ஆட்டுச் செவி

ஆட்டுச்செவி

அ.முத்துலிங்கம்

பள்ளிக்கூடத்திலிருந்துவந்ததும்புத்தகங்களைதாறுமாறாகதரையில்எறிந்தேன். ஒருவருமேஎன்னைதிரும்பிபார்க்கவில்லை. அம்மாகுனிந்தபடிஅரிவாளில்காய்கறிநறுக்கிக்கொண்டிருந்தார். என்அண்ணன்மாரைக்காணவில்லை. அக்காசங்கீதநோட்டுப்புத்தகத்தைதிறந்துவைத்துஏதோமுணுமுணுத்துக்கொண்டிருந்தார். என்சின்னத்தங்கச்சிவாய்துடைக்காமல்தள்ளாடிநடந்துவந்துதன்கையைஎன்வாய்க்குள்நுழைத்துப்பார்த்துவிட்டுநகர்ந்தாள். நான்என்பிரகடனத்தைவெளியேவிட்டேன். ‘இன்றுமுதல்நான்மச்சம்,மாமிசம்சாப்பிடமாட்டேன். இனிமேல்என்உணவுமரக்கறிதான்.’ அப்பவும்அம்மாநிமிர்ந்துபார்க்கவில்லை. எனக்குவயதுஎட்டு.

அன்றுகுடுமிவாத்தியார்வகுப்பில்பாடம்எடுத்தபோதுசொன்னகதைமனதில்பதிந்துவிட்டது. ஒன்றும்புரியாமல்அன்றும்திருக்குறளைபாடமாக்கிஒப்புவித்தோம். ஒருமுறைஎங்கள்வாத்தியார்கடலில்விழுந்துவிட்டார். அவருக்குநீச்சல்தெரியும்ஆனால்உடம்பில்காயம்பட்டுஒருதுளிரத்தம்சிந்திவிட்டது. சுறாமீன்கள்அவரைநோக்கிவரத்துடங்கின. சுறாக்களுக்குரத்தம்கால்மைல்தூரத்துக்குமணக்கும். அவைக்குநாலுவரிசைப்பற்கள். ஒருபல்போய்விட்டால்இன்னொருபல்அந்தஇடத்தைநிரப்பிவிடுமாம்.  சுறாக்களின்செட்டைகள்குவிந்துகும்பிடுவதுபோலதோற்றமளிக்கநாலுதரம்வாத்தியாரைசுற்றிவிட்டுஅவைபோய்விட்டனவாம். ஏன்தெரியுமா? ’கொல்லான்புலாலைமறுத்தானைகைகூப்பிஎல்லாஉயிரும்தொழும்’ என்றகுறள்தான்.

என்தம்பிஅடாவடித்தனமானவன். வாயைவைத்துக்கொண்டுசும்மாஇருக்கமாட்டான். அவன்கேட்டான், ‘சுறாக்களுக்குவாத்தியார்மரக்கறிக்காரர்என்பதுஎப்படித்தெரியும். ஏன்நாலுவரிசைப்பல்லைவைத்துக்கொண்டுஅவரைகடித்துக்குதறவில்லை.’ ‘மக்கு, மக்கு. ரத்தத்துளியைஅவைமணந்துதான்வந்தன. அதுமரக்கறிரத்தத்துளிஎன்பதுஅவைக்குதெரியாதா? நீபோ’ என்றுதள்ளினேன். அவன்எரிச்சலோடுதிரும்பும்போது‘சுறாக்களுக்குமணக்கவும்தெரியும். திருக்குறளும்தெரியும்’ என்றான்.

அன்றிரவுசாப்பாட்டுக்குநான்உட்கார்ந்தபோதுஆச்சரியம்காத்திருந்தது. எங்கள்குடும்பத்தில்நாங்கள்சகோதரங்கள்ஏழுபேர். எல்லோரும்நிரையாகஅவரவர்தட்டுகளுடன்உட்கார்ந்திருந்தார்கள்.அவர்கள்தட்டில்மீன்குழம்புகமகமவென்றுமணந்தது. தரையிலேகொஞ்சம்இடைவெளிவிட்டுசின்னவாழைஇலைஒன்றுபோடப்பட்டிருந்தது. அதில்இடியப்பம், சம்பல், கத்தரிக்காய்குழம்புஎன்றுபரிமாறப்பட்டிருந்தது. நான்அம்மாவைபார்த்தேன். அவர்சாப்பிடுஎன்பதுபோலதலையைஆட்டினார். அப்படித்தான்நான்மரக்கறிக்காரன்ஆனேன்.

அதன்பின்னர்அம்மாஎனக்காகதனிச்சமையல்செய்யஆரம்பித்தார்.தனித்தனிசட்டிபானைகள், தனியாகவாழைஇலை. அடுப்புக்கூடதனிஅடுப்புஎன்றால்நம்பமுடியாதுதான். அகப்பையைஅக்காகவனயீனமாகமாறிப்பாவித்துவிட்டால்அதைதூக்கிஎறிந்துவிட்டுஅம்மாபுதுஅகப்பைவாங்குவார். வீட்டிலேஎன்மகத்துவம்திடீரென்றுஉயர்ந்தது. எல்லோரும்நிரையாகஉட்கார்ந்துசாப்பிடும்போதுஎனக்குநடக்கும்பிரத்தியேககவனிப்பும்உபசரிப்பும்எல்லோருக்கும்எரிச்சலைக்கிளப்பிவிடும். ஒருதடவைஐயா, ‘ஒருதடியெடுத்துமுழங்காலுக்குகீழேநாலுஅடிகொடுக்காமல்செல்லம்கொடுக்கிறீர்’ என்றார். அம்மா, ’வாத்தியார்நல்லதுதானேசெய்தார். உயிர்கொலைபாவம்தானே. அவனைதடுத்தால்அந்தப்பாவம்என்னைத்தானேவந்துசேரும்’ என்றார். 

நான்மரக்கறிக்குமாறியதில்என்மகிமைவரவரஉயர்ந்துகொண்டேபோனது. பக்கத்துவீட்டில்இருந்துயாராவதுவந்தால்என்புகழ்பாடாமல்அம்மாஅவர்களைதிருப்பிஅனுப்பமாட்டார். எதோநான்பள்ளிக்கூடத்தில்முதல்பரிசுபெற்றதுபோலபாராட்டுவார். மரக்கறிசாப்பிட்டால்சுறாக்கள்கூடகும்பிடுமாம். அப்பிடிவாத்தியார்சொல்லியிருக்கிறார். இதுவீட்டிலேபெரும்புயலைக்கிளப்பியது. எல்லோருடையஎரிச்சலையும்செயலாகமாற்றியதுஎன்தம்பிதான்.

எனக்குமுன்வந்துஉடம்பைநெளித்தபடி ’ஓ, எங்களுக்குஇன்றைக்குவாளைமீன்கறி. உனக்குபாவம்வாழைக்காய்வெள்ளைக்கூட்டு’என்றுவிட்டுவயிற்றைப்பிடித்துச்சிரிப்பான். அடுத்தநாள் ’எங்களுக்குஇன்றைக்குறால்பொரியல். உனக்குமுசுட்டைஇலைவறை. பாவம்’ என்பான். இன்னொருநாள்எட்டத்தில்நின்றுதன்பின்பக்கத்தைகாட்டிநெளிப்பான். பின்னர்முன்னுக்குவந்துநின்றுநாலுபக்கமும்வளைவான்.  நான்பாய்ந்துகைகளைப்பிடித்துமிரட்டுவேன். விட்டதும்நாடாச்சுருள்போலதானாகச்சுழன்றுஉள்பக்கம்ஓடிவிடுவான். ‘ஓ, பாவம்உனக்குபூசணிக்காய். பினைந்துபினைந்துசாப்பிடு. எங்களுக்குஆட்டுஇறைச்சிவறுவல்.’ எனக்குதாங்கமுடியவில்லை.  நான்சேர்த்துவைத்தபுகழ்எல்லாம்இவனால்சேதம்அடைந்துகொண்டேபோனது.

ஒருநாள்பின்னேரம்அம்மாஅரிதட்டில்மாவைஇட்டுஇரண்டுகைகளையும்முழுக்கநீட்டிஅரித்துக்கொண்டிருந்தார். அருமையானசமயம். இரண்டுகைகளும்வேலையில்இருப்பதால்அடிப்பதற்குஅவைஉதவப்போவதில்லை. கெஞ்சுவதுபோலகுரலைமாற்றிஅம்மாவிடம்முறைப்பாடுவைத்தேன். அவையளுக்குநல்லநல்லஇறைச்சிக்கறி,சாப்பாடு, எனக்குபூசணிக்காயா? தம்பிகூடச்சிரிக்கிறான். நான்பேசிக்கொண்டேபோகஅம்மாஒன்றுமேசொல்லாமல்உடம்பிலேமாபடாமல்அரித்துக்கொண்டேஇருந்தார். எனக்குஅதுதுணிச்சலைக்கொடுத்தது.  அவர்களுக்குஇறைச்சிஎன்றால்எனக்குஉருளைக்கிழங்கு. அந்தக்காலத்தில்உருளைக்கிழங்குசரியானவிலை. அதன்ருசிக்குஈடுஇணைகிடையாது. மீன்என்றால்எனக்குகத்தரிக்காய்குழம்பு. றால்பொரியல்என்றால்எனக்குவாழைக்காய்பொரியல். நண்டுக்குஈடுமுருங்கைக்காய். இப்படிநீண்டபட்டியல்தயாரித்துசமையல்சுவற்றில்சோற்றுப்பசையால்ஒட்டிவைத்தேன். அம்மாஅதைப்பார்த்துவிட்டுஒன்றுமேசொல்லவில்லை.

அதன்பிறகுபெரியமாற்றம்இல்லாவிட்டாலும்என்உணவில்சிறிதுமுன்னேற்றம்காணப்பட்டது. ஆனாலும்என்மனம்சிலவேளைகளில்தடுமாற்றம்கண்டிருக்கிறது. ஒருநாள்படலையைதிறந்துவீட்டுக்குள்அடியெடுத்துவைத்தேன். நண்டுக்குழம்புவாசனைமூக்கிற்குள்நுழைந்துவயிற்றுக்குள்போய்விட்டது. வாய்ஊறத்தொடங்கியது. நண்டுக்காலைஅம்மாஒவ்வொன்றாகஉடைத்துத்தரநான்சாப்பிட்டதுநினைவுக்குவந்தது. நான்அவசரமாகசமையல்அறைக்குள்நுழைந்தேன். அம்மா ‘நண்டுதானே. ஒருசின்னக்காலைஉடைத்துதாறேன், கொஞ்சம்சாப்பிடு’ என்றுசொல்லியிருந்தால்என்வைராக்கியம்உடைந்துசிதறியிருக்கும். அம்மாஎன்னைக்கண்டதும்ஊர்ப்பெரியவரைக்கண்டதுபோலசட்டியைசட்டென்றுமூடிமணம்என்பக்கம்வராமல்பார்த்துக்கொண்டார். பட்டியலில்நான்எழுதியபடிபக்கத்துஅடுப்பில்முருங்கைக்காய்வேகிக்கொண்டிருந்தது.

ஒருநாள்அம்மாவுக்குபெரியசவால்ஒன்றுவந்தது. எங்கள்ஊரில்சாம்பல்கணவாய்அருமையாகத்தான்கிடைக்கும். அதன்ருசிதனியாகஇருக்கும். கணவாய்சமைப்பதில்அம்மாவுக்குஒருரகஸ்யத்திறமைஇருந்தது.  அம்மாவினுடையசமையலைஐயாபாராட்டினதேகிடையாது. ஆனால்கணவாய்சமைத்தால்அந்தப்பாராட்டுக்கிடைக்கும். அன்றுஐயாஎப்படியோசிரமப்பட்டுத்தேடிவாங்கிவந்தசாம்பல்கணவாயைஅம்மாதன்முழுத்திறமையைபாவித்துசமைத்தார். கணவாய்சமைக்கும்போதுஇரண்டுபிடிமுருங்கைஇலைபோடவேண்டும். அதுருசியைகூட்டும். அம்மாஎங்கேயோஅலைந்துமுருங்கைஇலைசம்பாதித்துகணவாய்கறியைசமைத்துமுடித்துவிட்டார். அதுஎழுப்பியமணத்திலிருந்துஉச்சமானருசியைஅதுகொடுக்கப்போகிறதுஎன்பதுநிச்சயமாகிவிட்டது. அம்மாருசிபார்ப்பதேஇல்லை. மணத்தைவைத்தேஅவருக்குதெரிந்துவிடும்.

கணவாய்கறிசமைக்கும்நாட்களில்அம்மாவேறுஒருகறியும்வைப்பதுகிடையாது. கணவாயும்,வெள்ளைசோறும்மட்டுமே. அப்போழுதுதான்அதன்முழுச்சுவையையும்உள்வாங்கிஅனுபவிக்கமுடியும். கணவாய்என்றால்அம்மாஒருசுண்டுஅரிசிகூடப்போட்டுசமைத்திருப்பார். எல்லோரும்இரண்டுமடங்குசாப்பிடும்நாள்அது. முழுச்சமையலையும்முடித்துஓய்ந்தபோதுதான்அம்மாவுக்குதிடுக்கிட்டது. எனக்குஎன்னசமைப்பதுஎன்றுஅவர்தீர்மானிக்கவில்லை. சுவரிலேஒட்டிவைத்தநீண்டபட்டியலைப்பார்த்தார். அதிலேகணவாய்கிடையாது. அம்மாவுக்குபதற்றம்தொற்றியது. என்னசமைப்பது?நேரமும்ஓடிக்கொண்டிருந்தது.

அன்றுமத்தியானம்எல்லோரும்சாப்பிடஉட்கார்ந்தபோதுஅம்மாஎனக்குதனியாகவாழைஇலைபோட்டுவெள்ளைச்சோறும்அதன்மேல்ஒருவிதகுழம்பும்ஊற்றியிருந்தார். எனக்குப்பக்கத்திலேஉட்கார்ந்திருந்தஎன்தம்பிவிளிம்புஉடைந்தஎன்னுடையபீங்கான்கோப்பையைதனதாக்கியிருந்தான். ஏராளமானமக்கள்கூடியிருப்பதுபோலபெரும்கூச்சலுடன்கணவாய்கறியைசப்பிசப்பிசாப்பிட்டனர். எனக்குமுன்இருப்பதுஎன்னஎன்றுஎனக்குதெரியாது. பெயர்தெரியாதஒன்றைநான்அதுவரைஉண்டதுகிடையாது. ஒருவாய்அள்ளிவைத்தேன். என்எட்டுவயதுவாழ்க்கையில்அதுபோலஒன்றைநான்ருசித்ததுகிடையாது. முன்னரும்இல்லை. பின்னரும்இல்லை. கணவாய்கறிபோலவேசதுரம்சதுரமாகவெட்டியிருந்தது. மிருதுவாகவும்அதேசமயம்இழுபடும்தன்மையுடனும்இருந்தது. கடிக்கும்போதுசவ்வுசவ்வாகருசியைநீடித்தது. கணவாய்போலவேகுணம், மணம்ருசி. என்னால்நம்பவேமுடியவில்லை. அந்தருசிஎன்றென்றும்என்நாவில்தங்கிவிட்டது. அதன்பின்னர்அப்படியானருசிஎன்வாழ்வில்மறுபடியும்கிடைக்கவேஇல்லை.

என்னுடையராச்சியம்இப்படிசிலவருடங்கள்ஓடியது. பின்னர்அம்மாஇறந்துவிட்டார். பத்துவருடங்களுக்குப்பின்னர்அக்காஅந்தரகஸ்யத்தைசொன்னார். சமையல்கட்டிலிருந்துஅம்மாவெறிபிடித்தவர்போலவெளியேஒடினார். நேரம்போய்க்கொண்டிருந்தது. எனக்குஎன்னசமைப்பதுஎன்றுஅவரால்முடிவெடுக்கமுடியவில்லை. அவர்என்னசமைத்தாலும்அதுகணவாய்க்கறியின்ருசிக்குசமானமானதாகஇருக்கவேண்டும். எங்கள்வளவில் 20 -25 தென்னைமரங்கள்நின்றன. அதிலேவெவ்வேறுமரங்களில் 12 இளம்காய்களைபறிப்பித்தார். பின்னர்அவற்றைஒவ்வொன்றாகஅவரேவெட்டித்திறந்துஆராய்ந்தார். சிலதிலேவழுக்கைதண்ணீர்போலபடர்ந்திருந்தது. சிலகட்டிபட்டுதேங்காயாகமாறியிருந்தன. இரண்டுக்கும்இடைப்பட்டதாகஒருதேங்காயைகண்டுபிடித்துஅந்தவழுக்கையைபக்குவமாகதோண்டிஎடுத்தார். அதுதோல்போலமெத்தென்றுஇருந்தது. அதைஐந்துதரம்தொட்டுஅதுஆட்டுச்செவிப்பதம்என்பதைஉறுதிப்படுத்திக்கொண்டார். சதுரம்சதுரமாகவெட்டிஒருகணவாய்க்கறிசமைப்பதுபோலபக்குவமாகச்சமைத்தார்.

அன்றுஎல்லோரும்நிரையாகஉட்கார்ந்தபிறகுஎனக்குபரிமாறினதுஅதுதான். முதலும்கடைசியுமாகஅதைசாப்பிட்டேன். அதன்பிறகுஅப்படிஒன்றுஎனக்குகிடைக்கவேஇல்லை. ஏனென்றால்ஒருவருக்கும்அப்படிஓர்உணவுஇருப்பதுதெரியாது. ஒருபழஇலையான்போலபிறந்தஅன்றேஅதுமறைந்துவிட்டது.

இப்பொழுதுயோசித்துப்பார்க்கிறேன். ஒருவார்த்தைபேசாமல்ஒருதாய்தன் 8 வயதுமகனைதிருப்திப்படுத்தஎன்னவெல்லாம்செய்தார். உலகத்தில்பிள்ளைகள்எல்லாம்வெவ்வேறுமாதிரிஇருப்பார்கள். தாய்மார்எல்லாம்ஒன்றுதான்.

முற்றும்

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta