எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.
இலக்கியப் பணிகள்
அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்
. கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது
நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இவரது நூல்கள்
புதினம்
- உண்மை கலந்த நாட்குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம் (2008)
- கடவுள் தொடங்கிய இடம்
சிறுகதை தொகுப்பு
- அக்கா (1964)
- திகடசக்கரம் (1995)
- வம்சவிருத்தி (1996)
- வடக்கு வீதி (1998)
- மகாராஜாவின் ரயில் வண்டி (2001)
- அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)
- ஒலிப்புத்தகம் – (சிறுகதைகள் தொகுப்பு – 2008)
- அமெரிக்கக்காரி (2009)
- Inauspicious Times – 2008 – (Short stories by Appadurai Muttulingam – translation by Padma Narayanan – available at Amazon.com)
- குதிரைக்காரன் – (2012)
- கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) – (2013) – காலச்சுவடு பதிப்பகம் – தொகுப்பு ஆசிரியர் க.மோகனரங்கன்
- பிள்ளை கடத்தல்காரன் (2015)
- ஆட்டுப்பால் புட்டு (2016)
- After Yesterday – Translated from Tamil – Short stories – 2017
- அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகம்- 2016
கட்டுரைத் தொகுப்பு
- அங்கே இப்ப என்ன நேரம்? (2005)
- பூமியின் பாதி வயது – உயிர்மை பதிப்பகம் (2007)
- கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு – 2006)
- வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) – காலச்சுவடு பதிப்பகம் (2006)
- அமெரிக்க உளவாளி – கிழக்கு பதிப்பகம் (2010)
- ஒன்றுக்கும் உதவாதவன் – உயிர்மை பதிப்பகம் (2011)
- தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை – நேர்காணல்கள் (2013)
- தோற்றவர் வரலாறு (2016)
- அ.முத்துலிங்கம் கட்டுரைகள் – முழுத்தொகுப்பு – இரண்டு பாகம்- 2018ல் வெளிவருகிறது
சிறுகதைகள் பட்டியல்
சிறுகதைகள் |
ஆண்டு |
அக்கா தொகுப்பு 1964 |
1. கடைசி கைங்கரியம் |
1958 |
2. ஊர்வலம் |
1958 |
3. கோடைமழை |
1959-1961 |
4. அழைப்பு |
1959-1961 |
5. ஒரு சிறுவனின் கதை |
1959-1961 |
6. அனுலா |
1959-1961 |
7. சங்கல்ப நிராகரணம் |
1959-1961 |
8. இருப்பிடம் |
1959-1961 |
9. பக்குவம் |
1959-1961 |
10. அக்கா |
1959-1961 |
திகடசக்கரம் தொகுப்பு 1995 |
11. பார்வதி |
1994 |
12. குங்கிலிய கலய நாயனார் |
1994 |
13. பெருச்சாளி |
1994 |
14. மாற்றமா?தடுமாற்றமா? |
1994 |
15. வையன்னா கானா |
1994 |
16. குதம்பேயின் தந்தம் |
1994 |
17. செல்லரம்மான் |
1994 |
18. திகடசக்கரம் |
1994 |
வம்சவிருத்தி தொகுப்பு 1996 |
19. துரி |
1995 |
20. ஒருசாதம் |
1995 |
21. கிரகணம் |
1995 |
22. விழுக்காடு |
1995 |
23. பீனிக்ஸ் பறவை |
1995 |
24. முழுவிலக்கு |
1995 |
25. முடிச்சு |
1995 |
26. ஞானம் |
1995 |
27. சிலம்பு செல்லப்பா |
1995 |
28. வம்சவிருத்தி |
1995 |
29. பருத்தி பூ |
1995 |
30. வடக்கு வீதி |
1996-1997 |
வடக்கு வீதி தொகுப்பு 1998 |
31. எலுமிச்சை |
1996-1997 |
32. குந்தியின் தந்திரம் |
1996-1997 |
33. வசியம் |
1996-1997 |
34. பூமாதேவி |
1996-1997 |
35. யதேச்சை |
1996-1997 |
36. கம்ப்யூட்டர் |
1996-1997 |
37. ரி |
1996-1997 |
38. உடும்பு |
1996-1997 |
39. மனுதர்மம் |
1996-1997 |
40. விசா |
1996-1997 |
41. ஒட்டகம் |
1996-1997 |
மகாராஜாவின் ரயில்வண்டி தொகுப்பு 2001 |
42. மகாராஜாவின் ரயில்வண்டி |
1999-2000 |
43. நாளை |
1999-2000 |
44. தொடக்கம் |
1999-2000 |
45. ஆயுள் |
1999-2000 |
46. விருந்தாளி |
1999-2000 |
47. மாற்று |
1999-2000 |
48. அம்மாவின் பாவாடை |
1999-2000 |
49. செங்கல் |
1999-2000 |
50. கடன் |
1999-2000 |
51. பூர்வீகம் |
1999-2000 |
52. கறுப்பு அணில் |
1999-2000 |
53. பட்டம் |
1999-2000 |
54. ஐவேசு |
1999-2000 |
55. எதிரி |
1999-2000 |
56. ஐந்தாவது கதிரை |
1999-2000 |
57. தில்லை அம்பல பிள்ளையார் கோயில் |
1999-2000 |
58. கல்லறை |
1999-2000 |
59. கொம்புளானா |
1999-2000 |
60. ராகு காலம் |
1999-2000 |
61. ஸ்ரோபரி ஜாம் போத்தலும் அபீஸீனியன் பூனையும் |
1999-2000 |
பிற |
62. 23 சதம் |
2001 |
63. மொசுமொசுவென்று சடை வைத்த வெள்ளை முடி ஆடுகள் |
2001 |
64. அடைப்புகள் |
2001 |
65. போரில் தோற்றுப்போன குதிரை வீரன் |
2001 |
66. தாத்தா விட்டுபோன தட்டச்சு மெசின் |
2002 |
67. ஆப்பிரிக்காவில் அரை நாள் |
2002 |
68. கொழுத்தாடு பிடிப்பேன் |
2002 |
69. அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை |
2003 |
70. முதல் விருந்து முதல் பூகம்பம் முதல் மனைவி |
2003 |
71. காபூல் திராட்சை |
2003 |
72. நாற்பது வருட தாபம் |
2003 |
73. பூமத்திய ரேகை |
2003 |
74. தளுக்கு |
2003 |
75. எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை |
2003 |
குதிரைக்காரன் தொகுப்பு |
2012 |
76. குதிரைக்காரன் |
2012 |
77.குற்றம் கழிக்க வேண்டும் |
2012 |
78.மெய்காப்பளன் |
2012 |
79.பாரம் |
2012 |
80.ஐந்து கால் மனிதன் |
2012 |
81.ஜகதலப்ரதாபன் |
2012 |
82.புளிக்கவைத்த அப்பம் |
2012 |
83.புது பெண்சாதி |
2012 |
84.22 வயது |
2012 |
85.எங்கள் வீட்டு நீதிவான் |
2012 |
86.தீர்வு |
2012 |
87.எல்லாம் வெல்லும் |
2012 |
88.மூளையால் யோசி |
2012 |
89.ஆச்சரியம் |
2012 |
90.கனகசுந்தரி |
2012 |
அமெரிக்ககாரி தொகுப்பு |
2009 |
பரிசுகளும், விருதுகளும்
- தினகரன் சிறுகதைப் போட்டி பரிசு – 1961
- கல்கி சிறுகதைப் போட்டி பரிசு
- திகடசக்கரம் – லில்லி தேவசிகாமணிப் பரிசு – 1995
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – தமிழ்நாடு அரசாங்கம் முதல் பரிசு – 1996
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – இந்திய ஸ்டேட் வங்கி முதல் பரிசு – 1996
- ஜோதி விநாயகம் பரிசு – 1997
- வடக்கு வீதி – சிறுகதைத் தொகுப்பு – இலங்கை அரசு சாகித்தியப் பரிசு – 1999
- கனடா தமிழர் தகவல் – நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை விருது – பிப்ரவரி 2006
- திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது – 2012
- குதிரைக்காரன் – சிறுகதைத் தொகுப்பு – 2012ன் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விகடன் விருது[1]
- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராய விருது 2013
- மார்க்கம் நகரசபை இலக்கிய விருது – 2014
Latest stories
போரில் தோற்றுப்போன குதிரை வீரன் அ.முத்துலிங்கம் அடுத்து வரும் ஞாயிறில் இருந்து அவ னுடைய காதலியாக இருப்பதற்கு அவள் சம்மதித்துவிட்டாள். ஞாயிறு வருவதற்கு இன்னும் மூன்றே மூன்று நாட்கள் இருந்தன. அதுவரைக்கும் பொறுத்திருப்பது சிரமமான காரியம்தான். உடனேயே காதலி கிடைப்பதில் அவனுக்கு ஒரு தடை இருந்தது. தற்சமயம் அவளுக்கு ஒரு காதலன் இருந்தான். அவனுக்கு வேலை மாற்றலாகி 2000 மைல் தூரத்துக்குப் போகிறான். இனிமேல்...
இரண்டு சந்தோசங்கள் இன்று எனக்கு இரண்டு சந்தோசங்கள். கனடாவில் நேரத்தை ஒரு மணித்தியாலம் பின்னுக்கு தள்ளி வைக்கும் நாள் இது. அதாவது ஒரு மணி நேரத்தை மீண்டும் வாழலாம். மொத்தத்தில் எனக்கு இன்று 25 மணித்தியாலங்கள் கிடைக்கும். ஒரு...
அம்மா, நீ வென்றுவிட்டாய். ஓர் எழுத்தாளரைப் பற்றி நினைக்கும்போது மனதில் என்ன தோன்றுகிறது? அதுதான் முக்கியம். அலிஸ் மன்றோ பற்றி நினைத்துப் பார்த்தபோது அவருடைய கலகல சிரிப்பொலிதான் ஞாபகத்துக்கு வந்தது. பேசிவிட்டு சிரிப்பார் அல்லது சிரித்துவிட்டு பேசுவார். நான் சந்தித்தபோது அவருக்கு வயது எழுபத்தைந்து. குழந்தைப் பிள்ளைபோல சிரிப்பு. இன்று, 82 வது வயதில்...
நோபல் பரிசு அலிஸ் மன்றோவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள். பத்துவருடமாக எதிர்பார்த்த பரிசு இப்பொழுது அவருடைய 82வது வயதில் கிடைத்திருக்கிறது. என்னுடைய வாழ்த்தை அவருடைய தகவல் பெட்டியில் விட்டிருக்கிறேன். இப்பொழுது யோசிக்கும்போது ஒரு முக்கியமான விசயம் நினைவுக்கு வருகிறது. இவர்தான் தற்கால சிறுகதைகளின் அரசி. அவர் சொன்னார் தான் சிறுகதைகளை எழுதி முடிவுக்கு கொண்டு...
எதிர்பாராதது வாழ்க்கை என்பது எதிர்பாராத கணங்களினால் நிறைந்தது. உலகத்திலேயே ஆகச் சிறிய சிறுகதையை எழுதியவர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே. அந்தச் சின்னஞ்சிறு கதை உச்சத்தை எட்டியது அதனுடைய எதிர்பாராத முடிவினால். ஆறே ஆறு வார்த்தைகள். ‘விற்பனைக்கு. குழந்தையின் சப்பாத்து. புத்தம் புதிது. அணியப்படவேயில்லை...
அழகிய லைலா அழைப்பு மணியை அடித்து பிரயோசனமில்லை. கதவை கைகளாலும் கால்களாலும் உதைத்தான். உள்ளே ஒரு சத்தத்தையும் காணவில்லை. அவன் வேண்டுமென்றே திறக்காமல் இருக்கிறான். கதவு திறந்து ஒரு கணம் தோட்டு ரவியின் முகம் வெளியே நீட்டியது. நிஷாந் பேசத் தொடங்கினான். அடுத்த கணம் முகத்தை காணவில்லை. சாத்திய கதவுதான் முன்னால்...
கடன் என் வாழ்க்கையில் நான் பட்ட கடன்களை வரிசைப் படுத்தும்போது பல கடன்களை நான் தீர்க்கவில்லை என்பது இப்போது தெரிகிறது. சிறுவயதில் பக்கத்து மேசை நண்பனிடம் பென்சில் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்கவில்லை. கோயிலுக்கு நேர்ந்து கடவுளுக்கு இது செய்வதாக, அது செய்வதாகச் சொல்லி செய்யாமல் விட்டது. புத்தகங்கள் கடன் வாங்கிப் படித்தால் தவறாமல் திருப்பிவிடுவது என் வழக்கம். ஒரு முறை என்...
இன்று ஞாயிறு 28 யூலை முக்கியமான நாள்.
மாலை 4.30 க்கு விஜய் டிவியை பாருங்கள்.
ஓணானுக்கு பிறந்தவன் அ.முத்துலிங்கம் அவனைப் பிடித்துவிட்டார்கள். கிரேக்க தேசத்தின் பாட்ரா எல்லையில் இரவு இரண்டு மணிக்கு. அவன் நின்ற இடம் இதற்கு முன்னர் லட்சக்கணக்கான பயணிகள் நின்று நின்று பள்ளம் விழுந்து தேய்ந்து கிடந்தது. அவன் உயரம்கூட ஓர் அங்குலம் குறைந்தே காணப்பட்டது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு...
இறுதித் தேர்வு அ.முத்துலிங்கம் காலை சரியாக ஐந்து மணிக்கு அவளுடைய செல்பேசி அலாரம் ஒலித்து அவளை எழுப்பியது. அதை அணைத்துவிட்டு படுக்கையில் இருந்தபடியே எட்டி காப்பி மெசின் பட்டனை தட்டினாள். அது கிர் என்று சத்தத்துடன் உயிர் பெற்றது. செல்பேசியில் அன்றைய கால நிலையை பார்த்துவிட்டு முக்கியமான பத்திரிகை செய்திகளையும் படித்தாள். ஓர் இணையதளம் விலைக்கு வந்தது. அதை வாங்கி விற்றதில் 2000...
Recent Comments