Categoryசிறுகதைகள்

வந்துவிடு, டுப்புடு

வந்துவிடு, டுப்புடு அ.முத்துலிங்கம் கலியோப் தேன்சிட்டு இருக்கிறது. திடீரென்று அதை என் வீட்டு தோட்டத்தில் காணலாம். எப்பொழுதும் இதன் வருகையை நான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். ஒரு நாள் வரும். அடுத்த நாளும் வரும். பின்பு பல நாட்களுக்கு காணாமல் போய்விடும். மறுபடியும் ஒருநாள் எதிர்பார்க்காத சமயம் வரும். முன்னுக்கும் பின்னுக்கும் பறந்தபடியேநீண்ட அலகுகளால் தேன் குடிக்கும். சிலநேரம் அப்படியே ஒரே...

செர்ரி மரம்

செர்ரி மரம் அ.முத்துலிங்கம் இன்று காசு எண்ணும் நாள். என்னுடைய வருமானத்தையும், அப்பாவுக்கு தோட்ட வேலையில் கிடைக்கும் காசையும் ஒன்றாகப் போட்டு எண்ணுவோம். பின்னர் அதை அப்பா வங்கிக்கு எடுத்துச் சென்று கடனைக் கட்டுவார். அப்பொழுது என்னை ஒருவிதமாகப் பார்ப்பார். மனதைப் பிசைந்து ஏதோ செய்யும். நான் வாழ்க்கையில் ஒன்றையுமே பெரிதாக சாதித்தவள் அல்ல. என் பெயரைத் தெரிந்து ஒன்றுமே ஆகப்போவதில்லை. படிப்பிலோ...

பிரதாப முதலியார்.ச  

                          பிரதாப முதலியார்.ச அ.முத்துலிங்கம் அன்று அவனைச் சந்தித்திருக்காவிட்டால் இது நடந்திருக்காது. காலையில் கொக்குவில் ரயில் ஸ்டேசனுக்கு  வந்திருந்தான். வயது 12 இருக்கும். ஏதோ பெரிய ஆள்போல இவன் முன்னுக்கு நடந்துவர, பின்னால் தள்ளுவண்டியில் ஒரு மூட்டையை தள்ளிக்கொண்டு ஒருவன் வந்தான். இவன்தான் சொந்தக்காரன்போல இருந்தது. ஸ்டேசன் மாஸ்டர் கொடுத்த படிவத்தைப் பெற்று அதை ஆங்கிலத்தில்...

ஒரு மணிநேரம் முன்பு

ஒரு மணி நேரம் முன்பு அ.முத்துலிங்கம் உன்னைக் கண்டதும் கடைக்காரன் மேல் உதட்டை மடித்து நாய் போல பற்களைக் காட்டினான். உறுமுவதுபோல என்ன  வேண்டுமென்று கேட்டான். ‘ஐந்து சதத்துக்கு உப்பு’ என்று நீ சொன்னாய். உன் கையில் காசு இல்லை என்பது அவனுக்குத் தெரியும்.  ‘உன் அம்மாவிடம்  12 ரூபாய் 30 சதம் அவ தரவேண்டும் என்று சொல்’ என்றான். நீ மேலும் கொஞ்ச நேரம் நின்றாய். அவன் உன்னை ’ஓடு ஓடு’ என்று விரட்டினான். நீ...

மாவோவுக்காக ஆடை களைவது

மாவோவுக்காக ஆடை களைவது தைலா ராமானுஜம் மொழிபெயர்ப்பு: அ.முத்துலிங்கம் ‘அம்மா, ஹொட்டல் தொலைபேசி எண்ணை எந்த நேரமும் ஞாபகமாக உன் கைப்பையில் வைத்திரு. உன்னை எனக்குத் தெரியும். விட்டுவிட்டு எரியும் நியோன் விளக்கு அம்புக்குறி இருந்தால்தான் உன்னால் கழிவறையை கண்டுபிடிக்கமுடியும்.’ ‘மகளே, இதற்கு முன்னர் நான் வெளிநாட்டுக்கு பயணமே செய்ததில்லையா?’ ‘அம்மா, ஆசியா புடாபெஸ்ட் இல்லை; அங்காரா இல்லை. மன்னிக்க...

ஸ்டைல் சிவகாமசுந்தரி

ஸ்டைல் சிவகாமசுந்தரி   அ முத்துலிங்கம்   யாழ்ப்பாணம் டவுனுக்குப் போவதற்கு பஸ் டிக்கட் 10 சதம்தான். கொக்குவில் என்றால் 50 சதம். வவுனியாவுக்கு 4 ரூபா; கொழும்புக்கு 12 ரூபா. கொழும்புத்துறைக்கு ஒன்றுமே கொடுக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவள்வீடு அங்கேதான் இருந்தது. பெயர் சிவகாமசுந்தரி. வயது 15. படித்த பள்ளிக்கூடம் வேம்படி. வருடம் 1965.   தினமும் அவளுடைய அப்பா அவருடைய காரில் அவளை...

என்னைத் திருப்பி எடு

என்னைத் திருப்பி எடு அ.முத்துலிங்கம் ஒரு பேச்சுக்குத்தான் அவன் அப்படிக் கேட்டான். மிதிலாவுக்கு அது பிடிக்கவில்லை. அவள் வழக்கம்போல ஒன்றுமே பேசவில்லை. ஆனால் முகம் வேறு யாருடையவோ முகம் போல நாலு கோணத்தில் மாறிவிட்டது. மேல் கோட்டின் நாலாவது பட்டனை வலது கையால் போட்டுக்கொண்டு, இடது கையால் கைப்பையை தூக்கினாள். அவள் வெளியே போனால் இந்தச் சண்டை முடிவுக்கு வராது. இரண்டு நாள் இப்படியே இழுக்கும். அவன் ஒன்றுமே...

குமர்ப்பிள்ளை

   குமர்ப் பிள்ளை                         அ.முத்துலிங்கம்   கீழே காணும் சம்பவத்தை படித்தவுடன் நீங்கள் நம்பினால் அது கற்பனை. நம்பாவிட்டால் அது உண்மை. நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.   வெளிநாட்டில் என் தொழிலை வளர்த்து நான் நிறையச் சம்பாதித்தேன். மனைவி போன பின்னர்...

லூனாவை எழுப்புவது

                      லூனாவை எழுப்புவது                                  ஆயிஷா காவாட் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி லூனா ஜேர்சி நகரத்திலுள்ள சுப்பர் 8 விடுதி அறை ஒன்றில் உறங்குகிறாள்...

இலக்கணப் பிழை

   இலக்கணப் பிழை                     அ.முத்துலிங்கம்   அன்புள்ள செயலருக்கு ’இலக்கணப் பிழை திருத்தி’ என்னும் செயலி பற்றிய விளம்பரம் படித்தேன்.  இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் எழுதவேண்டும் என்பது சிறுவயது முதலான என் ஆசை, லட்சியம், கொள்கை. அத்துடன் ஒரு முக்கியமான அம்சமும் இப்பொழுது...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta