எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.
இலக்கியப் பணிகள்
அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்
. கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது
நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இவரது நூல்கள்
புதினம்
- உண்மை கலந்த நாட்குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம் (2008)
- கடவுள் தொடங்கிய இடம்
சிறுகதை தொகுப்பு
- அக்கா (1964)
- திகடசக்கரம் (1995)
- வம்சவிருத்தி (1996)
- வடக்கு வீதி (1998)
- மகாராஜாவின் ரயில் வண்டி (2001)
- அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)
- ஒலிப்புத்தகம் – (சிறுகதைகள் தொகுப்பு – 2008)
- அமெரிக்கக்காரி (2009)
- Inauspicious Times – 2008 – (Short stories by Appadurai Muttulingam – translation by Padma Narayanan – available at Amazon.com)
- குதிரைக்காரன் – (2012)
- கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) – (2013) – காலச்சுவடு பதிப்பகம் – தொகுப்பு ஆசிரியர் க.மோகனரங்கன்
- பிள்ளை கடத்தல்காரன் (2015)
- ஆட்டுப்பால் புட்டு (2016)
- After Yesterday – Translated from Tamil – Short stories – 2017
- அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகம்- 2016
கட்டுரைத் தொகுப்பு
- அங்கே இப்ப என்ன நேரம்? (2005)
- பூமியின் பாதி வயது – உயிர்மை பதிப்பகம் (2007)
- கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு – 2006)
- வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) – காலச்சுவடு பதிப்பகம் (2006)
- அமெரிக்க உளவாளி – கிழக்கு பதிப்பகம் (2010)
- ஒன்றுக்கும் உதவாதவன் – உயிர்மை பதிப்பகம் (2011)
- தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை – நேர்காணல்கள் (2013)
- தோற்றவர் வரலாறு (2016)
- அ.முத்துலிங்கம் கட்டுரைகள் – முழுத்தொகுப்பு – இரண்டு பாகம்- 2018ல் வெளிவருகிறது
சிறுகதைகள் பட்டியல்
சிறுகதைகள் |
ஆண்டு |
அக்கா தொகுப்பு 1964 |
1. கடைசி கைங்கரியம் |
1958 |
2. ஊர்வலம் |
1958 |
3. கோடைமழை |
1959-1961 |
4. அழைப்பு |
1959-1961 |
5. ஒரு சிறுவனின் கதை |
1959-1961 |
6. அனுலா |
1959-1961 |
7. சங்கல்ப நிராகரணம் |
1959-1961 |
8. இருப்பிடம் |
1959-1961 |
9. பக்குவம் |
1959-1961 |
10. அக்கா |
1959-1961 |
திகடசக்கரம் தொகுப்பு 1995 |
11. பார்வதி |
1994 |
12. குங்கிலிய கலய நாயனார் |
1994 |
13. பெருச்சாளி |
1994 |
14. மாற்றமா?தடுமாற்றமா? |
1994 |
15. வையன்னா கானா |
1994 |
16. குதம்பேயின் தந்தம் |
1994 |
17. செல்லரம்மான் |
1994 |
18. திகடசக்கரம் |
1994 |
வம்சவிருத்தி தொகுப்பு 1996 |
19. துரி |
1995 |
20. ஒருசாதம் |
1995 |
21. கிரகணம் |
1995 |
22. விழுக்காடு |
1995 |
23. பீனிக்ஸ் பறவை |
1995 |
24. முழுவிலக்கு |
1995 |
25. முடிச்சு |
1995 |
26. ஞானம் |
1995 |
27. சிலம்பு செல்லப்பா |
1995 |
28. வம்சவிருத்தி |
1995 |
29. பருத்தி பூ |
1995 |
30. வடக்கு வீதி |
1996-1997 |
வடக்கு வீதி தொகுப்பு 1998 |
31. எலுமிச்சை |
1996-1997 |
32. குந்தியின் தந்திரம் |
1996-1997 |
33. வசியம் |
1996-1997 |
34. பூமாதேவி |
1996-1997 |
35. யதேச்சை |
1996-1997 |
36. கம்ப்யூட்டர் |
1996-1997 |
37. ரி |
1996-1997 |
38. உடும்பு |
1996-1997 |
39. மனுதர்மம் |
1996-1997 |
40. விசா |
1996-1997 |
41. ஒட்டகம் |
1996-1997 |
மகாராஜாவின் ரயில்வண்டி தொகுப்பு 2001 |
42. மகாராஜாவின் ரயில்வண்டி |
1999-2000 |
43. நாளை |
1999-2000 |
44. தொடக்கம் |
1999-2000 |
45. ஆயுள் |
1999-2000 |
46. விருந்தாளி |
1999-2000 |
47. மாற்று |
1999-2000 |
48. அம்மாவின் பாவாடை |
1999-2000 |
49. செங்கல் |
1999-2000 |
50. கடன் |
1999-2000 |
51. பூர்வீகம் |
1999-2000 |
52. கறுப்பு அணில் |
1999-2000 |
53. பட்டம் |
1999-2000 |
54. ஐவேசு |
1999-2000 |
55. எதிரி |
1999-2000 |
56. ஐந்தாவது கதிரை |
1999-2000 |
57. தில்லை அம்பல பிள்ளையார் கோயில் |
1999-2000 |
58. கல்லறை |
1999-2000 |
59. கொம்புளானா |
1999-2000 |
60. ராகு காலம் |
1999-2000 |
61. ஸ்ரோபரி ஜாம் போத்தலும் அபீஸீனியன் பூனையும் |
1999-2000 |
பிற |
62. 23 சதம் |
2001 |
63. மொசுமொசுவென்று சடை வைத்த வெள்ளை முடி ஆடுகள் |
2001 |
64. அடைப்புகள் |
2001 |
65. போரில் தோற்றுப்போன குதிரை வீரன் |
2001 |
66. தாத்தா விட்டுபோன தட்டச்சு மெசின் |
2002 |
67. ஆப்பிரிக்காவில் அரை நாள் |
2002 |
68. கொழுத்தாடு பிடிப்பேன் |
2002 |
69. அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை |
2003 |
70. முதல் விருந்து முதல் பூகம்பம் முதல் மனைவி |
2003 |
71. காபூல் திராட்சை |
2003 |
72. நாற்பது வருட தாபம் |
2003 |
73. பூமத்திய ரேகை |
2003 |
74. தளுக்கு |
2003 |
75. எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை |
2003 |
குதிரைக்காரன் தொகுப்பு |
2012 |
76. குதிரைக்காரன் |
2012 |
77.குற்றம் கழிக்க வேண்டும் |
2012 |
78.மெய்காப்பளன் |
2012 |
79.பாரம் |
2012 |
80.ஐந்து கால் மனிதன் |
2012 |
81.ஜகதலப்ரதாபன் |
2012 |
82.புளிக்கவைத்த அப்பம் |
2012 |
83.புது பெண்சாதி |
2012 |
84.22 வயது |
2012 |
85.எங்கள் வீட்டு நீதிவான் |
2012 |
86.தீர்வு |
2012 |
87.எல்லாம் வெல்லும் |
2012 |
88.மூளையால் யோசி |
2012 |
89.ஆச்சரியம் |
2012 |
90.கனகசுந்தரி |
2012 |
அமெரிக்ககாரி தொகுப்பு |
2009 |
பரிசுகளும், விருதுகளும்
- தினகரன் சிறுகதைப் போட்டி பரிசு – 1961
- கல்கி சிறுகதைப் போட்டி பரிசு
- திகடசக்கரம் – லில்லி தேவசிகாமணிப் பரிசு – 1995
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – தமிழ்நாடு அரசாங்கம் முதல் பரிசு – 1996
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – இந்திய ஸ்டேட் வங்கி முதல் பரிசு – 1996
- ஜோதி விநாயகம் பரிசு – 1997
- வடக்கு வீதி – சிறுகதைத் தொகுப்பு – இலங்கை அரசு சாகித்தியப் பரிசு – 1999
- கனடா தமிழர் தகவல் – நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை விருது – பிப்ரவரி 2006
- திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது – 2012
- குதிரைக்காரன் – சிறுகதைத் தொகுப்பு – 2012ன் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விகடன் விருது[1]
- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராய விருது 2013
- மார்க்கம் நகரசபை இலக்கிய விருது – 2014
Latest stories
சின்னச் சம்பவம் அ.முத்துலிங்கம் சின்னச் சம்பவம் என்று ஒன்றும் உலகத்தில் கிடையாது. வழக்கம்போல வாடகைக் கார் நிறுத்தத்தில் காரை நிறுத்தி வைத்துக்கொண்டு வாடிக்கையாளருக்கு காத்திருந்தேன். எனக்கு முன்னால் இரண்டு கார்களும் பின்னால் நாலு கார்களும் நின்றன. பகல் பத்து மணி. மே மாதம் என்பதால் குளிரும் இருந்தது. வெப்பமும் இருந்தது. அன்று கொஞ்சம் வெப்பம் வெற்றி பெற்ற நாள். ரொறொன்ரோவின் அலுவலக அவசரம்...
இந்த வாரத்தில் 2 நாட்கள் அ.முத்துலிங்கம் கார் கத்தியது பெரிய ஹொட்டலில் விருந்து நடந்தது. என் மேசையில் இருந்த நண்பர் கேட்டார், ‘நீங்கள் இப்பவும் அடிக்கடி தொலைந்து போகிறீர்களா?’ நான் சொன்னேன். ‘நான் எங்கே தொலைந்து போகிறேன். ரோட்டுகள் அல்லவா திடீர் திடீரென்று தொலைந்து போகின்றன.’ அதுதான் நடந்தது. நான் புறப்பட்டபோது இரவு 11 மணி. கையிலே ரோட்டு வரைபடம்...
கடவுச்சொல் அ.முத்துலிங்கம் அன்று காலை விடிந்தபோது அது அவர் வாழ்க்கையில் மிகவும் ஆச்சரியமான நாளாக மாறும் என்பது சிவபாக்கியத்துக்கு தெரியாது. செப்டம்பர் மாதத்தில் இலைகள் நிறம் மாறுவது பார்க்க அவருக்கு பிடிக்கும். அவர் வசித்த நாலாவது மாடி மரங்களின் உயரத்தில் இருந்தது இன்னொரு வசதி. யன்னலைத்...
சிவாஜியின் கையெழுத்து ’சிவாஜி வருகிறார், சிவாஜி வருகிறார்’ என்று கத்திக்கொண்டே என் நண்பன் பரஞ்சோதி ஓடிவந்தான். அவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. முதல் முறையாக நடிகர் சிவாஜி கொழும்புக்கு...
மூன்று கடிதங்கள் 2010ம் ஆண்டு முடிவதற்கு இரண்டு நாள் இருந்தது. எனக்கு ஆங்கிலத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. எழுதியவர் பாலு மகேந்திரா. அந்தப் பெரிய ஆளுமையிடம் இருந்து இதற்கு முன்னர் கடிதம் வந்தது கிடையாது. ஆகவே ஆச்சரியமாகவிருந்தது. நான் அவரைச் சந்தித்தது இல்லை. பேசியதில்லை. எழுதியதும் இல்லை. அந்த முதல்...
In Our Translated World Contemporary Global Tamil Poetry A review by Richard L. Reinert, PhD Given the political climate and military turmoil that affected the people of Sri Lanka, one would expect that contemporary Tamil poetry to be underscored by sadness. And so it is in many of the selections in this book written by 78 Tamils, of whom 21 are women. The title, In Our...
அடைப்புகள் அ.முத்துலிங்கம் தேசம் மிக முக்கியம். அவளை எந்த...
மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில் 10 வருடங்கள் – தினமும் இணையத்தில் www.jeyamohan.in / www.venmurasu.in 2014 புத்தாண்டு முதல்… வியாசனின் பாதங்களில் – ஜெயமோகன் . இந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும்...
விழா அழைப்பிதழ் 2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. நாள் 22. 12. 2013 இடம் நாணி கலையரங்கம், மணி ஸ்கூல், பாப்பநாயக்கன் பாளையம் கோவை நேரம் மாலை 6 மணி நிகழ்ச்சிகள் விருது வழங்குபவர்: இந்திரா பார்த்தசாரதி தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள் சிறுகதைத்தொகுதி வெளியீடு வெளியிடுபவர் பாலசந்திரன் சுள்ளிக்காடு...
இன்றைக்கும் மனைவி என் அலுவலக அறைக்கு வந்தார். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு ராணுவத்தை பார்வையிட வந்த ஜெனரல்போல இரண்டு பக்கமும் பார்த்தார். பல புத்தகங்கள் திறந்து நிலத்தில் கிடந்தன. நோட்டுப் புத்தகங்கள் பாதி எழுதியபடி சிதறியிருந்தன. கம்புயூட்டரில் நான் வேகமாக தட்டச்சு செய்துகொண்டிருந்தேன். மனைவி கேட்டார். ’இதுவெல்லாம் குப்பையாக கிடக்கிறதே. ஒழுங்காய் அடுக்கி வைக்க...
Recent Comments