Categoryசிறுகதைகள்

கோப்பைகள்

கோப்பைகள் அ.முத்துலிங்கம் ‘இதுவெல்லாம் நடந்ததற்கு காரணம் ஒரு மார்க்தான். அந்த ஒரு மார்க் கிடைத்திருந்தால் என் வாழ்க்கை எங்கேயெல்லாமோ போயிருக்கும். இப்படி நடக்கும் என்று அப்போது யாருக்கு தெரியும்? நீ இரண்டு மாதம் முன்புதான் இங்கு வேலைக்கு சேர்ந்தாய். நான் 15 வருடமாக இங்கே இதே இடத்தில் நின்றபடி கோப்பை கழுவுகிறேன். அப்பொழுதெல்லாம் இது சின்ன உணவகம். நான் மட்டும்தான் வேலை செய்தேன். இப்போதுபோல...

நான்தான் அடுத்த கணவன்

நான்தான் அடுத்த கணவன்   அ.முத்துலிங்கம்   ’பத்மப்ரியாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. என் உடம்பு முழுக்க இருதயமாகித் துடித்தது. உருண்டை உருண்டையான எழுத்து. நான் டெல்லி சிறையிலிருந்து மீண்டு கனடா திரும்பி ஒரு வருடம் ஆகியிருக்கும். எப்படியோ என்னுடைய முகவரியை தேடிக் கண்டுபிடித்து எழுதியிருக்கிறாள். இது எப்படி சாத்தியமானது? ஐயா, என்னால் நம்பவே முடியவில்லை. என்னை அப்படிப் பார்க்க...

சின்னச் சம்பவம்

சின்னச் சம்பவம் அ.முத்துலிங்கம் சின்னச் சம்பவம் என்று ஒன்றும் உலகத்தில் கிடையாது. வழக்கம்போல வாடகைக் கார் நிறுத்தத்தில் காரை நிறுத்தி வைத்துக்கொண்டு வாடிக்கையாளருக்கு காத்திருந்தேன். எனக்கு முன்னால் இரண்டு கார்களும் பின்னால் நாலு கார்களும் நின்றன. பகல் பத்து மணி. மே மாதம் என்பதால் குளிரும் இருந்தது. வெப்பமும் இருந்தது. அன்று கொஞ்சம் வெப்பம் வெற்றி பெற்ற நாள். ரொறொன்ரோவின் அலுவலக அவசரம்...

கடவுச்சொல்

 கடவுச்சொல்                          அ.முத்துலிங்கம்   அன்று காலை விடிந்தபோது அது அவர் வாழ்க்கையில் மிகவும் ஆச்சரியமான நாளாக மாறும் என்பது சிவபாக்கியத்துக்கு தெரியாது. செப்டம்பர் மாதத்தில் இலைகள் நிறம் மாறுவது பார்க்க அவருக்கு பிடிக்கும். அவர் வசித்த நாலாவது மாடி மரங்களின் உயரத்தில் இருந்தது இன்னொரு வசதி. யன்னலைத்...

போரில் தோற்றுப்போன குதிரைவீரன்

போரில் தோற்றுப்போன குதிரை வீரன் அ.முத்துலிங்கம் அடுத்து வரும் ஞாயிறில் இருந்து அவ னுடைய காதலியாக இருப்பதற்கு அவள் சம்மதித்துவிட்டாள். ஞாயிறு வருவதற்கு இன்னும் மூன்றே மூன்று நாட்கள் இருந்தன. அதுவரைக்கும் பொறுத்திருப்பது சிரமமான காரியம்தான். உடனேயே காதலி கிடைப்பதில் அவனுக்கு ஒரு தடை இருந்தது. தற்சமயம் அவளுக்கு ஒரு காதலன் இருந்தான். அவனுக்கு வேலை மாற்றலாகி 2000 மைல் தூரத்துக்குப் போகிறான். இனிமேல்...

அழகிய லைலா

அழகிய லைலா                           அழைப்பு மணியை அடித்து பிரயோசனமில்லை. கதவை கைகளாலும் கால்களாலும் உதைத்தான். உள்ளே ஒரு சத்தத்தையும் காணவில்லை. அவன் வேண்டுமென்றே திறக்காமல் இருக்கிறான். கதவு திறந்து ஒரு கணம் தோட்டு ரவியின் முகம் வெளியே நீட்டியது. நிஷாந் பேசத் தொடங்கினான். அடுத்த கணம் முகத்தை காணவில்லை. சாத்திய கதவுதான் முன்னால்...

ஓணானுக்கு பிறந்தவன்

ஓணானுக்கு பிறந்தவன்                         அ.முத்துலிங்கம்   அவனைப் பிடித்துவிட்டார்கள். கிரேக்க தேசத்தின் பாட்ரா எல்லையில் இரவு இரண்டு மணிக்கு. அவன் நின்ற இடம் இதற்கு முன்னர் லட்சக்கணக்கான பயணிகள் நின்று நின்று பள்ளம் விழுந்து தேய்ந்து கிடந்தது. அவன் உயரம்கூட ஓர் அங்குலம் குறைந்தே காணப்பட்டது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு...

போர்க்கப்பல்

  அ.முத்துலிங்கம் உணவு விசயத்தில் ஆச்சரியப்படக்கூடாது என்று பலவருடங்களுக்கு முன்னரே நான் முடிவு செய்திருந்தேன். வரலாற்று பிதாமகர் ஹெரொடோரஸ் ஒரு சம்பவம் சொல்கிறார். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாரசீக பேரரசன் டேரியஸ் தன் அவையில் பிரசன்னமாயிருந்த கிரேக்கர்களிடம் ஒரு கேள்வி கேட்டான். ’எவ்வளவு பணம் கொடுத்தால் இறந்த உங்கள் பெற்றோரை உண்பீர்கள்?’ அவர்கள் திகைத்துப்போய்...

எலி மூஞ்சி

எலி மூஞ்சி   அ.முத்துலிங்கம்   புதுச் சட்டம் வந்தபோது எல்லோரும் கூடிக்கூடி அது பற்றியே பேசினார்கள். ’மனித அடிப்படை உரிமை இது. அரசு எப்படி அதில் தலையிடலாம். வேற்று நாடுகளில் இப்படியான புதுச் சட்டம் கிடையாதே. அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருந்த காலம் போய்விட்டது. இப்போது பின்னோக்கி செல்கிறது. நாங்கள் போராடவேண்டும் என்றாள்’ ஒரு மாணவி. அவளுக்கு வயது 10. ’நான்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta