எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.
இலக்கியப் பணிகள்
அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்
. கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது
நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இவரது நூல்கள்
புதினம்
- உண்மை கலந்த நாட்குறிப்புகள் – உயிர்மை பதிப்பகம் (2008)
- கடவுள் தொடங்கிய இடம்
சிறுகதை தொகுப்பு
- அக்கா (1964)
- திகடசக்கரம் (1995)
- வம்சவிருத்தி (1996)
- வடக்கு வீதி (1998)
- மகாராஜாவின் ரயில் வண்டி (2001)
- அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)
- ஒலிப்புத்தகம் – (சிறுகதைகள் தொகுப்பு – 2008)
- அமெரிக்கக்காரி (2009)
- Inauspicious Times – 2008 – (Short stories by Appadurai Muttulingam – translation by Padma Narayanan – available at Amazon.com)
- குதிரைக்காரன் – (2012)
- கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) – (2013) – காலச்சுவடு பதிப்பகம் – தொகுப்பு ஆசிரியர் க.மோகனரங்கன்
- பிள்ளை கடத்தல்காரன் (2015)
- ஆட்டுப்பால் புட்டு (2016)
- After Yesterday – Translated from Tamil – Short stories – 2017
- அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகம்- 2016
கட்டுரைத் தொகுப்பு
- அங்கே இப்ப என்ன நேரம்? (2005)
- பூமியின் பாதி வயது – உயிர்மை பதிப்பகம் (2007)
- கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு – 2006)
- வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) – காலச்சுவடு பதிப்பகம் (2006)
- அமெரிக்க உளவாளி – கிழக்கு பதிப்பகம் (2010)
- ஒன்றுக்கும் உதவாதவன் – உயிர்மை பதிப்பகம் (2011)
- தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை – நேர்காணல்கள் (2013)
- தோற்றவர் வரலாறு (2016)
- அ.முத்துலிங்கம் கட்டுரைகள் – முழுத்தொகுப்பு – இரண்டு பாகம்- 2018ல் வெளிவருகிறது
சிறுகதைகள் பட்டியல்
சிறுகதைகள் |
ஆண்டு |
அக்கா தொகுப்பு 1964 |
1. கடைசி கைங்கரியம் |
1958 |
2. ஊர்வலம் |
1958 |
3. கோடைமழை |
1959-1961 |
4. அழைப்பு |
1959-1961 |
5. ஒரு சிறுவனின் கதை |
1959-1961 |
6. அனுலா |
1959-1961 |
7. சங்கல்ப நிராகரணம் |
1959-1961 |
8. இருப்பிடம் |
1959-1961 |
9. பக்குவம் |
1959-1961 |
10. அக்கா |
1959-1961 |
திகடசக்கரம் தொகுப்பு 1995 |
11. பார்வதி |
1994 |
12. குங்கிலிய கலய நாயனார் |
1994 |
13. பெருச்சாளி |
1994 |
14. மாற்றமா?தடுமாற்றமா? |
1994 |
15. வையன்னா கானா |
1994 |
16. குதம்பேயின் தந்தம் |
1994 |
17. செல்லரம்மான் |
1994 |
18. திகடசக்கரம் |
1994 |
வம்சவிருத்தி தொகுப்பு 1996 |
19. துரி |
1995 |
20. ஒருசாதம் |
1995 |
21. கிரகணம் |
1995 |
22. விழுக்காடு |
1995 |
23. பீனிக்ஸ் பறவை |
1995 |
24. முழுவிலக்கு |
1995 |
25. முடிச்சு |
1995 |
26. ஞானம் |
1995 |
27. சிலம்பு செல்லப்பா |
1995 |
28. வம்சவிருத்தி |
1995 |
29. பருத்தி பூ |
1995 |
30. வடக்கு வீதி |
1996-1997 |
வடக்கு வீதி தொகுப்பு 1998 |
31. எலுமிச்சை |
1996-1997 |
32. குந்தியின் தந்திரம் |
1996-1997 |
33. வசியம் |
1996-1997 |
34. பூமாதேவி |
1996-1997 |
35. யதேச்சை |
1996-1997 |
36. கம்ப்யூட்டர் |
1996-1997 |
37. ரி |
1996-1997 |
38. உடும்பு |
1996-1997 |
39. மனுதர்மம் |
1996-1997 |
40. விசா |
1996-1997 |
41. ஒட்டகம் |
1996-1997 |
மகாராஜாவின் ரயில்வண்டி தொகுப்பு 2001 |
42. மகாராஜாவின் ரயில்வண்டி |
1999-2000 |
43. நாளை |
1999-2000 |
44. தொடக்கம் |
1999-2000 |
45. ஆயுள் |
1999-2000 |
46. விருந்தாளி |
1999-2000 |
47. மாற்று |
1999-2000 |
48. அம்மாவின் பாவாடை |
1999-2000 |
49. செங்கல் |
1999-2000 |
50. கடன் |
1999-2000 |
51. பூர்வீகம் |
1999-2000 |
52. கறுப்பு அணில் |
1999-2000 |
53. பட்டம் |
1999-2000 |
54. ஐவேசு |
1999-2000 |
55. எதிரி |
1999-2000 |
56. ஐந்தாவது கதிரை |
1999-2000 |
57. தில்லை அம்பல பிள்ளையார் கோயில் |
1999-2000 |
58. கல்லறை |
1999-2000 |
59. கொம்புளானா |
1999-2000 |
60. ராகு காலம் |
1999-2000 |
61. ஸ்ரோபரி ஜாம் போத்தலும் அபீஸீனியன் பூனையும் |
1999-2000 |
பிற |
62. 23 சதம் |
2001 |
63. மொசுமொசுவென்று சடை வைத்த வெள்ளை முடி ஆடுகள் |
2001 |
64. அடைப்புகள் |
2001 |
65. போரில் தோற்றுப்போன குதிரை வீரன் |
2001 |
66. தாத்தா விட்டுபோன தட்டச்சு மெசின் |
2002 |
67. ஆப்பிரிக்காவில் அரை நாள் |
2002 |
68. கொழுத்தாடு பிடிப்பேன் |
2002 |
69. அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை |
2003 |
70. முதல் விருந்து முதல் பூகம்பம் முதல் மனைவி |
2003 |
71. காபூல் திராட்சை |
2003 |
72. நாற்பது வருட தாபம் |
2003 |
73. பூமத்திய ரேகை |
2003 |
74. தளுக்கு |
2003 |
75. எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை |
2003 |
குதிரைக்காரன் தொகுப்பு |
2012 |
76. குதிரைக்காரன் |
2012 |
77.குற்றம் கழிக்க வேண்டும் |
2012 |
78.மெய்காப்பளன் |
2012 |
79.பாரம் |
2012 |
80.ஐந்து கால் மனிதன் |
2012 |
81.ஜகதலப்ரதாபன் |
2012 |
82.புளிக்கவைத்த அப்பம் |
2012 |
83.புது பெண்சாதி |
2012 |
84.22 வயது |
2012 |
85.எங்கள் வீட்டு நீதிவான் |
2012 |
86.தீர்வு |
2012 |
87.எல்லாம் வெல்லும் |
2012 |
88.மூளையால் யோசி |
2012 |
89.ஆச்சரியம் |
2012 |
90.கனகசுந்தரி |
2012 |
அமெரிக்ககாரி தொகுப்பு |
2009 |
பரிசுகளும், விருதுகளும்
- தினகரன் சிறுகதைப் போட்டி பரிசு – 1961
- கல்கி சிறுகதைப் போட்டி பரிசு
- திகடசக்கரம் – லில்லி தேவசிகாமணிப் பரிசு – 1995
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – தமிழ்நாடு அரசாங்கம் முதல் பரிசு – 1996
- வம்சவிருத்தி – சிறுகதைத் தொகுப்பு – இந்திய ஸ்டேட் வங்கி முதல் பரிசு – 1996
- ஜோதி விநாயகம் பரிசு – 1997
- வடக்கு வீதி – சிறுகதைத் தொகுப்பு – இலங்கை அரசு சாகித்தியப் பரிசு – 1999
- கனடா தமிழர் தகவல் – நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை விருது – பிப்ரவரி 2006
- திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது – 2012
- குதிரைக்காரன் – சிறுகதைத் தொகுப்பு – 2012ன் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விகடன் விருது[1]
- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராய விருது 2013
- மார்க்கம் நகரசபை இலக்கிய விருது – 2014
Latest stories
மங்களநாயகம் தம்பையா என்பது மிகவும் பரிச்சயமான பெயர். பல வருடங்களுக்கு முன்னரே இவர் எழுதிய ‘நொறுங்கிய இருதயம்’நாவல் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். ஓர் இலங்கைப் பெண் எழுதிய முதல் தமிழ் நாவல். இந்தியாவில் அ.மாதவையா ‘பத்மாவதி சரித்திரம்’ எழுதி 16 வருடங்களின் பின்னர் மங்களநாயகம் தன் நாவலை எழுதி வெளியிட்டார். இந்த நாவலை நான் பலமுறை படிக்கத் திட்டமிட்டு தோற்றிருந்தேன். இதை...
பெயர் சூட்ட வேண்டாம். அ.முத்துலிங்கம் 18 May 2011 President Amnesty International 1, Easton Street, London, WC1X0DW U.K மேன்மை தங்கிய ஐயா, என்னுடைய பெயர் விசாலாட்சி கனகரத்தினம். என் விலாசத்தை எழுத முடியாது ஏனென்றால் கடந்த ஐந்து வருடங்களில் நான் ஏழு தரம் இடம் மாறிவிட்டேன். நான் கடைசியாக தங்கிய இடம் முள்ளிவாய்க்கால். என் கணவர் குண்டு பட்டு இறந்த பிறகு நானும் மகனும் பிளாஸ்டிக் கூரை போட்ட ஒரு...
ஒரு சாது மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்ப்பதற்கு நாலு வேதங்களையும் கரைத்துக்குடித்த மகாபண்டிதரை சிலர் அழைத்து வந்திருந்தார்கள். பண்டிதருக்கு பன்னிரெண்டு மொழிகள் தெரியும். அவர் ஆடம்பரமாக ஆடையணிந்திருந்தார். சரிகைத் தலைப்பாவும் கைத்தடியுமாக இறுமாப்புடன் நின்றவரை கூட்டிவந்தவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். ‘இவர் சகலதும் அறிந்தவர். நிறையப் படித்தவர். உங்களைப் பார்க்க...
ஓம் கணபதி துணை. The Immigration Officer 200 St. Catherine Street, Ottawa, ON K2P 2K9. (Please translate Sri Lankan Tamil language) (இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் வசனங்களின் ஓடரை மாற்றாமலும், எனது கருத்துக்கள் சரியாக...
2010ம் ஆண்டு பிறந்த சில வாரங்களில் ரொறொன்ரோவில் எல்லோரும் பேசினார்கள், பனிக்காலம் முடிந்துவிட்டது என்று. பிறகு பார்த்தால் மறுபடியும் பனி பொழிந்தது. அது முடிந்த கையோடு வெய்யில் எறித்தது. சரி பனிப் பருவம் தாண்டிவிட்டது என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள். ஆனால் பனி போவதாக தெரியவில்லை. மறுபடியும் பெய்தது. காலநிலை அறிவிப்பாளரிடம் அது விளையாடிக்கொண்டிருந்தது. தொலைக்காட்சிப் பெண் நம்பிக்கையாகச்...
நான் நேற்று மாலை பொஸ்டன் வந்து சேர்ந்தேன். இன்று காலை பக்கத்து வீட்டில் ஆரவாரம் தொடங்கியது. அதற்கும் நான் வந்ததற்கும் ஒருவித சம்பந்தமும் இல்லையென நினைக்கிறேன். பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மருத்துவர். மருத்துவத் துறையில் அவருக்கு விருது ஒன்று கிடைத்திருந்தது. அவரைப் பாராட்டுவதற்கு ஆட்கள் காரில் வந்தனர்; போயினர். மருத்துவர், அவர் வீட்டுக்கு முன் இருந்த மரங்கள் நிழல்தரும் தோட்டத்தில், சாய்மணக்...
நாட்குறிப்பு எழுதும் பழக்கம் என்னிடம் இல்லை. என்றாலும் ஒவ்வொரு வருடம் பிறந்ததும் முதலில் வாங்குவது நாட்குறிப்பு புத்தகம்தான். அதில் முதல் மூன்று நாட்களும் தவறாமல் ஏதாவது எழுதிவைப்பேன். அத்துடன் அந்த வருடத்திற்கு எழுதியவை போதும் என்ற நினைப்பு வந்துவிடும். மீதி பக்கங்கள் எழுதாமல் வெறுமையாக இருக்கும். ஒருநாள் பழைய டயரிகளை எடுத்துப் புரட்டிக்கொண்டு வந்தபோது ஒரு கவிதை கண்ணில் பட்டது. நான் எழுதியது...
நீச்சல் தடாகத்தின் வரவேற்பறையில் காத்திருப்பது என்பது ஒருவருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விசயம். இதுபோல உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை. சூரியன் முழுப்பலத்துடன் செயல்பட்டான். காலை பத்து மணி இருக்கும். சூரியனின் கிரணங்கள் தடாகத்தில் பட்டு அதை வெள்ளித் தட்டாக மாற்றியிருந்தது. சிற்றலை எழும்பி அடிக்கும் ஒளி கண்ணைக் கூசவைத்தது. நிறையப் பெண்கள் வந்தார்கள். நிறையக் குழந்தைகள் குவிந்தார்கள். இளம்...
நான் அமர்ந்திருந்தேன். சுப்பர்மார்க்கெட்டின் வெளியே காணப்பட்ட பல இருக்கைகளில் ஒன்றில். அந்தப் பெண் வந்து பொத்தென்று பக்கத்து ஆசனத்தில் அமர்ந்தார். சீருடை அணிந்திருந்தார். கையிலே பேப்பர் குவளையில் கோப்பி. தான் செய்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு வந்திருந்தார். துப்புரவுப் பணிப்பெண் என்பது பார்த்தவுடன் தெரிந்தது. வயது 50 க்கு மேலே இருக்கும். கறுப்பு முடி, நீலக் கண்கள். வெண்மையான சருமம். கிழக்கு...
ஒவ்வொரு முறையும் பொஸ்டனுக்கு போகும்போது இப்படித்தான் ஏதாவது ஒன்று நடந்துவிடுகிறது. இம்முறை கம்புயூட்டர் பழுதாகிவிட்டது; ஆகவே எழுத முடியவில்லை. மின்பதில்கள் போட வேண்டிய அவசியமும் இல்லை. நல்லகாலமாக வாசிப்பதற்கு நிறைய புத்தகங்கள் இருந்தன. அவற்றை இரவு பகலாக தொடர்ந்து வாசித்தேன். அதனால் கண்களுக்கு நிறைய வேலை கொடுத்தேன் என நினைக்கிறேன். அதுதான் காரணமோ என்னவோ என் இடது கண்ணில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது...
Recent Comments