எழுத்து மேசை

 

 மே 30ம் தேதி, சனிக்கிழமை. சூரியன் எறித்துக்கொண்டிருந்த நடுப்பகல் நேரம். நான் வசித்த மார்க்கம் நகரில் எங்கள் வீட்டைச் சுற்றி ஓடிய நாலு வீதிகளிலும் garage sale என்ற அறிவிப்பு பல இடங்களிலும் காணப்பட்டது. இப்படியான விற்பனையின் போது பழைய நல்ல புத்தகங்கள் அகப்படுவதுண்டு. நான் ஒவ்வொரு வீடாகச் சென்று அங்கே பரப்பி வைத்திருக்கும் சாமான்களைப் பார்வையிட்டேன். புத்தகம் அகப்படவில்லை ஆனால் ஒரு இடத்தில் ஓக் மரத்தில் செய்த அழகான மேசை பளபளவென்று மினுங்கிக்கொண்டு கிடந்தது. சற்சதுரமாக இருந்த அந்த மேசையின் கால்கள் ஒன்றரை அடி உயரம் இருக்கும். தரையில் உடகார்ந்து எழுதுபவர்களுக்கு பொருத்தமானது. விலையோ மலிவு.\'எதற்காக விற்கிறார்கள்?\' என்று கேட்டேன். 'அந்த மேசையை பாவித்து வந்த மூதாட்டி முதியோர் இல்லத்துக்கு போகிறார். அவர் ஓர் எழுத்தாளர். பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார்\' என்று சொன்னார்கள். தன் வாழ்நாள் முழுக்க அந்த மேசையில்தான் எழுதினார் என்றும்  இனிமேல் எழுதமாட்டார் என்றும் அவர்கள் கூறியபோது என்னவோ செய்தது. நான் காசை கொடுத்து மேசையை வாங்கி வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்தேன். என் வீட்டிலும் மேசை அதே வேலையை செய்தது; எழுத்தாளர்தான் மாறிவிட்டார்.. 
 

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta