வெள்ளைக்காரன் அ.முத்துலிங்கம் சிண்டரெல்லா கதையில் யார் கதாநாயகன் அல்லது நாயகி என்று கேட்டேன். நான் கேட்டது ஓர் ஆறு வயது பெண் குழந்தையிடம். அந்தக் குழந்தை பதில் சொல்ல ஒரு விநாடிகூட எடுக்கவில்லை. ’மணிக்கூடு’ என்றது. நான் திடுக்கிட்டுவிட்டேன். சிண்டரெல்லாவைச் சொல்லலாம்...
என்னை மறந்துவிட்டீர்களா?
மறந்துவிட்டீர்களா? அ.முத்துலிங்கம் சமீபத்தில் மருத்துவர் அதுல் கவாண்டே எழுதி வெளிவந்த Being Mortal என்ற புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்திருந்தேன். இந்த நூல், கர்ணன் மகாபாரதத்தில் சொன்ன ஒரு வாக்கியத்தோடு தொடங்குகிறது I see it now This world is swiftly passing. இந்த வார்த்தைகளைப் படித்த பின்பு என் மனம் புத்தகத்தில்...
சின்ன ஏ, பெரிய ஏ
சின்ன ஏ, பெரிய ஏ அ.முத்துலிங்கம் ’இன்னும் எப்வளவு நேரம்?’ என்றார். ’மூன்று நிமிடம்’ என்றேன் நான். காசாளரிடம் சென்று பணத்தை கட்டிவிட்டு வந்தார். அவருக்கு அப்படி ஒன்றும் அவசரமில்லை. வீட்டிலே போய்க் கயிற்று ஏணையில் படுப்பதுதான் வேலை. அவ்வப்போது வருவார். இன்று 12 அடி நீளம், 6 அங்குலம் அகலம், 2 அங்குலம் தடிப்பான மரம் வேண்டுமென்றார். அவர் கொடுத்த அளவுக்கு மரத்தை...
இரண்டு சந்தோசங்கள்
இரண்டு சந்தோசங்கள் இன்று எனக்கு இரண்டு சந்தோசங்கள். கனடாவில் நேரத்தை ஒரு மணித்தியாலம் பின்னுக்கு தள்ளி வைக்கும் நாள் இது. அதாவது ஒரு மணி நேரத்தை மீண்டும் வாழலாம். மொத்தத்தில் எனக்கு இன்று 25 மணித்தியாலங்கள் கிடைக்கும். ஒரு...
நோபல் பரிசு
நோபல் பரிசு அலிஸ் மன்றோவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள். பத்துவருடமாக எதிர்பார்த்த பரிசு இப்பொழுது அவருடைய 82வது வயதில் கிடைத்திருக்கிறது. என்னுடைய வாழ்த்தை அவருடைய தகவல் பெட்டியில் விட்டிருக்கிறேன். இப்பொழுது யோசிக்கும்போது ஒரு முக்கியமான விசயம் நினைவுக்கு வருகிறது. இவர்தான் தற்கால சிறுகதைகளின் அரசி. அவர் சொன்னார் தான் சிறுகதைகளை எழுதி முடிவுக்கு கொண்டு...
இறுதித் தேர்வு
இறுதித் தேர்வு அ.முத்துலிங்கம் காலை சரியாக ஐந்து மணிக்கு அவளுடைய செல்பேசி அலாரம் ஒலித்து அவளை எழுப்பியது. அதை அணைத்துவிட்டு படுக்கையில் இருந்தபடியே எட்டி காப்பி மெசின் பட்டனை தட்டினாள். அது கிர் என்று சத்தத்துடன் உயிர் பெற்றது. செல்பேசியில் அன்றைய கால நிலையை பார்த்துவிட்டு முக்கியமான பத்திரிகை செய்திகளையும் படித்தாள். ஓர் இணையதளம் விலைக்கு வந்தது. அதை வாங்கி விற்றதில் 2000...
முதல் ஆச்சரியம்
முதல் ஆச்சரியம் ஆப்பிரிக்காவில் எனக்கு ஏற்பட்ட முதல் ஆச்சரியத்தைப் பற்றி சொல்லலாம் என நினைக்கிறேன். இத்தனை வருடங்கள் கழிந்த பின்னரும் அது நினைவிலிருந்து மறைய மறுக்கிறது. சமீபத்தில் அந்த நினைவு வந்தபோது ஏன் இதை எழுதவில்லை என்று யோசித்தேன். ஒருவரும் நம்பமாட்டார்கள் என்பதால் எழுதாமல் விட்டேனோ தெரியவில்லை. அல்லது 2013ம் ஆண்டு பிறந்த பின்னர் எழுதும் முதல் எழுத்தாக இது இருக்கவேண்டும் என்று விதி...
ரொறொன்ரோ பெண்
ரொறொன்ரோப் பெண் முதலில் ஒரு கடிதத்துடன் தொடங்கலாம் என நினைக்கிறேன். 50 வருடத்திற்கு முந்திய கடிதம். ஒரு கனடிய இளம் பெண் எழுதியது. மானுடவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆராய்ச்சிக்காக அவர் தெரிவு செய்த இடம் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பிற்பட்ட கிராமம். கோவை, காங்கேயம் அருகில் உள்ள ஓலைப்பாளையம். கனடாவில் உள்ள அவருடைய தாயாருக்கு எழுதிய முதல் கடிதம். (சில இடங்களில் சுருக்கப்பட்டுள்ளது.) ...
கொக்குவில்
கொக்குவில் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு ஞாயிறு அதிகாலையில் நான் பிறந்தேன். ஒரு முழுநாள் அம்மாவை வலியில் துடிக்கவைத்து, கால்களை முதலில் வெளியே தள்ளி, இப்பூமியில் உதித்தேன். ஆனால் மூச்சு விடமுடியாமல் கிடந்தேன். மருத்துவச்சி என்னை தலைகீழாகத்தூக்கி குலுக்கி, நெற்றியிலே பழுக்கக் காய்ச்சிய ஊசியால் சூடு வைத்தபோது என்னிடமிருந்து முதல் அழுகை வெளிப்பட்டது. ஆண்பிள்ளை பிறந்தால் எங்கள் ஊரில் உலக்கையை...
திருட்டுப் போகும் புகழ்
என்னுடைய நண்பர் ஒருவர் புகழ் பெற்ற புகைப்பட நிபுணர். அவர் கனடாவின் வட புலத்துக்கு புகைப்படங்கள் எடுப்பதற்காகச் சென்றார். வடதுருவ வட்டத்திற்கு கிட்டவாகப் போனால் குளிர் -50 பாகை செண்டிகிரேட் தொடும். அதனிலும் கீழே கூடப் போகும். அவர் அதற்கெல்லாம் தயாராகத்தான் இருந்தார். பாலைவனங்களுக்கும், வானாந்திரங்களுக்கும் மலைமுகடுகளுக்கும் பயணம் செய்தவர். தகுந்த உடைகளையும், காலணிகளையும் அவர் தேர்வு செய்தபோது நான்...
Recent Comments