சர்வதேச புக்கர் பரிசு

 

அலிஸ் மன்றோவுக்கு சர்வதேச புக்கர் பரிசு கிடைத்திருக்கிறது.பரிசுத் தொகை 100,000 டொலர்கள் ( 60,000 பவுண்டுகள்). இவர் கனடிய எழுத்தாளர். மூன்று கனடா ஆளுநர் பரிசுகளும், இரண்டு கில்லர் பரிசுகளும் வேறு பல  பரிசுகளும் பெற்றவர். வழக்கமாக புக்கர் பரிசுகள் பொதுநல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படும். ஆனால் சர்வதேச புக்கர் பரிசை உலகத்தில் புனைவு இலக்கியம் படைக்கும் எந்த நாட்டு எழுத்தாளரும் பெறலாம்.   எந்த மொழியிலும் எழுதலாம், ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கவேண்டும். இதை நோபல் பரிசுக்கு அடுத்தபடி என்று சொல்லலாம். அலிஸ் மன்றோவுக்கு கிடைத்த பரிசில் எனக்கு பெரிய மகிழ்ச்சி உண்டு. ஏனெனில் அவர் சிறுகதைகள் மட்டுமே எழுதி உலகப் புகழ் பெற்றவர். அவருடைய சில சிறுகதைகள் 70 பக்கம் நீளும். இன்று உலகத்தில் சிறுகதைக்கு இலக்கணம் அவர்தான். சிலர் அவரை தற்கால செக்கோவ் என்று அழைக்கிறார்கள்.இவரை நான் சந்தித்திருக்கிறேன். அவருடனான என்னுடைய நேர்காணல் பத்திரிகைகளில் நாலு வருடங்களுக்கு முன் வெளியானது. அதிகாலையில் அவரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. நான் யாரோ சந்தைப்படுத்துதலுக்கு அழைக்கிறார்கள் என்று நினைத்து சற்று கடுமையாகப் பேசிவிட்டேன். பிறகு அவர் பெயரைக் கூறியதும் மன்னிப்பு கேட்டேன். பழகுவதற்கு இனிமையானவர். அடிக்கடி சிரித்து சிரித்து பேசுவார். அவருடைய வயது 78. வாழ்த்துக் கடிதம் போட்டிருக்கிறேன். பதில் வருமோ தெரியாது.
 

About the author

1 comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta