார். எனக்குஆச்சரியம்  தாங்காது. ரத்தக்கறையைபார்த்தல்ல. கோமாளித்தனமானநாவல்பழகலர்சேட்டைஅவர்இன்னும்பத்திரப்படுத்திவைத்திருந்ததுதான்.

 

மாமாவீட்டைப்பார்த்துஎன்வீட்டையும்ஒருபூஞ்சோலைபோலவேஅமைத்திருந்தேன். எங்கேபார்த்தாலும்தொட்டிகளிலும், சட்டிகளிலும்தாவரங்கள், கொடிகள், செடிகள்என்றுநிறைந்திருக்கும். இரண்டுகைகளையும்தொங்கவிட்டபடி, அந்தசுவாத்தியத்துக்குமுற்றிலும்பொருந்தாதமோசமானமுரட்டுநாவல்பழஉடையில்மாமாதிடீரென்றுஒருநாள்வந்தார். வீட்டுக்காற்றைமுகர்ந்துபார்த்தார். அவர்முகம்சுருங்கியது. அப்போதுதான்எனக்கும்ஏதோஒன்றுஉறைத்தது. என்னவென்றுதொட்டுசொல்லமுடியவில்லை. வழக்கமாகமாமாவந்தால்நான்வளர்க்கும்செடிகளைவியந்துஅவர்முகத்தில்ஒருசெழிப்புஉண்டாகும்.

 

ஆனால்இந்தமுறை, வட்டமானகண்ணாடிதொட்டிக்குள்வளர்க்கும்மீனைப்போல, அவருடையமுகம்பம்மிப்போய்இருந்தது. ஏதோஒருயோசனைஅவரைவாட்டியது. அதைஎன்னுடன்பகிர்வதற்குஅவர்பிரியப்படவில்லைபோலும். ஒருவிலங்கின்கழிவைவிலக்கிநடப்பதுபோலஓர்அருவருப்புடனும், அவசரத்துடனும்என்னைத்தாண்டிபோனார். பிறகுஎன்னநினைத்தாரோதிரும்பிவந்துசிறுவயதில்செய்வதுபோலஎன்தலையை'அடுப்புக்கட்டி' என்றுசொல்லிதடவிவிட்டுசென்றார். அந்தச்சிறுசெய்கைஎன்மனதைஎன்னவோசெய்தது.

 

மாமாதந்தஆபிரிக்க  வயலட்என்னிடம்பலவருடகாலமாகஇருந்தது. இதுதான்எனக்குக்கிடைத்தமுதலாவதுசெடி. இதுபலமாதங்கள்தூங்கும். திடீரென்றுஒருநாள்காலையில்ஆரவாரமில்லாமல்பூத்துவிடும். அந்தப்பூஇரண்டுமாதம்வரையில்செடியில்வாடாமல்இருக்கும். பிறகுபழையபடிதூங்கப்போய்விடும். அதுஎப்பொழுதுதூங்கும், எப்பொழுதுபூக்கும்என்பதுமர்மம். இந்தச்செடியில்ஓர்இலையைகிள்ளிநட்டுவிட்டால்போதும். அதுமுளைத்துஇன்னொருசெடியாகிவிடும். எனக்குத்தெரிந்துஇலையில்இருந்துமுளைக்கும்செடிஇதுஒன்றுதான். இப்பொழுதுஎன்னிடம்இருப்பதுமாமாதந்தசெடியின்மூன்றாவதுதலைமுறை.  இந்தச்செடி சூரியஒளிநேராகப்படாதஒருஜன்னல்விளிம்பில்கடந்தஆறுவருடங்களாகவசித்தது. அதற்குஇந்தஇடம்மிகவும்பிடித்திருந்தது. அதைத்தான்இன்றுகாணவில்லை. இடம்பெயர்ந்துவிட்டது.

 

வீட்டிலேவளர்ப்பதற்குஏதுவாகஒருசிறியஅந்தூரியம்செடியும்என்னிடம்இருந்தது. அழகானசெடி. மொடமொடவென்றுபூரணமாகவிரித்தஇலைகள்நடுவேஇந்தப்பூஇரத்தச்சிவப்புநிறத்துடன்அண்ணாந்துபார்த்தபடிநிற்கும். முதல்வெளிச்சம்இதற்குமிகவும்அவசியமானது. கிழக்குப்பார்த்துகிடக்கும்ஜன்னலில்இதுஇருந்தது.

ஒருநாள்இந்தச்செடியையும்காணவில்லை.

 

என்வீட்டுதாவரங்களுக்குபெயர்கள்இருந்தன. இவைஎல்லாவற்றின்பெயரும்எனக்குபாடம். பெயர்தெரியாதவற்றுக்குநான்எனக்குவசதியானஒருபேரைசூட்டியிருப்பேன். ஒவ்வொருநாள்காலையிலும், மாலையிலும்நான்ஒருசுற்றுவந்துஅவற்றைபார்வையிடவேண்டும். அல்லாவிட்டால்அவைமனதுஒடிந்துபோகும்.

 

கூந்தலழகிஎன்றுஒருகொடிக்குபேர். ஒருகன்னியின்கூந்தல்போலஇதுநாலாபக்கமும்படர்ந்துபோய்ஆடிக்கொண்டிருக்கும். (பிற்காலத்தில்இதனுடையஉண்மையானபெயர்maiden hair என்பதுஎனக்குத்தெரியவரும்.) கொசுவலைபோலமெல்லியதாகதொட்டதும்உடைந்துபோகும்தன்மைஉடையது. கோடைகாலத்தில்குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில்வெப்பமாகவும்இருக்கும். மிகவும்பொறாமைகொண்டது. இதற்குப்பக்கத்தில்வேறுஒருசெடியும்இருக்கக்கூடாது. இந்தக்கொடிஇப்போதுசோபைஇழந்துகொண்டுவந்தது.

 

துர்ஆவியொன்றுஇறங்கியதுபோலஎன்னுடையவீடுஒருபுதியநெடியைகொடுக்கத்தொடங்கியிருந்தது. தாவரங்களும், பூமரங்களும்என்னிடம்அன்னியப்பட்டுவிட்டதுபோலகாணப்பட்டன. காலையில்எழும்பும்போதெல்லாம்ஏதோஉற்பாதம்அன்றுநடக்கப்போவதுபோலஎன்மனதுஅடித்துக்கொண்டது.

 

நான்மணமுடித்துமூன்றுமாதங்கள்கூடஆகவில்லை, செடிகள்ஒவ்வொன்றாகசெத்துக்கொண்டுவரத்தொடங்கின. முதலில்போனதுசூரிய  வெளிச்சத்தைமுதலில்தரிசிக்கும்அந்தூரியம்தான். ஒருநாள்காலைஅதுவாடிக்கிடந்தது. அதைத்தொடர்ந்துமணிக்கொடிகள், குரோட்டன்கள், சிலந்திசெடிகள், கத்தாளை, பாட்டுப்பெட்டிபூமரம்எல்லாம்ஒன்றன்பின்ஒன்றாகஅவசரத்துடன்போயின. நான்ஏதோசதிசெய்துவிட்டதுபோலஉணரத்தொடங்கினேன்.

 

இப்பொழுதுதப்பிநிற்பதுஇரண்டேஇரண்டுதான். புள்ளிக்குரோடனும், கூந்தலழகியும். நான்சிறுவயதாயிருந்தபோதுமாமாகொடுத்து, இவ்வளவுகாலமும்அருமையாகவளர்த்துவந்தஆபிரிக்கவயலட்டும்ஒருநாள்இறந்துவிட்டது.

 

நடுநிசிஇருக்கும். யாரோ'தண்ணீர், தண்ணீர்' என்றுதீனமாகமுனகியதுகாதிலேவிழுந்தது. படுக்கையில்இருந்துஎழுந்துநேரேகூந்தலழகியிடம்போனேன். விரிந்து, படர்ந்துவழக்கமாகதகதகவென்றுஇருக்கும்செடிசோர்ந்துபோய்கிடந்தது. நுனியில்இருந்துஅதனுடையநூல்போன்றஇலைகள்கருகிக்கொண்டுவந்தன. பக்கத்திலேயேகிடந்ததண்ணீரைஒருமிருகத்தைப்போலவோ, பறவையைப்போலவோதானாகவேநகர்ந்துகுடிக்கஅதனால்முடியாது. யாராவதுஊற்றினால்தான்உண்டு. கொஞ்சம்தண்ணீரைசாய்த்துஅதைதடவிவிட்டேன். காலம்கடந்தமுயற்சிஎன்றுபட்டது.

 

நான்வேலைபார்த்தநிறுவனத்தில்சர்மிளாஎன்றபெண்எஞ்சினியராகவேலைக்குசேர்ந்திருந்தாள். இவளைஎனக்குஜூனியராகப்போட்டிருந்தார்கள். பத்திரப்படுத்தப்பட்டஅழகு; திரவமானகண்கள். அறிவுத்தாகம்கொண்டஇவள்இலகுவாகசிரித்தாள். கையிலோ, கழுத்திலோ, காதிலோஒருவிதஆபரணமுமில்லை. கூந்தல்அடங்காமல்இருந்ததால்ஒருரப்பர்வளையத்தைபோட்டுஇறுக்கிஅதைஅடக்கிஆண்டுகொண்டிருந்தாள். இவளைஎனக்குப்பிடித்திருந்தது.

 

இனியும்தள்ளிப்போடமுடியாமல்தொடர்கட்டடவேலையைமேற்பார்வைபார்க்கபோனபோதுஅந்தச்சம்பவம்நடந்தது. போனவேலையைசீக்கிரமாகவேமுடித்துவிட்டுசர்மிளாவும், நானும்திரும்பிக் கொண்டிருந்தோம். அவளுடையஅருகாமையில்என்மனம்லேசாகவிருந்தது. கார்காட்டுப்பாதையில்விரைந்துகொண்டிருந்தது.

 

கிரேக்கபுராணங்கள்பற்றியும், தேனீக்களின்நடனம்பற்றியும்நீண்டநேரம்பேசினாள். எந்தவிஷயத்தைஎடுத்தாலும்அதைஆழமாகவும், உணர்ச்சியோடும்அலசினாள். இவளிடத்தில்ஆச்சரியங்கள்பலஇருந்தன. நேரம்போனதே தெரியவில்லை.

 

திடீரென்று'நிறுத்துங்கள், பிளீஸ்' என்றாள். கிறீச்சென்றுகார்நின்றபிறகுதான்அவள்கத்தியதன்காரணம்புரிந்தது. காட்டுமுயல்ஒன்றுநடுவீதியில்லொறியிலோ, காரிலோஅடிபட்டு, சதைஎல்லாம்தரையோடுஅரைபட்டுரத்தம்உறையசெத்துப்போய்கிடந்தது.

 

கார்கண்ணாடியில், 'தூரத்துபிம்பங்கள்அருகாமையில்தெரியும்' என்றுஎழுதியிருந்தது. அந்தமுயலின்சடலம்கண்ணாடியில்வெகுநேரம்அருகில்தெரிந்தது. பிறகுதிடீரென்றுவிளிம்பில்மறைந்துவிட்டது. அவள்மெளனமாகவந்தாள். கண்கள்கவிழ்ந்திருந்தன. அடிக்கடிஇமைகளைவெட்டிக்கொண்டிருந்தாள். ஒருநொடியில்உற்சாகம்எல்லாம்வடிந்துவிம்மிஅழத்தொடங்கிவிட்டாள்.

'சர்மிளா, இதுஒருவிபத்து; இதைப்பெரிதுபடுத்தலாமா? என்றேன்.

'இதுவிபத்தல்ல, கவனக்குறைவு. இந்தமனுசசாதிஒருபோதும்மற்றஜீவராசிகளுடன்இந்தபூமியைபகிர்ந்துகொள்ளமாட்டாது. '

 

'ஏதோநடந்துவிட்டது. இப்பஅழுதுஎன்னபிரயோசனம். கண்ணீரைதுடையும்' என்றுசொல்லிவிட்டுஎன்கைவிரல்களைமேக்கப்இல்லாதஅவளுடையமுகத்திற்குசமீபமாககொண்டுபோனேன். அப்பொழுதும்அவள்தணியவில்லை. ' இந்தமிருகங்களும், தாவரங்களும்மனிதர்களைஎவ்வளவுவெறுக்கின்றனதெரியுமா? மனிதனைக்கண்டாலேமிருகங்கள்ஓடிஒளிந்துகொள்கின்றன. சிலதாவரங்கள்வேண்டாதமனிதனின்மூச்சுக்காற்றுபட்டாலேவாடிவிடும். எவ்வளவுகொடுமை! '

 

நல்லசிவப்புமாம்பழத்தில்ஒருசின்னஅழுகல்விழுந்ததுபோலஒருமச்சம், அதைத்துடைத்துவிடகையைத்தூண்டவைக்கும்விதமாக, அவளதுவலதுகன்னத்தின்நடுவில்இருந்தது. மாட்டின்சருமத்தில்தொடமுன்பேசதைதுடிப்பதுபோலஎன்னுடையஎண்ணத்தைஉணர்ந்ததுபோலஅவளுடையகன்னம்அந்தக்கணம்துடித்தது. கண்ணீர்அவள்முகத்தில்வழிந்தோடியது. சேலைதாவணிபடபடவென்றுகட்டுக்கடங்காமல்அடித்தது. காட்டுக்காற்றுஅவள்மேல்பட்டுஎன்னிடம்வரும்போதுபுதுவாசனையுடன்வந்தது. கோபித்துக்கொண்டதுபோலஅவள்மார்புகள்தனித்தனியாகதள்ளிநின்றன. அவள்உதடுகள்இன்னமும்ஒருசிறுபறவையின்இதயம்போலதுடித்துக்கொண்டிருந்தன.

 

வளையல்இல்லாதஅவளுடையகரங்களைப்பார்த்தேன். மெல்லியரோமம்படர்ந்துபோய்அவளுடையநீண்டவிரல்களில்முடிந்தது. மெல்லஅந்தவிரல்களைதடவிஅவளுக்குஆறுதல்சொல்லவேண்டும்போலஎனக்குபட்டது.

ஆனால்அதற்குஇப்போதுநேரமில்லை. அதனிலும்முக்கியமானஒருவேலைஎனக்குகாத்திருந்தது.

 

சர்மிளாவைஇறக்கிவிட்டுஅவசரமாகஎன்னுடையவீடுவந்துசேர்ந்தேன். ஞாபகமாககதவைதிறந்துமூடாமலேயேவிட்டேன். என்னுடன்வந்தசூரியவெளிச்சம்வாசலிலேயேநின்றுவிட்டது. வீட்டினுள்ளேவெப்பவாடைவீசியது. புள்ளிகுரோட்டன்இலைஎல்லாம்உதிர்த்துவெறும்தண்டாகநின்றது. கூந்தலழகிமுற்றிலும்செத்துவிட்டது. பசுமைநிறைந்திருந்தவீடுஇப்போதுமுற்றிலும்ஒருகாடாகமாறியிருந்தது.

 

நான்தயாராகினேன். சமையலறையில்சென்றுகோப்பிசெய்தேன். கையில்சிறுநடுக்கம். எந்தநேரத்திலும்கார்வந்துநிற்கும்சத்தம்கேட்கலாம். நான்தயாராகினேன். சாய்வுநாற்காலியில்கால்மேல்கால்போட்டுசாய்ந்துஉட்கார்ந்தேன். கார்கதவுஅடித்துசாத்தும்சத்தம். நடைபாதையில்நடக்கும்ஒலி. கோப்பையைகையிலேஎடுத்தேன். என்னுடையஆள்காட்டிவிரலும், பெருவிரலும்தேவைக்குஅதிகமானபலத்துடன்அந்தக்கோப்பையின்சிறியகைப்பிடியைஅழுத்திப்பிடித்தன. சாவதானமாககோப்பியைஉறிஞ்சிக்குடித்தேன், சிறுநடுக்கமும்தெரியாமல். கதவுவீசித்திறந்தது. நான்தயாராகினேன்.

 

கர்வமானமுகத்துடன்என்கணவர்என்முன்னால்வந்துநின்றார். நான்அசையவில்லை. மிகஅமைதியாக,’சுமந்திரன், உங்களுடன்கொஞ்சம்பேசவேண்டும்' என்றேன்.

 

END

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta