Authoramuttu

கல்வீட்டுக்காரி

கல்வீட்டுக்காரி அ.முத்துலிங்கம் தன்னிலும் பார்க்க தன் மனைவி பல மடங்கு சாப்பிடுவார் என்பதை கண்டுபிடிக்க அவருக்கு 20 வருடங்கள் எடுத்தன.  அவர் ஒன்றும் சொந்த மனைவி சாப்பிடுவதற்கு எதிரியல்ல. நல்ல மனுசர்.  எதற்காக அவரிடமிருந்து மனைவி மறைத்தார்? பசிக்கு சாப்பிடுவதும் ஒரு குற்றமா? ’நான் உம்முடைய புருசன்தானே. இதிலே என்ன ஒளிவுமறைவு’ என்றார். ஒரு வருடமா? இரண்டு வருடமா? 20 வருடங்களாக அவரிடமிருந்து...

யானையின் சம்பளம்

யானையின் சம்பளம் அ.முத்துலிங்கம் வேறு வழியில்லை. யானையை கொண்டு வரவேண்டும் என்று சொன்னது லலித் ஜெயவர்த்தனாதான். எப்படி? ‘நான் கொண்டு வருகிறேன். இது கூடச் செய்ய முடியாதா?’ என்றான். எல்லா பிரச்சினைகளுக்கும் அவனிடம் தீர்வு இருந்தது. அநேக சமயங்களில் பிரச்சினையை உண்டாக்குவதும் அவனாகவே இருக்கும். லாம்ரெட்டா கம்பனி ஆரம்பித்தபோது இளம்வயது பயிற்சியர் தேவைப்பட்டார்கள். கடைநிலை வேலை; சம்பளம் குறைவு. ...

காலைத் தொடுவேன்

காலைத் தொடுவேன் (நிதி திரட்டிய அனுபவங்கள்) அ.முத்துலிங்கம் ஹார்வர்ட் தொடக்கம் அமெரிக்காவில் இரண்டு பெருந்தகைகள்,  மருத்துவர் விஜய் ஜானகிராமனும் மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தமும் தமிழ் இருக்கை தொடர்பாக ஆர்வத்தோடு ஹார்வர்டு அதிகாரிகளைச் சந்தித்தபோது நானும் கூட இருந்தேன். ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கி நிதி திரட்டலை ஆரம்பித்து வைத்தார்கள். தேவையான இலக்கு 6 மில்லியன் டொலர்கள். அது...

இல்லை என்பதே பதில்

இல்லை என்பதே பதில் அ.முத்துலிங்கம் தொடக்கம் பெர்சி ஸ்பென்சர்  என்பவர் 5ம் வகுப்பு மட்டுமே படித்த ஓர் அமெரிக்கர். இவர் பின்னர் தானாகவே கற்றுக்கொண்டு  விஞ்ஞானி ஆனார். 1945ல் ஒரு குளிர்கால பகல் நேரத்தில் கதிர் அலை பற்றிய பரிசோதனை முடிவில் அவர் சட்டைப் பையில் இருந்த சொக்கலெட் உருகிவிட்டது. அது ஏன் நடந்தது என்று வியப்பு மேலிட  தொடர்ந்து ஆராய்ச்சி செய்து நுண்ணலை அடுப்பை கண்டுபிடித்தார்...

ஆட்டுப்பால் புட்டு

ஆட்டுப்பால் புட்டு                    அ முத்துலிங்கம் இதுவெல்லாம் நடந்தது சிலோனில்தான், ஸ்ரீலங்கா என்று பெயர் மாற்றம் செய்ய முன்னர். அப்பொழுதெல்லாம் ’தபால் தந்தி சேவை’ என்றுதான் சொன்னார்கள். அலுவலகம், அஞ்சல் துறை, திணைக்களம் போன்ற பெரிய வார்த்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தினம் யாழ்தேவி கொழும்பிலிருந்து...

பவா செல்லத்துரை சொன்ன கதை

பவா செல்லத்துரையை
தமிழ் பேசும் உலகில் அறியாதவர் சிலரே.சிறுகதை எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர்,நடிகர்
என பன்முகம் கொண்டவர். இதைத்தவிர இந்த நூற்றாண்டின் மாபெரும் கதைசொல்லி அவர். ரொறொன்ரோ
பல்கலைக்கழக தமிழ் இருக்கை நிதிசேர் நிகழ்வில் பங்குபெற விரைவில் கனடா வர இருக்கிறார்.
மாதிரிக்கு ஒரு கதை கீழே.

காலைத் தொடுவேன் – நிதி சேகரிப்பு அனுபவங்கள்

காலைத் தொடுவேன் – (நிதி சேகரிப்பு அனுபவங்கள்)  அ.முத்துலிங்கம் ஹார்வர்ட் ஹார்வர்ட் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை ஆரம்பித்தபோது அந்தக் குழுவில் நானும் இருந்தேன். அமெரிக்காவைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் ஆரம்ப நிதி கொடுத்து தமிழ் இருக்கைக்கான சம்மதத்தை பெற்றுவிட்டார்கள். நிதியை பெற்றுக்கொண்ட அதிகாரியின் மனதில் என்ன இருந்தது என்பது ஒருத்தருக்கும் தெரியாது. ஆறுமாதம் கழித்து அந்த மருத்துவர்களுடன்...

நேர்காணல் – இந்து

நேர்காணல் – அ.முத்துலிங்கம் ஏன் எழுதுகிறீர்கள்? உலகத்தை மேம்படுத்துவதற்காக என்றெல்லாம் சொல்லப்போவதில்லை. முதல் காரணம் எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான். இதே கேள்வியை 500 புத்தகங்கள் எழுதிய அறிவியல் எழுத்தாளரான ஐஸக் அசிமோவிடம் கேட்டார்கள். அவர், ‘வேறு என்ன? என்னுடைய டைப்ரைட்டரில் அடுத்து என்ன வார்த்தை வந்து விழுகிறது என்பதை பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்’ என்றார். அவர் என்ன...

நேர்காணல் – அந்திமழை

கொக்குவில் முதல் கனடா வரையிலான பயணம்: பெற்றது என்ன ? இழந்தது என்ன? பயணத்தில் பெறும் அனுபவத்திற்கு ஈடு அதுதான். கொக்குவில என்ற சின்னக் கிராமத்தில் பிறந்த நான் பயணங்களின்போது நிறையக் கற்றுக்கொண்டேன். நூறு புத்தகங்கள் படிப்பதும் சரி ஒரு புதியவரை  சந்திப்பதும் ஒன்றுதான். ஒவ்வொரு மனிதரை சந்திக்கும்போதும் அவரிடமிருந்து ஏதாவது ஒரு நல்ல குணாதிசயத்தை நான் பெற்றுக்கொள்ள முயல்வேன். உலகத்தின் தலை சிறந்த...

ஓடுகிற பஸ்

                               ஓடுகிற பஸ்சில் ஏறவேண்டும் தினக்குரல் பாரதி செவ்வி தமிழ் இருக்கை அமைக்கவேண்டிய பாரிய பணியை நீங்கள் பொறுப்பேற்று முன்னெடுக்கின்றீர்கள். இந்த முயற்சியில் இறங்கவேண்டும் என்ற உணர்வு – எண்ணம் உங்களுக்கு எப்படி – ஏன்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta