ArchiveJuly 2018

சந்திப்போம்

சந்திப்போம் அ.முத்துலிங்கம் நான் செழியனை முதன்முதலில் சந்தித்தது 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் நடந்த ஒரு விழாவில். என்னை ’அண்ணை’ என்று அழைத்தார். கூச்சமாக இருந்தது. நீண்ட காலமாக என்னை அப்படி ஒருவரும் அழைத்தது கிடையாது. அவர் குரல் கனிவாகவும், குனிந்து கிட்டக் கேட்கவேண்டும் என்பதுபோல மிருதுவாகவும் இருந்தது. உடனேயே ஓர் அந்நியோன்யம் எங்களுக்கிடையில் உண்டாகிவிட்டது.  அந்த முதல் சந்திப்பே என்னை...

முதலில் கட்டுங்கள், அவர்கள் வருவார்கள்

  முதலில் கட்டுங்கள், அவர்கள் வருவார்கள் பாலா சுவாமிநாதனுடன் ஒரு நேர்காணல் அ.முத்துலிங்கம்     (மதுரையை சேர்ந்த திரு பாலா சுவாமிநாதன் அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் கணினித் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். நியூயோர்க் நெடுந்தீவில் பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் ஆய்வாளராக பணியாற்றுகிறார். கடந்த மாதம் பல்லாயிரம் டொலர்கள் வைப்புக் கொடை அமைப்பதன் மூலம் நியூ யோர்க் ஸ்டோனி புரூக்...

ரயில் புறப்பட்டுவிட்டது

  ரயில் புறப்பட்டுவிட்டது     புனைவு என்ற வார்த்தையை, அதன் சாத்தியங்களை முழுமையாக எப்போது உணர்ந்தீர்கள்? அந்த கணம் நினைவிருக்கிறதா? நிச்சயமாக. எங்கே எந்த நேரத்தில் என்ன படித்தேன் என்பதும் நினைவில்  இருக்கிறது. கல்கி, மு.வரதராசனார், காண்டேகர் எல்லோரையும் படித்துவிட்டேன். புதுமைப்பித்தன் இரவலாகக் கிடைத்து முதன்முதலாக ‘பொய்க்குதிரை’ சிறுகதையை படிக்கிறேன். அப்படியே சில நிமிடம் திகைத்து...

ஊபர்

ஊபர் அ.முத்துலிங்கம் சிலருக்கு  எங்கே போனாலும் ஒரு பிரச்சினை வரும். சிலர் பிரச்சினையை தங்களுடன் எடுத்துக்கொண்டு செல்வார்கள். நான் இரண்டாவது வகை. எங்கே போனாலும் என் கைப்பைபோல பிரச்சினையும் வந்துவிடுகிறது. இப்பொழுது பொஸ்டனுக்குப் போனபோதும் இப்படி நடந்தது. ஒருநாள் காலை நண்பரிடமிருந்து அழைப்பு ஒன்று வந்தது. ’ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திருக்கிறோம். வரமுடியுமா?’ வழக்கம்போல  சரி என்று சொல்லிவிட்டு...

பிரதாப முதலியார்.ச  

                          பிரதாப முதலியார்.ச அ.முத்துலிங்கம் அன்று அவனைச் சந்தித்திருக்காவிட்டால் இது நடந்திருக்காது. காலையில் கொக்குவில் ரயில் ஸ்டேசனுக்கு  வந்திருந்தான். வயது 12 இருக்கும். ஏதோ பெரிய ஆள்போல இவன் முன்னுக்கு நடந்துவர, பின்னால் தள்ளுவண்டியில் ஒரு மூட்டையை தள்ளிக்கொண்டு ஒருவன் வந்தான். இவன்தான் சொந்தக்காரன்போல இருந்தது. ஸ்டேசன் மாஸ்டர் கொடுத்த படிவத்தைப் பெற்று அதை ஆங்கிலத்தில்...

அடுத்த ஞாயிறு

அடுத்த ஞாயிறு   அ.முத்துலிங்கம்   வைத்திலிங்கம் சமையல்கட்டுக்குள் நுழைந்தார். தையல்நாயகி திடுக்கிட்டுப்போய் எழுந்து நின்றார். அவர் கணவன் சமையல்கட்டுக்குள் வருவதே கிடையாது. மணமுடித்த கடந்த 15 வருடங்களில் இது இரண்டாவது முறையாக இருக்கலாம். தையல்நாயகிக்கு முன்னால் பெரிய கடகத்தில் மாங்காய்கள் பெரிசும் சிறிதுமாக பல அளவுகளில் கிடந்தன. அவற்றை ஊறுகாய்க்காக வெட்டிக்கொண்டிருந்தார். முதல் நாள்...

நாடுதான் மாறியது

நாடுதான் மாறியது அ.முத்துலிங்கம் கனடாவின் 150 வது பிறந்த நாள் ஜூலை மாதம் கொண்டாடப்பட்டது. இது மறக்கமுடியாத மாதம். எனக்கு அதிர்ச்சி தந்த மாதம் என்றும் சொல்லலாம். அதற்கு மூன்று காரணங்கள். கனடாவின் ஒன்ராறியோ மாநில அமைச்சகத்திலிருந்து எனக்கு கடிதம் வந்திருந்தது. முதலாவது அதிர்ச்சி, அந்தக் கடிதத்தின் வாசகம். பன்மைக் கலாச்சார சமுதாய மேன்மைக்காக நிதி வழங்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பியுங்கள். இரண்டாவது...

எழுத்தாளரும் புகைப்படமும்

                      எழுத்தாளரும் புகைப்படமும் அ.முத்துலிங்கம் ஏதாவது பத்திரிகையிலிருந்து புகைப்படம் கேட்டு எழுதினால் உடனேயே சிக்கல் தொடங்கிவிடும். சில மாதங்களுக்கு முன்னர் இப்படி ஒரு பத்திரிகை கேட்டதும் நான் என்னிடம் இருந்த படம் ஒன்றை அனுப்பி வைத்தேன். அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. வேறு படம் இருக்கிறதா என்று எழுதிக் கேட்டார்கள். இன்னும் சில படங்கலைத் தேடி எடுத்து அனுப்பினேன். மறுபடியும் ‘கனதி...

 ரயில் புறப்பட்டுவிட்டது

 

    விகடன் தடம் இதழ் நேர்காணல் – ஏப்ரல் 2017 ரயில் புறப்பட்டுவிட்டது புனைவு என்ற வார்த்தையை, அதன் சாத்தியங்களை முழுமையாக எப்போது உணர்ந்தீர்கள்? அந்த கணம் நினைவிருக்கிறதா? நிச்சயமாக. எங்கே எந்த நேரத்தில் என்ன படித்தேன் என்பதும் நினைவில்  இருக்கிறது. கல்கி, மு.வரதராசனார், காண்டேகர் எல்லோரையும் படித்துவிட்டேன். புதுமைப்பித்தன் இரவலாகக் கிடைத்து முதன்முதலாக ‘பொய்க்குதிரை’ சிறுகதையை...

ஒரு மணிநேரம் முன்பு

ஒரு மணி நேரம் முன்பு அ.முத்துலிங்கம் உன்னைக் கண்டதும் கடைக்காரன் மேல் உதட்டை மடித்து நாய் போல பற்களைக் காட்டினான். உறுமுவதுபோல என்ன  வேண்டுமென்று கேட்டான். ‘ஐந்து சதத்துக்கு உப்பு’ என்று நீ சொன்னாய். உன் கையில் காசு இல்லை என்பது அவனுக்குத் தெரியும்.  ‘உன் அம்மாவிடம்  12 ரூபாய் 30 சதம் அவ தரவேண்டும் என்று சொல்’ என்றான். நீ மேலும் கொஞ்ச நேரம் நின்றாய். அவன் உன்னை ’ஓடு ஓடு’ என்று விரட்டினான். நீ...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta