எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.
இலக்கியப் பணிகள்
அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்
. கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது
நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இவரது நூல்கள்
புதினம்
- உண்மை கலந்த நாட்குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம் (2008)
- கடவுள் தொடங்கிய இடம்
சிறுகதை தொகுப்பு
- அக்கா (1964)
- திகடசக்கரம் (1995)
- வம்சவிருத்தி (1996)
- வடக்கு வீதி (1998)
- மகாராஜாவின் ரயில் வண்டி (2001)
- அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)
- ஒலிப்புத்தகம் – (சிறுகதைகள் தொகுப்பு – 2008)
- அமெரிக்கக்காரி (2009)
- Inauspicious Times – 2008 – (Short stories by Appadurai Muttulingam – translation by Padma Narayanan – available at Amazon.com)
- குதிரைக்காரன் – (2012)
- கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) – (2013) – காலச்சுவடு பதிப்பகம் – தொகுப்பு ஆசிரியர் க.மோகனரங்கன்
- பிள்ளை கடத்தல்காரன் (2015)
- ஆட்டுப்பால் புட்டு (2016)
- After Yesterday – Translated from Tamil – Short stories – 2017
- அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகம்- 2016
கட்டுரைத் தொகுப்பு
- அங்கே இப்ப என்ன நேரம்? (2005)
- பூமியின் பாதி வயது – உயிர்மை பதிப்பகம் (2007)
- கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு – 2006)
- வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) – காலச்சுவடு பதிப்பகம் (2006)
- அமெரிக்க உளவாளி – கிழக்கு பதிப்பகம் (2010)
- ஒன்றுக்கும் உதவாதவன் – உயிர்மை பதிப்பகம் (2011)
- தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை – நேர்காணல்கள் (2013)
- தோற்றவர் வரலாறு (2016)
- அ.முத்துலிங்கம் கட்டுரைகள் – முழுத்தொகுப்பு – இரண்டு பாகம்- 2018ல் வெளிவருகிறது
சிறுகதைகள் பட்டியல்
சிறுகதைகள் |
ஆண்டு |
அக்கா தொகுப்பு 1964 |
1. கடைசி கைங்கரியம் |
1958 |
2. ஊர்வலம் |
1958 |
3. கோடைமழை |
1959-1961 |
4. அழைப்பு |
1959-1961 |
5. ஒரு சிறுவனின் கதை |
1959-1961 |
6. அனுலா |
1959-1961 |
7. சங்கல்ப நிராகரணம் |
1959-1961 |
8. இருப்பிடம் |
1959-1961 |
9. பக்குவம் |
1959-1961 |
10. அக்கா |
1959-1961 |
திகடசக்கரம் தொகுப்பு 1995 |
11. பார்வதி |
1994 |
12. குங்கிலிய கலய நாயனார் |
1994 |
13. பெருச்சாளி |
1994 |
14. மாற்றமா?தடுமாற்றமா? |
1994 |
15. வையன்னா கானா |
1994 |
16. குதம்பேயின் தந்தம் |
1994 |
17. செல்லரம்மான் |
1994 |
18. திகடசக்கரம் |
1994 |
வம்சவிருத்தி தொகுப்பு 1996 |
19. துரி |
1995 |
20. ஒருசாதம் |
1995 |
21. கிரகணம் |
1995 |
22. விழுக்காடு |
1995 |
23. பீனிக்ஸ் பறவை |
1995 |
24. முழுவிலக்கு |
1995 |
25. முடிச்சு |
1995 |
26. ஞானம் |
1995 |
27. சிலம்பு செல்லப்பா |
1995 |
28. வம்சவிருத்தி |
1995 |
29. பருத்தி பூ |
1995 |
30. வடக்கு வீதி |
1996-1997 |
வடக்கு வீதி தொகுப்பு 1998 |
31. எலுமிச்சை |
1996-1997 |
32. குந்தியின் தந்திரம் |
1996-1997 |
33. வசியம் |
1996-1997 |
34. பூமாதேவி |
1996-1997 |
35. யதேச்சை |
1996-1997 |
36. கம்ப்யூட்டர் |
1996-1997 |
37. ரி |
1996-1997 |
38. உடும்பு |
1996-1997 |
39. மனுதர்மம் |
1996-1997 |
40. விசா |
1996-1997 |
41. ஒட்டகம் |
1996-1997 |
மகாராஜாவின் ரயில்வண்டி தொகுப்பு 2001 |
42. மகாராஜாவின் ரயில்வண்டி |
1999-2000 |
43. நாளை |
1999-2000 |
44. தொடக்கம் |
1999-2000 |
45. ஆயுள் |
1999-2000 |
46. விருந்தாளி |
1999-2000 |
47. மாற்று |
1999-2000 |
48. அம்மாவின் பாவாடை |
1999-2000 |
49. செங்கல் |
1999-2000 |
50. கடன் |
1999-2000 |
51. பூர்வீகம் |
1999-2000 |
52. கறுப்பு அணில் |
1999-2000 |
53. பட்டம் |
1999-2000 |
54. ஐவேசு |
1999-2000 |
55. எதிரி |
1999-2000 |
56. ஐந்தாவது கதிரை |
1999-2000 |
57. தில்லை அம்பல பிள்ளையார் கோயில் |
1999-2000 |
58. கல்லறை |
1999-2000 |
59. கொம்புளானா |
1999-2000 |
60. ராகு காலம் |
1999-2000 |
61. ஸ்ரோபரி ஜாம் போத்தலும் அபீஸீனியன் பூனையும் |
1999-2000 |
பிற |
62. 23 சதம் |
2001 |
63. மொசுமொசுவென்று சடை வைத்த வெள்ளை முடி ஆடுகள் |
2001 |
64. அடைப்புகள் |
2001 |
65. போரில் தோற்றுப்போன குதிரை வீரன் |
2001 |
66. தாத்தா விட்டுபோன தட்டச்சு மெசின் |
2002 |
67. ஆப்பிரிக்காவில் அரை நாள் |
2002 |
68. கொழுத்தாடு பிடிப்பேன் |
2002 |
69. அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை |
2003 |
70. முதல் விருந்து முதல் பூகம்பம் முதல் மனைவி |
2003 |
71. காபூல் திராட்சை |
2003 |
72. நாற்பது வருட தாபம் |
2003 |
73. பூமத்திய ரேகை |
2003 |
74. தளுக்கு |
2003 |
75. எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை |
2003 |
குதிரைக்காரன் தொகுப்பு |
2012 |
76. குதிரைக்காரன் |
2012 |
77.குற்றம் கழிக்க வேண்டும் |
2012 |
78.மெய்காப்பளன் |
2012 |
79.பாரம் |
2012 |
80.ஐந்து கால் மனிதன் |
2012 |
81.ஜகதலப்ரதாபன் |
2012 |
82.புளிக்கவைத்த அப்பம் |
2012 |
83.புது பெண்சாதி |
2012 |
84.22 வயது |
2012 |
85.எங்கள் வீட்டு நீதிவான் |
2012 |
86.தீர்வு |
2012 |
87.எல்லாம் வெல்லும் |
2012 |
88.மூளையால் யோசி |
2012 |
89.ஆச்சரியம் |
2012 |
90.கனகசுந்தரி |
2012 |
அமெரிக்ககாரி தொகுப்பு |
2009 |
பரிசுகளும், விருதுகளும்
- தினகரன் சிறுகதைப் போட்டி பரிசு – 1961
- கல்கி சிறுகதைப் போட்டி பரிசு
- திகடசக்கரம் – லில்லி தேவசிகாமணிப் பரிசு – 1995
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – தமிழ்நாடு அரசாங்கம் முதல் பரிசு – 1996
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – இந்திய ஸ்டேட் வங்கி முதல் பரிசு – 1996
- ஜோதி விநாயகம் பரிசு – 1997
- வடக்கு வீதி – சிறுகதைத் தொகுப்பு – இலங்கை அரசு சாகித்தியப் பரிசு – 1999
- கனடா தமிழர் தகவல் – நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை விருது – பிப்ரவரி 2006
- திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது – 2012
- குதிரைக்காரன் – சிறுகதைத் தொகுப்பு – 2012ன் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விகடன் விருது[1]
- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராய விருது 2013
- மார்க்கம் நகரசபை இலக்கிய விருது – 2014
Latest stories
இரவு யானைகள் அ.முத்துலிங்கம் பல வருடங்களுக்கு முன்னர் கென்யாவில் நான் வசித்து வந்த காலத்தில் அங்கே உள்ள ‘சாவோ’ (Tsavo) தேசிய வன காப்பகத்துக்கு ஒருமுறை போயிருக்கிறேன். கென்யாவில் உள்ள ஆகப் பெரிய வனகாப்பகம் அதுதான். 22,000 சதுர கி.மீட்டர்கள் பரப்பளவு கொண்டது. எங்கள் விடுதியை நோக்கி காட்டுக்குள்ளால் பயணித்துக்கொண்டே இருந்தோம். இருள் வேகமாக வந்தது. எங்கள் சாரதி வழியை...
கேர்ணல்கிட்டுவின்குரங்கு அ.முத்துலிங்கம் என்னுடையபெயர்சிவபாக்கியலட்சுமி. வயது82. எனக்கு மறதிவரவரக்கூடிக்கொண்டேபோகுது. காலையிலேமருந்துக் குளிசையைபோட்டேனாஎன்பதுகூடமறந்துபோகுது. என்மூளையில இருந்துசிலஞாபகங்கள் மறையுமுன்னர்அதைஉங்களுக்கு சொல்லவேண்டும் என்பதுதான்என்ஆசை. ...
ஆகச் சிறந்த பிழை அ.முத்துலிங்கம் என்னுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் தொடக்கம் ஒரு பழமொழிதான். என்னுடைய ஐயாதான் இந்தப் பழமொழியை கண்டு பிடித்திருக்கவேண்டும்...
தீர்மானம் அ.முத்துலிங்கம் புது வருடம் பிறந்தபோது ஒரு தீர்மானம் எடுத்தேன். ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களை வேஸ்ட் செய்யவேண்டும் என்று. அதன் பிரகாரம் நேற்று முந்தாநாள் ’டோஸ்தானா’ என்ற ஹிந்திப்படத்தை பார்த்தேன். படம் முடிந்த பின்னர்கூட டோஸ்தானா என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அபிஷேக் பச்சன், ஜோன் ஆப்பிரஹாம், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்தது...
புது வருடம் அ.முத்துலிங்கம் ’2013 புதுவருடம் பிறக்கிறது, என்ன செய்யலாம்?’ என்றார் நண்பர். ’அது நல்ல காரியம். அதை தடுக்கக்கூடாது’ என்றேன் நான். ’கொண்டாடப்போவதில்லையா?’ என்றார். ’வேறு என்ன, இரவு விருந்துதான்’ என்றேன். அப்படித்தான் தீர்மானமானது. விருந்துக்கு எட்டுப் பேர் வருவதாக சம்மதம் தெரிவித்தார்கள். 200 பேர் ஒரே சமயத்தில் இருந்து...
ரயில் பெண் அ.முத்துலிங்கம் கனடாவில் அவனுக்கிருந்த முதல் பிரச்சினை அங்கே பனிக்காலம் ஒவ்வொரு வருடமும் வருவதுதான். அவன் மலிவான கோட்டும், மலிவான உள்ளங்கியும், மலிவான சப்பாத்தும் அணிந்திருந்தான். பாதாள ரயிலில் பிரயாணம் செய்தபோதும் அவன் உடம்பு நடுங்கியது. அவனுடைய அகதிக்கோரிக்கை வழக்கை வாதாடும் வழக்கறிஞரிடம் அவன் மூன்றாம் தடவையாகப் போகிறான். அவன் அவரிடம் எழுதிக் கொடுத்தது உண்மைக் கதை. அதை அவரால்...
– அ.முத்துலிங்கம் பிரான்ஸிஸ் தேவசகாயத்துக்கு இரவு மறுபடியும் அந்தக் கனவு வந்தது. அதனாலோ என்னவோ அவர் வெகு நேரம் தூங்கிவிட்டார். அன்று எப்படியும் காலை 7.30க்குக் கிளம்பிவிட வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தார். அப்படி புறப்பட்டால்தான் பொஸ்டன் நகரத்து வீதிகளின் ஒத்துழைப்போடு 8.00 மணிக்கு அலுவலகத்துக்குப் போய்ச் சேரலாம்; 7.35க்குப் புறப்பட்டால் 8.20 மட்டும் இழுத்துவிடும்; 7.40...
கவிஞர் தேவதேவனுக்கு விஷ்ணுபுரம் விருது 22 டிசெம்பர் 2012 அன்று வழங்கப்படுகிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
பழைய திரைப்படம். அ.முத்துலிங்கம் இன்று ஒரு பழைய திரைப்படம் பார்த்தேன். இதே திரைப்படத்தை ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்னர் பார்த்திருக்கிறேன். அப்பொழுது நான் கொழும்பு பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன். இயற்பியல் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. பேராசிரியர் Distribution coefficient ratio என ஆரம்பித்தார். வார்த்தைகளை மனனம் செய்து எழுத்துக்கூட்ட பழகிக்கொண்டு அவற்றின் பொருளை அடுத்தநாள்...
Tamil Literary Garden, Canada Iyal Virudhu Ceremony on 18 June 2011 Speech by writer Jeyamohan as a Special Guest கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது விழா, 18 ஜூன் 2011 எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடைய சிறப்புரை இந்த மேடையிலும், அரங்கிலும் கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். நண்பர்களே, இந்த அரங்கிலே ஈழம் உருவாக்கிய முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான எஸ்.பொ அவர்களைக் கௌரவிக்கும் முகமாக...
Recent Comments